Aug 23, 2010

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

நமது நாட்டில் இன்னும் ஏழைகள் மற்றும்  ,நடுத்தரமக்களை ,வலிமையான தாதாக்கள்,அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்திடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பு IAS , IPS ,அதிகாரிகளுக்கு உண்டு.அதுஅவர்களின்தலையாயகடமையும்ஆகும்.ஆனால்இன்றுள்ள
அதிகாரிகள்பெரும்பாலானவர்கள்தங்களுடையபொறுப்பு,கடமை,
சமூகஅக்கறைபோன்றவைகளைநிறைவேற்றுகின்றார்களா என்றால் விடை என்னவோ இல்லை என்பது தான்.

ஆனால் ஒரு சில IAS ,IPS ,அதிகாரிகள் (அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு) தங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு,தாங்கள் எதற்கு இந்த பொறுப்புக்கு வந்தோம்?, தமது கடமை என்ன?  நீதி, நேர்மை,  ஈவு,இரக்கம், ஒழுக்கம்,பண்பாடு,சமூக அக்கறை, போன்ற உயர்ந்த பண்புகள் பட்டுப்போகாமல் உயிரோடு இருக்க  தமது அதிகாரத்தை பயன்படுத்தும்போது இந்தஅரசியல்வாதிகள்அவர்களை IAS என்றால்ஆவனகாப்பகம்,போக்குவரத்துகழகம்,சிறுசேமிப்புஎனமாற்றிவிட வேண்டியது. IPS அதிகாரி என்றால்ரிசர்வ்போலீஸ்,ரயில்வேபோலீஸ் ,சிறப்பு பாதுகாப்பு,எல்லை பாதுகாப்பு, போலீஸ் பயிற்சி பிரிவு   என பந்தாடி பொதுமக்களிடம் தொடர்புகொள்ள முடியாத துறைக்கு மாற்றிவிடுகிறார்கள். எங்கு இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதை நிருபிப்பவர்கள் .அப்படிப்பட்ட ஒரு மாணிக்கமான ஒரு  IPS அதிகாரி தான் திரு.பொன். மாணிக்கவேல்  டி.ஐ.ஜி. அவர்கள். 

இவர் எங்களது சேலம் மாவட்டத்தில் எஸ்.பி.ஆக இருந்த பொழுது கள்ளசாராயம் என்பதே இல்லாத மாவட்டமாக மாற்றியவர். ஏனெனில் நான்குபுறமும் மலைகள் சூழ்ந்த இங்கு சாராயத்தை ஒழிக்கமுடியாமல் இருந்த நிலைமையை தன் செயல்பாட்டால் கள்ளசாராயம் இல்லாத மாவட்டமாக மாற்றியவர்.சேலம் மாவட்ட காவல் துறையில் இவர் இருந்த பணிக்காலத்தில் லஞ்சம் இல்லாத காவல் துறை என மாற்றியவர். அப்படிபட்ட ஒரு நேர்மையான அதிகாரி நான்கு  வருடங்களுக்கு பின்பு திருச்சி சரக டி.ஐ.ஜி.பொறுப்புக்கு வந்துள்ளார். ஒரு அரசு  அதிகாரி தனது பணியால் எப்படி பொதுமக்கள் தோழனாக இருக்க வேண்டும் என்பதை நிருபித்த  இவரைப்பற்றி
                               
                                  இந்த வார ஜூ.வி. யில் வந்த கட்டுரை.

                              பொன்.மாணிக்கவேல்.I.P.S.

'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!' என்ற டயலாக் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்குப் பொருந்தும்!செங்கல்பட்டு, சேலம், கோவை ஏரியாக்களில் எஸ்.பி-யாக இருந்தபோது, இவரதுஅதிரடிகளுக்கு அளவே இல்லை. இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஓமலூர் டி.எஸ்.பி-யான ரத்னம், கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தலைமறைவாகக் கண்ணாமூச்சி காட்டிய கதையை ஜூ.வி. வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த மிரட்சி எல்லாம் போலீஸ் அதிகாரிகளுக்குத்தான்... நாதி இல்லாத பொது மக்களுக்கோ இவர் எப்போதுமே கைகொடுக்கும் செல்லம்!
பொன்.மாணிக்கவேல், இப்போது திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனால், கடந்த நான்கு ஆண்டு காலம் இவருக்கு வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுரை பட்டாலியன் கமாண்டன்ட், பழநி பட்டாலியன் கமாண் டன்ட், ரயில்வே டி.ஐ.ஜி. என மக்களோடு நேரடித் தொடர்பு இல்லாத இடங்களில் பணியாற்றி, மீண்டு(ம்) வந்திருக்கிறார்!
கீழ்மட்ட ஊழியர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறார். அலுவலகத்தில் பதவியேற்றதும், முதலில் அமைச்சுப் பணியாளர்களைப் பார்த்து நலம் விசாரித்தார். ''எல்லாரும் சாப்பிட்டாச்சா? நல்லா இருக்கீங்களா? ஆறு மணியாச்சுன்னா வீட்டுக்குப் போயிருங்க. குடும்பத்தை கவனிங்க. அதுக்கு மேல இருக்கிற வேலைகளை நான் பாத்துக்குறேன்'' என்றவர்... ஒரு பணியாளரைப் பார்த்து, ''சொந் தமா வீடு கட்டியாச்சா..?'' என்று கேட்க... ''இல்லைங்க...'' என்றார் அவர் தயக்கத்துடன். ''ஏன் கட்டலை... இத்தனை வருஷமா என்ன செஞ்சீங்க? சீக்கிரம் வீடு கட்டுங்க!'' என்று அக்கறையாக அட்வைஸ் கொடுத்துவிட்டு, தன் அறைக்குள் நுழைந்தார்.
தனக்குப் போடப்பட்டிருந்த குஷன் நாற்காலியைப் பார்த்ததும், ''இந்த ஸீட் எல்லாம் நிரந்தரம் இல்லை. முதலில் அதைத் தூக்குங்க. எனக்கு சாதாரண 'எஸ்' டைப் ஒயர் சேர் போதும்!'' என்று மாற்ற வைத்தார்.
பொதுவாக புதிய உயர் அதிகாரிகள் பொறுப் பேற்றதும், அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாகப் பார்க்க வருவது வழக்கம். பொன்.மாணிக்கவேலை அப்படி யாரும் பார்க்க வரவில்லை. ''எஸ்.பி., டி.எஸ்.பி-க்கள் யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது. நான் அந்தந்தப் பகுதிக்கு வரும்போது பார்த்துக்குறேன்!'' என்று உத்தரவு பறந்ததுதான் அதற்குக் காரணமாம்!தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களையும் மைக்கில் அழைத்தவர், ''கொலை வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க. தீவிரமாத் துப்பு துலக்கி உடனடியாக் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு, அரெஸ்ட் பண்ணுங்க. அதில் தாமதம் இருந்தா நான் பொறுத்துக்க மாட்டேன்!'' என்று உத்தரவு போட்டு இருக்கிறார்.
அடுத்த நாளே மணப்பாறை அருகே ஒரு கொலை வழக்கு... கல்லுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரை, முன்விரோதம் காரணமாக அவரது நண்பர் பாண்டியன் கொலை செய்துவிட்டார். உடனடியாக கைது நடவடிக்கையை முடுக்கிவிட்டவர், மணப்பாறை ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போனார். வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கொலைகாரனின் வாக்குமூலத்தை செல்வத்தின் மனைவி அன்னக்கிளிக்கு காண் பித்தவர், ''உன் புருஷனைக் கொன்னவனை அரெஸ்ட் பண்ணியாச்சு. கோர்ட்டில் கேஸ் போட்டுக் கடுமையான தண்டனை வாங்கித் தந்திடுவோம்மா...'' என்று ஆறுதல் சொன்னார்.

பின்னர், ''போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றவங்களை முதலில் உட்காரச் சொல்லுங்க. அதுக்காகக் கூடுதலா சேர்களை வாங்கிப் போடுங்க. குற்றவாளினு ஒருத்தரை விசாரிக்க கூப்பிட்டாக்கூட சேரில் உட்காரச் சொல்லி விசாரிங்க. அவங்களோட சட்டையைக் கழற்றச் சொல் லாதீங்க... கைது செய்யப்பட்டவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க அரசாங்கம் 35 ரூபா ஒதுக்குது. அதனால், அவங்களுக்கு முறையா சாப்பாடு வாங்கிக் கொடுங்க... புகார் கொடுக்க வர்றவங்க குடிக்க நல்ல தண்ணி வைங்க!'' என்று போலீஸ்காரர்களுக்கு அறிவுறுத்தியவர், அதையே அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உத்தரவாகப் போட்டுள்ளாராம். அதோடு, ''வயசான போலீஸ்காரங்களுக்கு கடினமான பணி கொடுக்க வேணாம். எழுத்து வேலைகள் மட்டும் கொடுங்க...'' என்றும் சொல்லி இருக்கிறார்.
இவரைப்போன்ற அதிகாரிகள் மாவட்டத்திற்கு சிலர் இருந்தால், தமிழ்நாடு எப்படி இருக்கும்.   ஹும் அப்துல் கலாம் கூறியபடி மக்களே கனவு காணுங்கள் அது தான் நம்மால் முடியும்.

No comments: