Sep 30, 2010

புதிய வழிபாட்டு தளங்கள் நம்மை ஒன்றிணைக்கட்டும்




இது ஒரு நல்ல தீர்ப்பு .பெரும்பான்மையான இந்தியர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு .நன்றி நீதிபதிகளே....தீர்ப்பின் படி, அயோத்தியில் உள்ள    சர்ச்சைக்குரிய நிலம், 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதி  ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பிடமும்,   ஒரு பகுதி பாபர் மசூதி வக்பு வாரியத்துக்கும், ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை அகற்றப்படாது என்றும், அங்கு தற்போதைய நிலையே மேலும் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர் 

நல்ல முடிவு.. ராமர் பிறந்த இடத்தில அவருக்கு கோவில் அமைக்கலாம்  அருகில் மசூதி  அமைக்கலாம் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை இருக்காது.புதிய வழிபாட்டு தளங்கள் நம்மை ஒன்றிணைக்கட்டும்நாம் எல்லோரும் மனிதர்கள். நாம் அனைவரும் இந்தியர்கள். அதன் பிறகு தான்   நான் ஹிந்து, நான் முஸ்லிம், நான் கிறிஸ்டியன்  என்ற நினைப்பு நமக்கு வரவேண்டும். இந்தியர்கள் என்ற நினைப்பு ஒன்றே போதும். மதத்தை விட மனித நேயம் தான் முக்கியம். கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக, கண்ணுக்கு தெரியும் என் சகோதரனை காயபடுத்த மாட்டோம் என நாம் அனைவரும் உறுதி கொள்வோம் ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்று. 

  எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும்  என்ற வேத வாக்கியத்தை மனதில் கொண்டும், ஆண்டவன் முன்னிலையில் நாம் அனைவரும் சமம் என்ற உண்மையை உணர்ந்தும்இதை இத்தோடு விட்டுவிட்டு முன்னேறுவோம், முன்னேற்றுவோம், வாழ்வோம், வாழவைப்போம். ஹிந்து முஸ்லீம் நட்பு மலரட்டும்!.

Sep 27, 2010

ராஜராஜன் 1000 கருணாநிதி அவமரியாதை



"நீர் உயர நெல் உயரும் நெல் உயர மக்கள் உயர்வார்கள் மக்கள் உயர மன்னன் உயர்வான்" என்ற பழமொழி இன்று   இந்த தி மு க ஆட்சியில் மக்கள் உயராமல், மன்னன் மட்டும் உயரும்  காலமாக தமிழகம் மாறிவிட்டது.
இந்த சூழலில் ராஜராஜன் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி அவர்கள் ,

தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன் என்று அறிவிப்பு செய்து பேசியுள்ளார்கருணாநிதி. ஒரு மாநில முதல்வர், மூத்த அரசியல் வாதி, இந்திய அரசியலுக்கே ஆலோசனை சொல்பவர், முத்தமிழ் வித்தகர்   என பல பெருமைகளை தாங்கியவர் இப்படியா பேசுவது .

உங்களுக்கு என்னையா ஆச்சு? செம்மை நெல் என்பது நெல் ரகம் அல்ல. அது நெல் சாகுபடி செய்யும் முறைக்குபெயர்தான் செம்மைநெல் சாகுபடியே  தவிர  அது ஒரு நெல்லின் பெயர் அல்ல என்பதே உண்மை ஆகும். 
இது கூட இந்த கரிகால் சோழ மன்னர் கலைஞர் கருணாநிதிக்கு  தெரிய வில்லையா?நெல் ரகத்திற்கு பெயர் வைத்தால் கூட பரவாஇல்லை. சாகுபடி முறைக்கா ஒரு புகழ் பெற்ற மாமன்னன் ராஜராஜன்  பெயரை சூட்டுவாங்க?. அதெல்லாம் கூட இருக்கட்டும், மக்களிடம் அதிகமாக சென்றடையும் ஜனரஞ்சகமாக இருக்கும் திட்டத்திற்கு எல்லாம் கலைஞர் கருணாநிதி என உங்கள் பெயர். பரிச்சயம் இல்லாத  மக்களுக்கு தெரியாத ஒரு சாகுபடி முறை  நெல் ரகத்திற்கு ராஜராஜன் பெயரா?. வாழ்க உங்கள் பழந் தமிழரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தமிழ்த்தொண்டு !!!



Sep 19, 2010

ஒவ்வொரு தமிழன் தலைக்கும் ரூ.10000 .00

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
 மருத்துவ சேவை என்பது அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக செய்ய வேண்டும்.என்பதே அனைவரின் எண்ணம் . தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
 பல தலைமுறைப் பணக்காரர்களாக, பட்டதாரிகளாக இருந்திருந்தாலும் இட ஒதுக்கீடு, வருமான வரம்பின்றி!
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
  வருமான வரம்பில்லாமல் எல்லோருக்கும் இலவச டிவி!
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
சினிமா துறை கலைஞர்களுக்கு 98 ஏக்கரில் வீடு கட்டி தருவது முழுவதும் இலவசம் !
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
தமிழக மக்களுக்கு இலவச காப்பீடு 2000 கோடியில்  இலவசம் !
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
3000 மதிப்பு உள்ள TV ய இலவசமா கொடுக்குற ர் ஆனால்  150 ரூபாய்க்கு பன்றிக் காய்ச்சலுக்கு
இலவசமா மருந்து கொடுக்க முடியாதா?
 இந்த இலவச ஊசியும் அந்த அம்மா  ஜெ.வின் கடுமையான கண்டன அறிக்கைக்கு பின்பே!
ஏழைக்கு மட்டும்  இலவசம்னு அறிக்கை விடுகிறார். பன்றிக் காய்ச்சல் ஏழை, பணக்காரன்னு பாத்துட்டு வராது.
   அனைவருக்கும் இலவசம் என கூற வேண்டியது தானே
யாரோ சொனார்கள் , குறை சொல்கிறார்கள் என்கிறார் . ஆனால் இவர் குறை சொன்ன  ஜெ- ன்
 வார்த்தைகளை  அல்லவா  உண்மை ஆக்கியிருக்கிறார் .
இது வரை இலவசமாய் ஊசி போடவில்லை என்பதே ஜெ - ன் குற்றசாட்டு .
அதை முதல்வர் மறுக்கவில்லை ; மறைக்க பார்க்கிறார் .
அதோடு , போன ஆட்சியில் என புள்ளிவிவரம் சொல்கிறார் .
  மகாபாரதத்தில் வரும் காந்தாரி, குழவிக் கல்லை எடுத்து வயிற்றிலே குத்திக் கொண்டதைப் போல சிலர், "தமிழகத்தில் சுகாதாரத் துறையே சரியில்லை' என அறிக்கை விடுத்துள்ளன என,கருணாநிதி கூறியுள்ளார்.
 அந்த காந்தாரியாவது குழவிக் கல்லை  எடுத்து தன் வயிற்றில் குத்திக்கொண்டாள், ஆனால் தாங்கள்(முக) குழவிக் கல்லை  எடுத்து தமிழ் நாட்டு மக்களின் வயிற்றில் அல்லவா அடித்துக்கொண்டிருக்கிறார்.
 இந்த DMK அரசு உலக வங்கியிலிருந்து இதுவரை வாங்கிய கடன் 1 லட்சம் கோடியை   தாண்டி விட்டது.
ஒவ்வொரு தமிழன் தலைக்கும்  ரூ.10000  கடன்காரன் ஆக்கி விட்டார்  இலவசத்தின் சிகரம் கருணாநிதி .
இதுக்கு பேர்தான் குழவிக் கல்லை எடுத்து தமிழ் நாட்டு மக்களின் வயிற்றில் சரியாய் குத்துவது என்பதா?.
எது அவசியம் எது அனாவசியம் எனக்கூட வரையறை செய்யத்தெரியாத தமிழக அரசு,அதன் தலைமை மு.க.