Aug 25, 2011

ராஜீவ் காந்திகொலை.அதிரவைக்கும் உண்மைகள்.தொடர்ச்சி.3 பழ. நெடுமாறன் பதில்.

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மரண தண்டனைக் கைதிகள் மூவருக்குநீதி வழங்க வேண்டும்என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள் என வரிசையாக உரிமை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கனவே, ராஜீவ்கொலை வழக்கில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்க...அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று 19 பேரை உயிருடன்மீட்டது, '26 தமிழர் உயிர் காப்புக் குழு.’ அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பழ. நெடுமாறனிடம் சில கேள்விகளைமுன்வைத்தோம்!

''இந்த விவகாரத்தில் நடந்தது, நடப்பது என்ன?''

''இந்த வழக்கை தடா நீதிமன்றத்தில் விசாரித்த முறையே அடிப்படையில் தவறானது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைவழக்குகளில்கூட, ரகசியமாக அல்ல, பகிரங்கமாகத்தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணை மூடுமந்திரத்தைப் போல பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. விசாரணையில் பத்திரிக்கையாளர், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை . 26 தமிழர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களும் மிரட்டப்பட்டனர்.

தடா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த நீதிபதி சித்திக்திடீரென மாற்றப்பட்டு, நவநீதம் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள், குறுக்கு விசாரைணைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓர் ஆண்டு காலத்திலேயே படித்தறிந்து, 26 பேருக்கு அவர் தூக்குத் தண்டனையை விதித்தார்.

இது மனித முயற்சிகளுக்குஅப்பாற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இதை விசாரித்து, 19பேரை விடுதலை செய்தனர். மூன்று நபர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. சிறந்த வழக்கறிஞர் என்.நடராஜன்மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். அப்படிச் செய்திருக்காவிட்டால், 26 தமிழர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

'ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது செல்லாது’என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதே தடாசட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்பைடயில், நான்கு பேரின்மரண தண்டைன உறுதி செய்யப்பட்டது முரண்பாடானது அல்லவா? உச்சநீதிமன்றத்தால் நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு,தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே, 'தமிழர் உயிர்காப்புக் குழுவின் சார்பில், சென்னை உயர்
நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்ப்பைப் பெற்றோம். 'தமிழக அமைச்சரைவயின் ஆலோசனையின்படிஆளுநர் முடிவெடுக்க முடியுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎன உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநேரா அல்லது குடியரசுத் தலைவரோ, கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நான்கு பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தைமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பெற்றுத்தந்தோம். ஆனால், அதை வைத்து அவர் எதுவுமே செய்யவில்லை.

'ராஜீவ் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளனஎன்று ஜெயின் கமிஷன் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்ற அமைப்ப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்னும் தன் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்பது முக்கியமானது. இப்போது, (நளினியின் தண்டனைஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது).

 மூன்று பேரின் மரண தண்டனை ஒருவேளை நிறைவேற்றப்படுமானால், அதன் பிறகு இந்தக் கண்காணிப்புக் குழு தரும் அறிக்கையில், வேறு சிலர்தான் உண்மைக் குற்றவாளிகள் என சுட்டிக்காட்டப்படுவார்கள். அப்போது, இழந்துபோன உயிர்களை மீட்க முடியுமா? அப்படி ஒரு நிலையை மனிதாபிமானம் உள்ள யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா?

எனவே,பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை மூன்று தமிழர்களின் மரண தண்டனையைநிறுத்திவைக்க வேண்டும்.''

''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். சி.பி.. ரகோத்தமனோ, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதற்கு வேறு காரணம் என்கிறாரே?''

''எதற்காக அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது? 'இந்தக் கொலையில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டு; அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்என்பதற்காகத்தானே இந்தக் கண்காணிப்புக்குழுவை அமைத்தார்கள்.அதை மறைத்தும் மழுப்பியும் பேசுகிறார் இந்த அதிகாரி!''

''மூவரின் உயிரைக் காக்க, சட்டரீதியான முயற்சிகள் என்ன? உங்கள் அடுத்தகட்டத் திட்டம்எது?'’

''மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனைநடத்தி வருகிறோம். சட்ட முயற்சிகள்பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க... மரண தண்டனையை  முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!''
நன்றி:ஜீ.வி.

No comments: