Sep 28, 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?


.தி.மு.க-  
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா நல்ல ஆட்சி கொடுக்க முனைப்பாக இருக்கிறார். நில அபகரிப்பில் நடவடிக்கை எடுத்தது பொது மக்களிடம் நல்ல பெயர் கொடுத்துள்ளது. இதுவரையில் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை, ஆளும் கட்சி என்பது அவர்களுக்கு ஒரு பிளஸ், ஜெயிப்பது உறுதி

தி.மு.
தன் தவறை இன்னும் உணரவில்லை, திரும்பவும் ஊழலை பெரிதாகவே செய்வார்கள் அவர்கள் பெரிய தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

தி மு க-
வைகோ ஈழ தமிழர்களுக்கு  ஆதரவு அளிப்பவர் அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை மனச்சாட்சியுடன் வாக்களித்தால் வைகோவின்
தி மு விற்கு வாக்களிக்க வேண்டும் தமிழக மக்கள் செய்வார்களா பார்ப்போம்

தே.மு.தி.க-
சினிமா நடிகர் கட்சி கருணாநிதியை திட்டி திட்டியே எதோ இவர் வந்து பெரிய புரட்சி பண்ணப்போகிறவர் மாதிரி பில்டப் பண்ணி, சினிமா வசனங்களை பேசி எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை வாங்கி விட்டார்!  சட்டசபைக்கே செல்லாமல் இந்த மகா நடிகர் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் பேசி தலையை சொரிந்துகொண்டிருக்கிறார்கள்!

 காங்கிரஸ்
கூட்டணி என்ற போர்வைக்குள்  இத்தனை நாட்களாக சுகமாக உறங்கிக்கொண்டிருந்தது! இனிமேல் இந்த தேர்தலுக்கு பின்னர் படுப்பதற்கே இடம் இருக்காது!

பா..., வி.சி. புதிய தமிழகம்-
நாங்களும் கச்சேரிக்கு போகிறோம் போன்ற கட்சிகள். ஜாதி கட்சிகள், பிரிவினைவாத கட்சிகள் அழிவது தமிழகத்திற்க்கு நல்லது.பெரிய அளவில் தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

Sep 17, 2011

கனிமொழி கேஸ்2G பற்றி கருணாநிதி என்ன நினைக்கிறார்?


கருணாநிதி இன்று விடுத்த அறிக்கையில்,

ஸ்பெக்ட்ரம் வழக்கு, அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறதுஎன்று குற்றம் சாட்டியுள்ளார். அதில் புதிதாக எதுவுமில்லை. ஆனால், அதன்பின் கருணாநிதி கூறியிருப்பவற்றில் இருந்த பல விஷயங்களை ஊகித்துக் கொள்ளலாம்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கைதாகியிருக்கும் பலருக்கு, விசாரணை ஏதுமில்லை. ஜாமினும் வழங்கப்பட இல்லை. இந்த வழக்கு நடக்கும் கோர்ட்டில், ஏதேதோ காரணங்களைக் கூறி, காலம் கடத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட பல ஏடுகள் கூட, ஜாமின் வழங்காமல் இருப்பதையும் கண்டித்து, கட்டுரை மற்றும் தலையங்கம் எழுதியுள்ளனஎன்கிறது கருணாநிதி அறிக்கை.

இதிலிருந்து புரிவது என்ன?

ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று கருணாநிதி சொல்லவில்லை. இந்த ஊழல்பற்றி கடும் விமர்சனங்களை வெளியிட்ட ஊடகங்கள், தவறாக விமர்சிக்கின்றன எனவும் கருணாநிதி சாடவில்லை.
மாறாக, அந்த ஊடகங்களே, ஜாமீன் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன என்று அவற்றை சப்போர்ட்டுக்கு இழுக்கிறார் கருணாநிதி. தர்க்க அடிப்படையில், குறிப்பிட்ட ஊடகங்கள் ஜாமீன்விஷயத்தில் கூறுவதை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறார் என்றால், ஊழல் பற்றிய அவர்களது விமர்சனங்களையும் கருணாநிதி ஏற்றுக் கொள்கிறார்.

அந்த விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

தி.மு.க.வினர் செய்த ஊழல்தான் இது என்கின்றன. இதில் கலைஞர் கருணாநிதி குடும்பத்துக்கு பெரிய பங்கு இருப்பதாகக் கூறுகின்றன.
கருணாநிதி அறிக்கையின் அடுத்த பகுதியைப் பாருங்கள்:
இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் சிறையிலே உள்ள பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில், ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், கனிமொழி, சரத்குமார் மீது, கலைஞர் டிவி சம்பந்தமான காசோலை கொடுக்கல், வாங்கல் என்ற நிலையில்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த இருவர் மீதும், நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை. இருப்பினும், 120 நாட்களாக விசாரணை இல்லாமல், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமின் வழங்குவது சம்பந்தமாக, இந்த வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என, கோர்ட் கூறியிருந்தது. ஆனால், டிராய் அறிக்கை அடிப்படையில், வழக்கு விசாரணையை கோர்ட் பதினைந்து நாட்கள் ஒத்தி வைத்துள்ளது

அறிக்கையின் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன தெரியுமா?

கனிமொழியை வெளியே கொண்டு வருவதற்காக, ஆ.ராசாவையும், மற்றையவர்களுக்கும், ஊழலில் ஏதோ தொடர்பு இருப்பதை ஒப்புக் கொள்கிறார் கருணாநிதி. கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக, மற்றையவர்களை கைகழுவி விடவும் தயாராகி விட்டார் கருணாநிதி.
இதை நன்றாகப் புரிந்துகொண்டு ஆ.ராசா, ‘வாயைத் திறந்தால்என்னாகும்? அதுகூட ஒரு ரிஸ்க் பாக்டர்தான்!

நன்றி:viruviruppu.com

Sep 9, 2011

கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழி.


ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம்

கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் கீழே கூறியுள்ள படி செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.


ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்.
                                          -ஸ்ரீந்ருஸிம்ம புராணம்

காலை மாலை இருவேளையும் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து  பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும்.பலன் நிச்சயம்.