Nov 3, 2011

கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்.

2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று தள்ளுபடி செய்தார்.

மேலும், கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 11-ம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்...

கனிமொழி, சரத்குமார் உள்பட 8 பேரின் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சைனி, அம்மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களையும் அடுக்கினார். அதன் விவரம்:


 இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

  சிபிஐ எதிர்ப்பு இல்லை என்பது சட்டத்தின் பார்வையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.


  ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டிய அளவுக்கு கரீம் மொரானியின் உடல்நிலை மிகுந்த மோசமில்லை.


  சமூகத்தில் மதிப்புமிக்க நிலையில் இருப்பதுடன், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார் கனிமொழி. எனவே, தாம் ஒரு பெண் என்பதால் சலுகை அளித்திட வேண்டும் என்ற நிலை அவருக்கு பொருந்தாது. அவர் எந்த விதத்தில் சிறுமைப்படுத்தப்படவில்லை.


 குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியம் தான். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமையும் அவற்றுக்கு சற்றும் குறைந்தது அல்ல.


இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி விளக்கம் அளித்தார்.

2 comments:

Henry J said...

i like நீதிபதி ஓ.பி.சைனி theerpu! nethi adi for Kani! ha ha ha


99 ரூபா பூஸ்டர் பேக் போடுங்க! 30 நாளைக்கு நான் ஸ்டாப் அ பேசுங்க!
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க

arasan said...

நீதி அனைவருக்கும் சமம் ,. தான் .. அது கனியாக இருந்தாலும் சரி காயாக இருந்தாலும் சரி