தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி கட்சியின் மிக முக்கியத்தலைவரின் தொலைக்காட்சியில் சோதனை என்பதை மனநிலை பாதிக்கப்பட்டவன் கூட நம்ப மறுப்பான் . எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போகிறான் என்று உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்லும் நடவடிக்கையே தவிர உண்மை வெளிவருமா. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா
சந்தேகம் தான்.
மு.க.(திமுக)நாடகம்
ஏனென்றால்அவரிடம்(மு.க) எந்த எதிர்வினையும் வெளிப்படவில்லை இதுதேர்தலுக்காக! நான்(சோனியா) அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் , நீ (மு.க.) அழுகின்ற மாதிரி அழு என்று மத்தியஅரசின் நாடக காட்சி நடக்கிறது.சி.பி.ஐ என்றுமே மத்திய அரசின் கைகூலி தான்,அது தன்னிச்சையாக,அதிகாரத்தை பயன்படுத்த துணியாது,இன்னமும் சிபிஐயின் மீது நம்பிக்கை வைத்துள்ள நம் தமிழர்கள் எவ்வளவு அப்பாவிகள் எனப் புரிகிறது. ஐயா அவ்வளவு சீக்கிரம் பழசையெல்லாம் மறந்துடாதீங்க. எல்லாம் ஒரு நாடகம் தான். நமக்குத்தான் சினிமா, ட்ராமான்னா உயிராச்சே. நடக்குறவரைக்கும் பாத்துட்டு கையத் தட்டிட்டு போய் கஞ்சிக்கு வழியப் பார்ப்போம். அவங்க வந்த வரை ஜமக்காளத்துல முடிஞ்சிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. சட்டத்தில் உள்ள எல்லா ஓட்டைகளும் கலைஞருக்கு அத்துபடி,கலைஞர் சாதாரண ஆள் இல்லை, அவர் ஒரு நடமாடும் ஊழல் மெகா பல்கலைக்கழகம். ஆனால் அவரின் வாரிசுகளுக்கு அறிவு கொஞ்சம் குறைவு தான். அவர்களுக்கு திருட தெரியுமே தவிர மு.க அளவுக்கு திறமையானவர்கள் இல்லை.
சோனியா(காங்)சதி
சோனியா(காங்)சதி
மேற்கண்ட கருத்துக்களைப் படிக்கும்போது, இத்தகைய நடவடிக்கைகள்,காங்கிரஸ் கட்சி,தி,மு,கவை பணிய வைக்கவே பயன்படுத்துகிறது,தமிழகத்தில் அதிக தொகுதிகளை பெறுவதற்கும்,தி.மு,க.வின் செல்வாக்கை குறைப்பதற்கே, சி.பி,ஐ.யை பயன்படுத்துகிறது. உண்மையில் ஸ்பெக்டரம் ஊழலுக்கு தி,மு,க மீது மட்டும் பழி சுமத்துவது மடமை,காங்கிரஸுக்கும் அதில் பெரும் பங்கு உள்ளது, உண்மையில்,ராசா குற்றவாளி என்றால்,காங்கிரஸ் இன்னும் ஏன் தி,மு.க.வுடன் கூட்டணி வைக்க முயல்கிறது, ஊழல் குற்றச்சாட்டில் உள்ள கட்சியுடன்,ஊழலை எதிர்ப்பதாக கூறும் காங்கிரஸ் ஏன் கூட்டணி வைத்துக் கொள்ளவேண்டு,எல்லாம் அரசியல், அதுவும் வட இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் மாநிலகட்சிகளின் வளர்ச்சியை விரும்புவதில்லை.
தமிழகத்தில் மீண்டும் அதிகாரத்தை பிடிக்க பார்(துடி)க்கிறது காங்கிரஸ். ஆனால் தமிழின விரோத போக்கு கொண்ட சோனியா காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கவேண்டும். இந்தமுறை தமிழக மக்கள் இவர்களை(காங்.திமுக.) நிச்சயம் புறக்கணிப்பார்கள்,
Tweet | |||||
4 comments:
கலக்கல் பதிவு..
nantri .....nantri
good !
தெளிவான பார்வை
Post a Comment