May 24, 2010

வி.பி.சிங் தன் அமைச்சரவையில் வை.கோ_வை மத்திய மந்திரி ஆக்குங்கள் என்று மு.க_விடம் வேண்டுகோள் வைத்தார் ஆனால் மு.க தன் மருமகன் மாறனை மந்திரியாக்கியவர்.., தனக்காக தன் கட்சியை பயன் கொடுத்தி கொள்ளாதவர் வை.கோ..


விவசாயி திம்மராயப்பா. 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் கிடையாது. ஆனாலும், தாழ்வு மனப்பான்மையை தன் நிழலருகில்கூட நெருங்கவிடாத அபூர்வப்


'உன்னாட்டம் பொம்பளை யாரடி... ஊரெல்லாம் உன் பேச்சுத்தானடி' என்று மீண்டும் ஊரெல்லாம் குஷ்பு! அறிவாலயத்தில் அத்தனை கேமராக்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது. குஷ்பு தி.மு.க-வில் இணைவதை 'நற்செய்தி' என்று வர்ணித்தார் கருணாநிதி. உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்ட குஷ்பு, சேர்ப்புக் கட்டணம் செலுத்த பணம் எடுத்து

சாதனையாளர்..ரேஸில் ஜெயிக்கும் குதிரையிடம் என்ன ஸ்பெஷல்? குதிரை ரேஸ் பற்றிக் கேள்விபட்டு இருப்பீர்கள்தானே! ஓவ்வொரு குதிரையின் மீதும், அது முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைக் கணித்துப் பந்தயம் கட்டு வார்கள். அதாவது 10-க்கு 1 (10-க்கு ஒருமுறை வெற்றியடையும்). மிகக் குறைந்த பந்தய அனுமானங்களைத் தாண்டியும் சில குதிரைகள் சமயங்களில் ஜெயிக்கும். இப்போது ஒரு கேள்வி,

                                                     

எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும்.

                               

May 21, 2010

தொழில்நுட்பம்..... தொழில்நுட்பம்

ஒரு கனவு கண்டால்அதை தினம் முயன்றால் ஒருநாள் நிஜமாகும் உனக்கு தெரிந்தது என்ன என்பதைத் தெறிந்து கொள்வதும், உனக்கு தெரியாதது என்ன என்பதை அறிந்து கொள்வதுமே வாழ்வின் உண்மையானத் தேடல்...

May 20, 2010

நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான

நம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள்

ஜால்ரா, விடுதலை சிறுத்தைகள்-கி.வீரமணி காம்பினேஷன்.

12 ஜோடிகளுக்கு திருமண விழா

May 17, 2010

இந்து மத விளக்கங்கள்

Articles in the இந்து மத விளக்கங்கள் Category

பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள் on 12 May 2010
Stats: பார்வை: 849 and 32 Comments இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்…. இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது… இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே…
அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in இந்து மத விளக்கங்கள், இலக்கியம் on 26 April 2010
Stats: பார்வை: 1,592 and 42 Comments மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட… திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்?
பண்டைக்குலமும் தொண்டக்குலமும்
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இந்து மத விளக்கங்கள், சைவம், வழிகாட்டிகள் on 15 April 2010
Stats: பார்வை: 889 and 29 Comments நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள்? சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார்… சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர்… யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்!
பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள் on 9 April 2010
Stats: பார்வை: 1,558 and 29 Comments எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.
பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 26 March 2010
Stats: பார்வை: 1,383 and 41 Comments ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.
பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 1 March 2010
Stats: பார்வை: 1,237 and 35 Comments இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.
உள்ளத்தே உள்ளதே உண்மை
By எஸ்.ராமன்
Posted in இந்து மத விளக்கங்கள், தத்துவம் on 18 February 2010
Stats: பார்வை: 649 and 10 Comments என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை… அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம்.
பக்தி ஓர் எளிய அறிமுகம் - 4
By சுஜாதா தேசிகன்
Posted in இந்து மத விளக்கங்கள், வைணவம் on 17 February 2010
Stats: பார்வை: 950 and 6 Comments பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
“தன்பெருமை தான் அறியான்”
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இந்து மத விளக்கங்கள், சைவம் on 12 February 2010
Stats: பார்வை: 1,251 and 92 Comments நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.
பக்தி ஓர் எளிய அறிமுகம் - 3
By சுஜாதா தேசிகன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 10 February 2010
Stats: பார்வை: 1,154 and 10 Comments பக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விட பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறோம்.
வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 5 February 2010
Stats: பார்வை: 3,780 and 374 Comments வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ…
கம்பன் கண்ட சிவராம தரிசனம்
By ஜடாயு
Posted in இந்து மத விளக்கங்கள், இலக்கியம், கம்பராமாயணம் on 28 January 2010
Stats: பார்வை: 1,757 and 85 Comments நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?
பக்தி - ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1
By சுஜாதா தேசிகன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 27 January 2010
Stats: பார்வை: 1,211 and 5 Comments அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்… பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.
அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 26 January 2010
Stats: பார்வை: 2,286 and 51 Comments நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.
அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இந்து மத விளக்கங்கள், சைவம் on 26 January 2010
Stats: பார்வை: 1,208 and 41 Comments திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.
அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை
By எஸ்.ராமன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 19 January 2010
Stats: பார்வை: 2,009 and 90 Comments அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத, பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்… மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?
Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” - பகுதி (3)
By ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், புத்தக விமர்சனம் on 24 November 2009
Stats: பார்வை: 914 and 7 Comments மது கைடபர்கள் வந்து தொல்லை கொடுக்கும் போதும் அறிதுயில் உணர ஹிந்து கற்றுக் கொண்டிருக்கின்றான். அவன் மீது வெறுப்பும், பகையும், அலட்சியமும், அழிநோக்கமுமாக, மாற்றார் பண்பாட்டுக் கடலைச் சிலுப்புவதில் எழுந்த விஷ்த்தையும் கழுத்தில் நிறுத்திக் கவனமும் நிதானமும் பேண ஹிந்து ஒருவனே கற்றிருக்கின்றான்… ஹிந்துவினுடைய சாஸ்திரங்களே அவனுடைய வேதாந்தமே விடாப்பிடியான அறிவு நெறிக் கோட்பாட்டுகளினால் ஆக்கப் பட்டவை என்று அவனுக்கு யாரேனும் கஷ்டப் பட்டுப் புரிய வைக்க வேண்டும். இல்லையேல் அறிவு நெறி என்பதெல்லாம் மேற்குலக மாயை என்று அவனை மயக்கி வழிதப்பச் செய்ய, அவனுக்குள்ளும் வெளியேயும் ஆள் இருக்கிறது.