Jul 31, 2010

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் சக்தியினை உருவாக்கி சாதனைகலைஞர் அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் , அரசின் சாதனைகளில் இதுவும் ஒரு மைல் கல். அய்யா பாமர நடுத்தர மக்களை பற்றி யாருமே சிந்திக்க மாட்டார்களா? விலைவாசி எதுவுமே ஏறவில்லை என்று கூறிவிட்டு அடுத்து மின்சாரத்தில் கை வைத்து விட்டீர்களே?.

புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது. புதிய மின் கட்டண  உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில்  மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது.புதிய மின் கட்டண விபரங்களை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி வீடுகளில் 600 யூனிட்டுகள் மேல் பயன்படுத்தும் போது ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 5.75 வசூலிக்கப்பட இருக்கிறது.தமிழக அரசு மக்களுக்கு கொடுக்கும் கரண்டு  ஷாக் இது 


அரசாங்க ஊழியன் முப்பது வயதில் ரூபாய் பத்தாயிரம் என்றால் 58 வயதில் 25000   சாதாரண நடுத்தர தனியார் பணிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து 10 வருடம் ஒரு நிறுவனத்தில் இருந்தாலும்  சம்பளத்தை இந்த அளவுக்கு உயர்த்தி தரமாட்டார்கள்மின் கட்டணம் உயர்வதால் பாமர மக்களும்,நடுத்தர மக்களும்,கிராம வாசிகளும,விவசாயிகளும் பாதிப்பார்கள்.பண முதலைகளுக்கு அந்த கவலை கிடையாது.பாதிப்பது நாம் மட்டும் தான்.இன்னும் என்ன பாக்கி உள்ளது விலை ஏற்றத்திற்கு அதையும் ஏற்றுங்கள் தமிழக அரசே.

ஒரு மாநில அரசு நிர்வாகம் எப்படி நடைபெற கூடாது என்பதை அறிய தமிழக அரசை காணவேண்டும். சீரான மின்சாரம் இல்லை காரணம் நிர்வாக சீர்கேடு. அதனால் மின்சாரம் இல்லை மின் உற்பத்தி அதிகரிக்கவோ மின்நிலையங்களை பாதுகாக்கவோ மின்சாரம் திருடபடுவதை தடுக்கவோ முனையாத அரசு மின் கட்டணத்தைஉயர்த்துவது அரசின் நிர்வாக் சீர்கேட்டை காட்டுகிறது.


அது சரி, மின்சாரத்துறைக்குன்னு ஒரு அமைச்சர் இருந்ததா ஞாபகம். ஏற்கனவே, ரெண்டு மணி நேரம் கட் ன்னு அறிவிப்பு,  உபரியாக  நாலு மணி நேரம் கட் என  6 மணிநேரம் மின்சாரகட் .  இப்போ இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு . மின்சார பிரச்னையை தீர்க்காமல் விலை ஏறுகிற அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும்தான் காணமுடியும் பாக்காத வேலைக்கு 40 % சம்பள உயர்வு கொடுக்கும்போது, உபயோகிக்காத மின்சாரத்துக்கு கட்டணம் அழும்போது, ஷாக் அடித்துவிட்டது மின்சாரத்தை தொட்டதால் அல்ல மின்கட்டணத்தை பார்த்ததால் என்று கவிதை எழுதியவர்களே இன்று மின்கட்டணத்தை உயர்த்தினால் இது நிர்வாக சீர்கேட்டையும் , அரசின் தவறான பொருளாதார கொள்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல்,டீஸல் விலையை உயர்த்தி மக்களை ஒரு வழி பண்ணிக்கொண்டு இருக்கு . என்னடா   தமிழ் நாடு அரசு  நம்ம மக்களை இன்னும் கொல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தேன். யோசித்து அந்த வேலையும் செய்துவிட்டார்கள்.பத்திரிக்கைகளில் வழக்கம் போல ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளாவில்  மின் கட்டணத்தை ஒப்பிடும் போது தமிழ் நாட்டில் கடுகளவுதான் ஏத்தியிருப்ப்பதாக  வியாக்கியானம் ,உதாரணம்  கூறி  உளறுவார். இந்த அரசு நடுத்தர மக்களை குறிவைத்தே இன்றைக்கு  இரு மடங்கு விலையை உயர்த்தி தமிழக மக்களை அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் சக்தியினை உருவாக்கி சாதனை புரிந்த கலைஞருக்கு பாராட்டுக்கள்.

Jul 28, 2010

தவறு என்றால் திருத்திக் கொள்வேன் கருணாநிதி பேச்சு
என்னை குறை கூறியும், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினால் கூட, இது உண்மையா என ஆராய்ந்து தவறு என்றால் திருத்திக் கொள்பவன் தான் இந்த கருணாநிதி,'' நான் யாரிடத்திலும் மன வருத்தப்படுபவன் அல்ல. என்னை குறை கூறியும், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினால் கூட, இது உண்மையா என ஆராய்ந்து தவறு என்றால் திருத்திக்கொள்பவன் தான் இந்த கருணாநிதி என்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்..

               எந்த தவறை சுட்டி காட்டுவது? 


நீங்கள் செய்யும் அனைத்துமே தவறு தான், இருந்தாலும் ஒரு சிலவற்றை சுட்டி காட்டுகிறேன்,உங்களிடமும் , ஆட்சியிலும் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒய்வு பெறவேண்டிய வயதில் வழி விடாமல் இருப்பது தவறு
லஞ்சம் வாங்குவது ஊழல் செய்வது தவறு
 தன் குடும்பத்தார்களை முன்னிறுத்தி அதன் மூலம் பயன்பெறுவது தவறு ,
தனது பிள்ளைகளுக்கு கட்சியில், ஆட்சியில் பதவி அளிப்பது  தவறு


குடும்ப அரசியல் தவறு, அதை நிறுத்துங்கள்,
  இலவசம் தவறு அதை நிறுத்துங்கள்
கள்ள வோட்டு போடுவது மிகவும் தவறு,
வோட்டுக்கு பணம் கொடுப்பது தவறு,
 வாய் சவடால் மிக பெரிய தவறு, அதை  நிறுத்துங்கள்.
மக்கள் வரி பணத்தை வீண் அடிப்பது தவறு,
 ஸ்பெக்ட்ரம் ஊழல் மிக பெரிய தவறு,
 அதிகாரி உமாசங்கரை  பழி வாங்கும்  நடவடிக்கை  பெரிய தவறு,
 தமிழ் என்ற போர்வையில் நீங்கள் அடிக்கும் கூத்து மிக பெரிய தவறு,
 நீங்கள் வைத்துள்ள சட்ட விரோதமான சொத்துக்கள்  தவறு


இதையெல்லாம் விட பொய் கூறுகிறீர்களே, அதுவும் தவறு தான், ,
பேய், பூதம், பிசாசு,  இதன் மொத்த உருவமே  வாயை மூடு. என்று பேசியது  தவறு
வைரம் பட நாயகியே உனக்கு இறுதி எச்சரிக்கை என்று பேசியது  தவறு
இந்துக்களை திருடர்கள் என்று அர்த்தப்படுத்தி பேசியது  தவறு .
 ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஜில் படித்து ராமர் பாலத்தை கட்டினார் என்று பேசியது  தவறு .
 இப்படி பேசியது  யாருடைய மனதையும் புண்படுத்தாது என்று நினைத்ததும்,  பேசியதும்   தவறு. 

தமிழ்நாட்டில் எந்த ஒரு தலைவரையும் நீங்கள் விட்டுவைக்கவில்லை, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, கீ.வீரமணி,சங்கரையா, தா.பாண்டியன், வரதராஜன், நல்லகண்ணு,இப்படி உங்களால் புண்பட்டவர்களை கேட்டுப்பார்த்தால் தான் உங்கள் லட்சணம் என்னவென்று தெரியும். 

 மற்ற மதத்தினருக்கு அவர்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து   சொன்னதுண்டா?இதுதான் உமது கொள்கை இது மிகவும் தவறு,
ஒரு மாநிலத்தின்  முதல்வர்  பேசும்  பேச்சா இதெல்லாம்?
எந்த தவறை  நீங்கள் திருத்திகொண்டீர்கள் என்று  எங்களால் புரிந்து  கொள்ள முடியவில்லை ?  
நிஜமாகவே திருந்தத் தயாராக இருந்தால், பெரிய மனத்துடன் திருத்திக் கொள்வீர்களா?

Jul 27, 2010

கருணை உள்ளம் கொண்ட நல் இதயங்களே :


கருணை  உள்ளம்  கொண்ட  நல் இதயங்களே :
இந்த மாணவிக்கு உதவி செய்யுங்கள்
 phone : 99439 - 31099 .
இடுப்பு வலிக்கு தவறான அறுவை சிகிச்சை :
 படுத்த படுக்கையாக மாணவி வித்யா.B Sc . 

இன்றைய  தினமலர் நாளிதழில் வந்த ஒரு பரிதாபமான செய்தி :
தர்மபுரி கோட்டை காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுகுமார். இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு விக்னேஷ், வினோத் என்ற மகனும், வித்யா (23) என்ற மகளும் உள்ளனர்.வித்யா தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். பத்து மாதங்களுக்கு முன் வித்யாவுக்கு இடுப்பு வலி ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை செய்த பின் வித்யாவால், எழுந்து நடக்க முடியவில்லை. மூன்று மாதங்கள் வரை அங்கு சிகிச்சை பெற்றும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் அவரது பெற்றோர் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர்  உயிர் காக்கும் உயர் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, வித்யா நேற்று (ஜூலை 26) தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொறுப்பு) மகேஸ்வரியிடம் மனு கொடுத்தார்..


பத்து மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள வித்யாவால் எழுந்து நடக்க முடியாத நிலையும், உணவு முதல் அனைத்தும் படுக்கையில் வழங்க வேண்டி இருப்பதோடு, அவருக்கு துணையாக அவரது தாய் கூடவே இருக்கும் நிலையுள்ளது.இவரது தந்தை சுகுமாருக்கும் உடல் நிலை சரியில்லாததால், தொடர்ந்து வித்யாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.வித்யா விளையாட்டு வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள வித்யா, தொடர்ந்து எம்.எஸ்.சி., படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். தவறான அறுவை சிகிச்சையால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, அவரது குடும்பத்தினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வித்யா தன்  அம்மா உடன்

இது குறித்து வித்யா  கூறியதாவது:கடந்த அக்டோபர் 9ம் தேதி மதுரையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் எழுந்து நடக்க முடியாமல் போனது குறித்து அங்கிருந்த டாக்டர்கள் கூறும் போது, இது போன்று பல ஆபரேஷன் செய்யப்படுகிறது. அதில், இது போன்று ஒன்று, இரண்டு நடக்கலாம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி விட்டனர்.மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கோவை, சென்னை ஆகிய இடங்களில் பரிசோதனை செய்த போது, எழுந்து நடக்க முடியாமல் போனால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியிருக்கலாம். தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் மாற்று அறுவை சிகிச்சை செய்தால், படுத்த படுக்கையில் இருந்து எழுந்து நடக்க, உட்கார வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினர்.


அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் செலவாகும் என்பதால், மருத்துவ சிகிச்சை செய்ய முடியாத நிலையில் பத்து மாதங்களாக அவதிப்பட்டு வருகிறேன். இது போன்ற செய்தி வந்தால், டாக்டர்கள் அஜாக்கிரதையாக ஆபரேஷன் செய்ய மாட்டார்கள் என்பதால், என் நிலையைக் கூறினேன். எனக்கு மருத்துவ உதவிகள் வழங்க சேவை உள்ளமுள்ளவர்கள் முன் வந்தால் ஏற்க தயாராக உள்ளேன்.இவ்வாறு வித்யா கூறினார்.வித்யாவின் மருத்துவ உதவிக்கு முன் வருவோர் 99439 - 31099 என்ற மொபைல்போன் எண்ணில் அவரை தொடர்பு கொண்டு உதவலாம்.
நன்றி :தினமலர் .27 .07 .2010 .

Jul 23, 2010

இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

 இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.,  ஜெ.ஜெயலலிதா கருணாநிதி, ஒரு ஒப்பீடு 
                                                              
கருணாநிதி அறிக்கை: 
கடந்த 1996ம் ஆண்டு  தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு,  இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு, "அந்தந்த மாநிலங்களின் நிலைகளுக்கேற்ப இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்து கொள்கிற அதிகாரம், மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற முறையில், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட ஓட்டு தேவை. இப்போது அது முடியுமா என்பது பிரச்னையாக இருக்கிறது. இருந்தாலும், முயற்சியிலே இந்த அரசு ஈடுபடும்' என பதில் அளித்தேன். 
                                              
**மத்திய  அரசில்  பதவி  என்றால்  முடியும்  மக்களின் பிரச்னை  என்றால்  அது  உங்களால்  முடியாது   தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவதில் உமக்கு நிகர் நீர்தான்  உம்மை மிஞ்ச ஆள் இல்லை.**


இந்த விவாதத்துக்குப் பின், 1997ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, அன்றைய பிரதமர் தேவகவுடாவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தேன். தமிழக முதல்வர் பொறுப்பில் 2006ம் ஆண்டு ஐந்தாவது முறையாக அமர்ந்த நான், 

**இதற்கு  இன்னொரு பாராட்டு விழா எடுத்து  விடலாம்  யார் காசில் 7 கோடி முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரி பணத்தில்தான். 250 கோடி செலவில் ஒரு மாநாடு.** 

அந்த ஆண்டு அக்டோபர் இறுதியில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். இதற்கு முன், சோனியாவுக்கு இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து ஐந்து பக்கங்கள் கொண்ட விவரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். 

**எல்லாம் நம் விதி ஐந்து பக்க கடிதம் போதுமா குறைந்தது ஒரு இருபது பக்கமாவது வேண்டாமா? அப்படியே தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவதில் உமக்கு நிகர் நீர்தான்,உம்மை மிஞ்ச ஆள் இல்லை**
 
பின்னர், நான் அனைத்து முதல்வர்களுக்கும் எழுதிய போது, இந்த கடிதத்தையும் இணைத்து அனுப்பினேன்.

**பதவி வாங்க காற்றாக பறந்து டெல்லிக்கு சென்றுபதவி வாங்குவது, மக்களுக்காக கடிதம் மட்டும் எழுதி பொறுப்பை தட்டிகழிப்பது..,**

இன்னும் சொல்லப்போனால், தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இட ஒதுக்கீடு குறித்தும்,  

**தேர்தல் அறிக்கையில்  போட்டால் கோர்ட் தீர்ப்பு குடுத்துவிடுமா ? மனசாட்சி என்பதே இல்லை உமக்கு. **
  
சமூக நீதி பற்றியும் நான் சொல்லாமல் விட்டதே கிடையாது
 
**உயிரே போனாலும் பரவாயில்லை உண்மையை மட்டும் பேசமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ள ஒருவரை முதல்வராக ஏற்றுகொண்ட நம்மை போல அதிர்ஷ்டசாலிகள் உலகில் வேறு எங்கும் இல்லை**. 

 இவ்வாறு தொடர்ந்து 1920ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக, இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததன் பயனாகத்தான்,
 
**என்னது இவர் 1920 ம் வருடத்தில் இருந்து குரல் கொடுத்தாரா?  இவரு வயசு என்ன. அப்படின்னா இவரு பிறக்கறதுக்கு முன்னாடியே இருந்து குரல் குடுத்துட்டு வர்றாரா? இது சரியான காமடியா இல்ல இருக்கு. இவர் சொல்றத எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நெனச்சிட்டாரா?**
 
கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு, நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலைவனத்தில் குடிநீர் கிடைக்காமல், சென்று கொண்டிருந்தவர்களுக்கு, வழியிலே ஒரு சிறிய நீரூற்று தென்பட்டதைப் போல, தமிழக மக்களுக்கு அமைந்துள்ளது. 

**ஜெயலலிதா தான் இந்த சட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்தார்**

 எத்தனையோ ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்னைக்காக உண்மையிலேயே பாடுபட்டு வரும் நமக்கு, தேன் துளிகள் தேனருவியாகப் பெருக வேண்டுமென்ற ஆவல் ததும்புவதில் வியப்பில்லை. 

**ஜெயலலிதா ஆட்சியில் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தார், ஜெயலலிதாவால் தான் இந்த தீர்ப்பு வந்தது **
  
இந்த வெற்றியில் நாம் உரிமை கொண்டாடுவதற்கு, கோர்ட்களில் நாம் நடத்தி வந்துள்ள சட்ட ரீதியான சமூக நீதி போராட்டங்களும், மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் பெரும் காரணங்கள்.

**கருணாநிதிக்கு பொய் பேசுவதை தவிர வேறு எதுவும் தெரியாது .எம் ஜி ஆர்,கொடுத்த 69 %,இட ஒதுகிட்டிற்கு,ஜெ ஜெ,தமிழக சட்ட சபை மூலம் 1992 ல்,சட்டம் நிறைவேற்றி,நரசிம்ம ராவ் மூலம்,இரண்டு பாராளுமன்ற சபைகளையும் கூட்டி,அரசியல் சட்டத்தின்   9 ம்   பிரிவில் பாதுகாப்பாக வைத்தார். அரசியல் சட்டத்தின்   9 ம் பிரிவு சட்டங்களை,கோர்ட் ஆய்வு செய்ய முடியாது. அதனால் சுப்ரீம் கோர்ட்டால் ஒன்றும் செய்ய முடிய வில்லை .  ஜெயலலிதாவை பாராட்டிவிழாஎடுக்கபோகிறார்கள் என்பதற்காக இந்த அறிக்கை பொய்யை கூறியுள்ளார்**

ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சமூக நீதியைப் பலமாக பாதுகாத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோரான வன்னியர்களும், சீர்மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டு, 20 சதவீதம் பயன் பெற முடிந்தது.சமூக நீதியில் இந்த இயக்கத்துக்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகள்.  

**சுயநலத்திற்காக பல முன்னேறிய சமூகங்களை பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தும், தன சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தும், உண்மையிலேயே பின்தங்கிய சமூகங்களுக்கு எந்தப் பலனும் இல்லாமல் அடித்துவிட்டு, தற்புகழ்ச்சி வேறு** 

அதனால் தான், சமீபத்தில் வந்துள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேன் துளிகளாகவும், இது தேனருவியாக மாறும் அளவுக்கு சமூக நீதிப் பயணத்தில் முழுமையான வெற்றியைப் பெற விரும்புகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

**ஜெயலலிதாவை பாராட்டி விழா எடுக்கபோகிறார்கள் என்பதற்காக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததில் இருந்து, மு க,வாயிலும் வயிற்றிலும்,அடித்தக் கொள்கிறார்**..

Jul 21, 2010

ஜெயலலிதா அறிக்கை


            அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை
                                சென்னை, ஜூலை 21, 2010
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை முன் நிறுத்தி, திருச்சியில் தனது தலைமையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "நீரின்றி, மின்சாரமின்றி வேளாண் தொழிலை செய்ய முடியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் மீனவர்கள் மிரண்டு போய் இருக்கின்றார்கள். தொழில்கள் நொடிந்து போய்விட்டன. விலைவாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனின் பிடியில் அனைத்துத்தரப்பு மக்களும் சிக்கித் தவிக்கின்றார்கள். மொத்தத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடையாமல் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது தான் இன்றைய தமிழகத்தின் அவல நிலைமை.

தமிழக அரசின் புள்ளி விவரப்படிகுறுவை சாகுபடியை மட்டும் எடுத்துக்கொண்டால், 2005-06 ஆம் ஆண்டு 3,21,865 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 10,61,401 டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது நடப்பு ஆண்டில் வெறும் 53,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது அதுவும் டெல்டா பகுதிகளில் வெறும் 14,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது சென்ற ஆண்டு 56,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இதற்குக் காரணம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாதது தான்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி. தண்ணீரையும் கர்நாடக மாநிலம் தமிழகத்திற்குத்தர வேண்டும். ஆனால் ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடக அரசு நமக்கு இது வரை தரவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவும், இந்தத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் தி.மு.க. அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் காவிரி ஆற்றுத்தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்ட பயிர்கள் வாடிப்போகின்ற நிலையில் உள்ளன. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டு, உணவு பஞ்சம் ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளின் நிலைமையும் இதே போல் தான் இருக்கிறது. தி.மு.க-வினரால் வரம்பு மீறி மணல் கொள்ளை அடிக்கப்படுவதன் காரணமாக, தமிழகமே வறண்ட பாலை வனமாக ஆகும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து போயுள்ளது.

மேலும், மணல் கொள்ளை காரணமாக ஆறுகளின் தரைமட்டம் கீழே இறங்கியுள்ளதால், தண்ணீர் வரும் போதும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. கடுமையான மின்வெட்டு காரணமாக மோட்டார் பம்புகளை பயன்படுத்தி நிலத்தடி நீரின் மூலமும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், மின் மோட்டார்கள் பழுதடைந்து விடுகின்றன. விவசாயிகள் இரட்டிப்பு துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், விவசாயத்திற்குத் தேவையான பயிர்க் கடன்கள் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து வெளிச்சந்தைகளில் வாங்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உர மானியத்தை மத்திய அரசு குறைத்த போது, அதைத்தட்டிக் கேட்கவில்லை விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு அறவே இல்லை.

விவசாயிகளின் நிலைமை இப்படியென்றால், மீனவர்களின் நிலைமை இதைவிட கொடுமை. கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட துன்புறுத்தல் இன்னமும் தீரவில்லை.

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மீன்பிடி தொழிலையே விட்டுவிடக் கூடிய அவல நிலைக்கு தமிழக மீனவர்கள் ஆளாக்கப்பட்டு உள்ளார்கள்.

இது போதாது என்று, கடலில் 12 கடல் மைல் தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடித்தல் கூடாது; அப்படி பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம், மூன்று மாத சிறைத்தண்டனை போன்ற பல்வேறு ஷரத்துகளைக் கொண்ட கடல் மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வடிவு வேறு தமிழக மீனவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இதுவும் போதாது என்று, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.


விலைவாசி விஷம் போல் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கின்ற, மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்ற, மணல் கொள்ளையை ஊக்குவித்துக்கொண்டிருக்கின்ற, விலை வாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனிடம் மக்களை சிக்க வைத்துள்ள தி.மு.க. அரசைக்கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் 24.8.2010 செவ்வாய்க்கிழமை அன்று, நண்பகல் 12 மணி அளவில், திருச்சி மாநகரில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Jul 19, 2010

பெட்ரோல் விலை லிட்டர் அசல்16.50.. வரி 38.50

சமிபத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களின் வயத்தெரிச்சலை கட்டிக்கொண்டது மத்தியஅரசு .பெட்ரோலிய பொருட்களின் விலையை எப்போது ஏற்றினாலும் சர்வதேச சந்தையில் விலை ஏறி  விட்டது என்பது தான் வழக்கமான பதில் .ONGC, மூலம் நம் நாட்டிலேயே  25%சதம் சுயமாக கிடைக்கிறது .மீதிதேவையான 75 % மட்டுமே சர்வேதேச சந்தையில் இறக்குமதி செய்கிறோம் . அப்படிஇறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலை16.50 ரூபாய் மட்டுமே


ஆனால் மத்தியஅரசு வரியாக லிட்டருக்கு11.80 ரூபாயும்,மத்திய கலால்வரியாக9.75 ரூபாயும் ஆகமொத்தம் ரூபாய் 21.55வரியாக மத்தியஅரசு வசூலிக்கிறது. மாநிலஅரசு விற்பனை வரியாக8.00ரூபாயும், வாட் செஸ் வரியாக4.00 ரூபாயும் ஆகமொத்தம்12.00 ரூபாயும் வரியாக சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு50.05ரூபாய் ஆகிறது. சமிபத்தில் மேலும் 3.00ரூபாய் அதிகரித்து வரியுடன் 55.00ரூபாயில் விற்கிறது . இதில் வேடிக்கை என்னவென்றால் நம் தமிழக அரசின் விற்பனைவரி மட்டும்{30%} சதவிதம் வசூலிக்க படுகிறது.30%விற்பனைவரி என்பது மிக மிக அதிகம்.


இதில் வேடிக்கை என்னவென்றால் நம் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டர் பாக்கிஸ்தான்26.00 . வங்கதேசம் 22.00. நேப்பாளம் 34.00.பர்மா 30.00. ஆப்கனிஸ்தான்36.00.  கத்தார் 30.00.  ஆனால்இந்தியாவில் 55.00ரூபாய்.


இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் பிழைப்பில் மிக பெரிய சங்கடத்தையும் சுமையும் உருவாகியுள்ளது . கசக்கிபிழியும்இந்த விலையேற்றம் பணவீக்கத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது . எனவே மத்தியஅரசு கலால் வரியை குறைக்கவேண்டும் .  மாநிலஅரசுவிற்பனை வரியை குறைக்கவேண்டும் .

Jul 13, 2010

தமிழ் எனக்கு பண்பாட்டைகற்றுக் கொடுத்துள்ளது,கருணாநிதி.

சென்னை: ஜூலை 12,2010,எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,'' என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன்.  இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

கலைஞரின்தமிழ்பண்பாடுசிலகேள்விகள்???


காமராஜரை கேவலமா பேச தமிழா  சொல்லி குடுத்துச்சு 
அந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்ததும் தமிழ்தானே?... ?

ஹிந்து என்றால் திருடன் என்று பேசிய  தமிழ் பண்பாடு  எங்கே கற்றது...
 

  M.G.R பற்றி மலையாளி என்று கூப்பிடத் தூண்டியது? இவரது தமிழ் பண்பாடு.அந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்ததும் தமிழ்தானே?...
 


 உ வே சுவாமிநாத ஐயர் மற்றும் பாரதியின் தமிழ்த்தொண்டினைப் பற்றி பேசாத இவரது தமிழ் பண்பாடு
 

  
தமிழ் பண்பாடு பற்றிபேசும் இவர் பார்பனர்களைப் பற்றியும்,
இந்து மதத்தைப் பற்றியும் எவ்வளவு தரக்குறைவாகப் பேசியிருப்பார்?
 


 செல்வி ஜெயலலிதாவைப் பற்றி அசிங்கமாக எழுதியது அசிங்கமாக பேசியது எல்லாம் தமிழ் பண்பாடா?
.


கல்யாண வீட்டில் அரசியல் பேசும்போது தமிழ் இவருக்கு பண்பாட்டை கத்துதரவில்லையா?
  


தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபொழுது தமிழர்கள் சோத்தால் அடித்த பிண்டங்கள் எனபேசியது எல்லாம் தமிழ் பண்பாடா?
 
 

வயதுக்கு பொருத்தமிலாத விமர்சனங்கள், பழிவாங்கும் குணம் எல்லாம் தமிழ் பண்பாடா?
 

  மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் இலவச பணம் மற்றும் பொருள் விநியோகம், எல்லாம் தமிழ் பண்பாடா?

அரசு கஜானாவை காலிஆகிவிட்டு கடன்  வாங்கும் குணம் எல்லாம் தமிழ் பண்பாடா? 

வயதானாலும் பதவி ஆசையை விடாத குணம், இதெல்லாம் தமிழ் பண்பாடா?.
.கலைஞரே ! தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது  அப்படினு சொல்லி தமிழை கேவலப்டுத்தாதீர்கள்.

Jul 11, 2010

அப்துல் கலாமின் ஆசை


கிராமங்களில் தரமான சிகிச்சை: இளம் மருத்துவர்களுக்கு கலாம் அறிவுரைசென்னை, ஜுலை 11, 2010
கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்று இளம் மருத்துவர்களை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்புவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் சனிக்கிழமை நடந்தது.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் அப்துல் கலாம் பேசுகையில், "தற்போது அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரே மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால்தான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அவ்வாறு ஒரே மருத்துவ முறையை பின்பற்றுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு நோயாளிக்கு எந்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால் அந்த நோயை முற்றிலும் குணமாக்க முடியும் என்பதை ஆராய வேண்டும்.


இந்த ஆய்வை மேற்கொள்ள வெவ்வேறு மருத்துவ முறைகளை கையாளும் மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கலாம்.
எஸ்.எல்.வி-3 ராக்கெட்டை விண்ணில் ஏவியபோது நானும், எனது குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தோம். அதன்பிறகு அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்திய போதும், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோதும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட எனக்கு பேரானந்தம், ஆத்ம திருப்தி தரக்கூடியது ஊனமுற்ற குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்து கொடுத்ததுதானமுன்பு 4 கிலோ எடை கொண்ட செயற்கை கால்களைத்தான் ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்தி வந்தனர். அவற்றை மாட்டிக்கொண்டு அவர்கள் நடந்து செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். துயரமான அந்த காட்சியை நானே ஐதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன்.

4 கிலோவுக்கு பதிலாக நாங்கள் வெறும் 400 கிராம் எடையில் செயற்கை கால்களை தயாரித்துக்கொடுத்தோம். அந்த சாதனைதான் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய சாதனை.
இளம் மருத்துவர்களாகிய நீங்கள், இந்த சமுதாயத்திற்கு தொண்டாற்றிய மருத்துவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சேவை செய்திட வேண்டும். ஏழைகளுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்," என்றார் அப்துல் கலாம்.

Jul 9, 2010

மீனவர் படுகொலைகருணாநிதி அறிக்கை

முதல்வர் கருணாநிதி அறிக்கை: நாகை மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால், செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாகவும் செய்தி வந்துள்ளது. இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவது, இது முதல் முறையல்ல; தொடர்கதையாக உள்ளது. தமிழக மீனவர்களின் இந்த துயர் நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கை விடுத்தும், மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனே தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரமும், தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


**.மீனவர்களைதானே கொலை பண்ணுறாங்க ,நிர்வாணமா நிக்க வைக்கிறாங்க... இல்ல இந்த பிரச்னை நேற்று மட்டுமா நடக்குது ... என்னமோ புதுசா பேசுறிங்க இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவது, தொடர்கதையாக உள்ளது.உங்களுக்கே நல்லா தெரியுது.  காங்கிரஸ் அரசு தமிழர்களை பற்றியே கவலை படுவதில்லை. இதிலே தமிழக மீனவர்கள் தாக்க பட்டால் என்ன , சுட்டு கொல்லப்பட்டால் என்ன.
இதுவரைக்கும் அறுநூறு பேருக்கும் மேல் சுட்டு கொல்லப்பட்டிருப்பார்கள், ஆயிரக்கணக்கில் காயம் மற்றும் நிர்வாண படுத்தப்பட்டு அடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாம் நீங்கள் வாழும் காலத்திலேயே நடந்தது. நடக்கிறது. நடக்கும்.

ஆனால் காங்கிரஸ் ஒரு முறை கூட இலங்கை அரசையோ இராணுவத்தையோ கண்டித்தது இல்லை. ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா,ஏ.கே.அந்தோணிக்கும் இந்த சிங்கள கடற்படை அட்டூழியம் தெரியாதா என்ன ...! எதற்கு கடிதம் ...? தமிழன் என்றால் அவ்வளவு கேவலம் மன்மோகன் சிங்கக்கு கடிதம் அனுபுறாரு.. அவர் அதை படிசிட்டு சோனியாவிடம் கேட்டு பதில் போடுவாரு...எதற்கு ஆவேசம் கொள்ளவேண்டும்? ஒரு நாலு நிமிஷம் உண்ணாநோன்பு இருங்கள், இலங்கை ராணுவம் ஆடிபோய் நம் மீனவரை தாக்குவதை நிறுத்தும். ஒரு பந்த் நடத்துங்கள், இலங்கை ராணுவம் செயலிழந்துவிடும். வாய் சொல் வீரர் திருமாவளவனை விட்டு ஒரு கண்டன அறிக்கை விடசொல்லுங்கள், இலங்கை ராணுவம் கிடுகிடுத்துவிடும். சொக்க தங்கம் சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், இலங்கை ராணுவம் ஆடிபோய்விடும். முரசொலியில் மனம் உருகுமாறு  உடன் பிறப்புக்கு ஒரு கவிதை எழுதுங்கள், இலங்கை ராணுவம் மனம் மாறி நம் மீனவரை தாக்குவதை நிறுத்தும் .

  மீனவர்கள் என்ன நம்ம குடும்ப உறுப்பினர்களா ?... காகிதம் எடுப்போம் ....கடிதம் வரைவோம் ..... காரியம் முடிப்போம்.. பதவி என்றால்தானே, படையுடன் டெல்லி நோக்கி பயணம் செய்வோம்... காத்திருந்து பதவியுடன் விடை பெற்று தமிழகம் அடைவோம். நாம் ஒரே கொள்கை - பதவி பதவி பதவி .. எவன் எக்கேடுகேட்டால் நமக்கு என்ன ??.. என்ன கரெக்ட் தானே இதுக்கு போய் ரொம்ப டென்ஷன் ஆகாதிங்க

Jul 2, 2010

கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி

கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி அதிமுக செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா.  அறிக்கை

கடந்த வருடம் மே மாதத்தில் வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரில், இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்களின் சாட்சியங்களாக, யுத்தத்தில் ஈடுபட்டிருந்த  இராணுவச் சிப்பாய்களினால், கைத் தொலைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட படங்கள் மேலும் வெளியாகியுள்ளன. ஐ.நா.சபையினால்,  சிறிலங்காவின் போர்க்குற்ற ஆதாரங்கள் குறித்து  ஆராய்வதற்கு அனுசரணையாக நிபுணர்கள் குழுவை அமைத்துள்ள நிலையில்,  இந்த ஒரு  வாரத்தில் மட்டும் மேலும் இரு தொகுதி போர்க்குற்ற ஆதாரப் படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போரின் போது  கொல்லப்பட்ட பெண் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டிருப்பது வெளியாகியுள்ள படங்களில் ஆதாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க,   அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் கருணாநிதி.  ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே தமிழக முதலமைச்சர்  கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான் எனக் குற்றம் சாட்டியிருக்கின்றார் அதிமுக செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் இன்று{01.07.2010} வெளியிட்டுள்ள அறிக்கை.


இலங்கையில் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்குரைஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  திரு. பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது உண்மையிலேயே வரவேற்கத் தக்கது. இலங்கையில் வாழும் தமிழர்களை தமிழ்நாடு அரசும், அதன் முதலமைச்சருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில்,  உலக அமைதி ஸ்தாபனமும், அதன் தலைவர் திரு. பான் கி மூன் அவர்களும் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தலைவரின்  இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு விசா தருவதை இலங்கை அரசு மறுத்து வருகிறது.   இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது.  மஹிந்தா ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக்கூடாது. பான் கி மூன் அவர்கள் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஷேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை,   மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இந்தக் குழு, இலங்கையில் தங்களது சொந்த வியாபாரத்தை விருத்தி செய்யும் எண்ணத்துடன் தமிழகத்திலிருந்து சென்ற ஆளும் தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அல்ல.

விடுதலைப்  புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு கபட நாடகத்தை நடத்தினார். காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு கிளம்பிய கருணாநிதி, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி.  கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் “உண்ணாவிரதத்தை” நிறுத்திவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் கருணாநிதியை நம்பினார்கள்.  தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழக மக்களும் நம்பினார்கள்.  ஏனெனில் கருணாநிதி தமிழக அரசின் முதலமைச்சர்,  86 வயதானவர், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்பவர்... எனவே, மக்கள் அவர் மீது ஏன் அவநம்பிக்கை கொள்ள வேண்டும்? துரதிர்ஷ்டவசமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கருணாநிதியின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர்.  அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன.  இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

“நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும்" என சர்வதேச சட்டம் கூறுகிறது.  போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் கருணாநிதி.  ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும் போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குழு ஐக்கிய நாடுகள் குழுவைச் சந்தித்து, கருணாநிதி ஒரு போர் குற்றவாளி என்று பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும். இந்த மரண வியாபாரியின் சதிச் செயல்கள் காரணமாக போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான ஆத்மாக்களுக்கு குறைந்தபட்சம் இதையாவது நாம் செய்ய வேண்டும்; இதைத்தான் நம்மால் செய்ய முடியும் - எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய இடுகை 

1.உண்மை நிலை என்னJul 1, 2010

பாலம் கட்டுவதும் பூங்கா அமைப்பதும் தமிழ் தொண்டா

                                                 

                                  பேசும் மொழிக்காக இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்ற ஒன்றே கோவை மாநாட்டுக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை. ஐந்து நாட்களும் சேர்த்து 10 லட்சம் பேர் வந்து போயிருக்கலாம் என்கிறது காவல் துறையின் கணக்கு. முதல் நாள் மட்டும் 90 ஆயிரம் சாப்பாட்டுப் பொட்டலங்கள் விற்பனையாகின. மறுநாளும் அது தொடர்ந்தது. மாநாட்டுப் பந்தல் எப்போதுமே நிறைந்திருந்தது. கண்காட்சியைப் பார்க்க இரண்டு கி.மீ. தூரத்துக்கு ஆட்கள் நின்றார்கள். தமிழுக்கு ஈர்க்கும் சக்தி இன்னமும் இருக்கிறது!

முழு உரிமையும் குடும்பத்துக்கே!
                                   
தி.மு.க. மாநாட்டு மேடைகளில், அவர்களது விழாக்களில் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் முன்வரிசையை மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழுக்காக ஒரு மாநாடு நடத்தப்படும்போதும் அந்த நிலைதான் தொடர வேண்டுமா? ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், உள்ளூர்ப் புலவர்கள் எல்லாம் ஒழுங்கான இடம் இல்லாமல் திணறித் தவிக்க, கருணாநிதி குடும்பத்தின் நான்கு தலைமுறை மக்களும் ஒரு முழு மேடையைக் கபளீகரம் செய்து உட்கார்கிறார்கள். மாநாட்டுப் பொது மேடையின் முன் வரிசையில் மொத்த நாற்காலிகளும் அவர்களுக்குத்தான். அவர்கள் திடீரென்று அரங்குக்குள் நுழையும்போது 15 வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசிக்கொண்டு இருக்கும்போது, செல்வி, துர்கா ஸ்டாலின், காந்தி அழகிரி வருகிறார்கள். முன் வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். ஹார்ட்டுக்கு இதன் அர்த்தம் புரியவில்லை.
தொடக்க விழாவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால், ஊர்வலம் பார்க்கும் மேடையை அழகிரியும் தயாநிதி மாறனும் பிடித்தார்கள். ஆய்வரங்கத் தொடக்க விழா மேடையில் கனிமொழி வலம் வந்தார். அழகிரி மகள் கயல்விழி, கவியரங்கில் இருந்தார். செல்வி மகள் எழிலரசி வீணை வாசித்தார். கண்காட்சியை அழகிரி திறக்கிறார். இணையதளக் கண்காட்சியைத் திறப்பது தயாநிதி மாறன். இறுதி நாள் மேடையில் ஸ்டாலினுக்கு நாற்காலி இருப்பதை உணர்ந்த அழகிரியும், தானே மேடை ஏறி ஓர் இடத்தைப் பிடித்தார். இந்த ஒன்றை மட்டும் தவிர்த்திருந்தால், தன் மீதான 50 சதவிகித விமர்சனங்களை கருணாநிதி தடுத்துஇருக்கலாம்!

தூங்கும் அரங்குகள்!
                                   
மொழியியல் சார்ந்த உலக மேதைகளும் உள்ளூர் அறிஞர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது ஆய்வு முடிவுகளை, இது வரை இருக்கும் ஆதாரங்களை நினைவுபடுத்துவதும், அடுத்த கட்டமாகத் தங்களது ஆய்வை எதை நோக்கிச் செலுத்துவது என்று முடிவு எடுக்கவுமே ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவையில் நடந்த ஆய்வரங்குகள் இதில் எந்த நோக்கத்தையும் நிறைவு செய்ததாகத் தெரியவில்லை. 21 அரங்குகள், 55 பொதுத் தலைப்பு கள், 800-க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எல்லா அரங்குகளும் தூங்கி வழிந்தன. கட்டுரை வாசிக்கும் நான்கு பேருடன் சேர்த்து 20 பேர் இருந்தால், அது கூட்டமுள்ள அரங்கம். இரண்டே இரண்டு பேர் உட்கார்ந்திருக்க, ஒருவர் கட்டுரை வாசித்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதிலும் நேரத்துக்கு முடிக்காமல், தலைவருக்கும் கட்டுரையாளருக்கும் தகராறு நடந்தன. கேள்விகள் கேட்க ஆட்கள் இல்லை. கேள்விகள் கேட்டாலும், பதில் சொல்லப் பலருக்குத் தெரியவில்லை என்று அத்தனை குறைகள்!
என்ன பாவம் செய்தான் ஈழத் தமிழன்?
                                         
'கடல் கடந்த தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம். தமிழகத்துக்கு வெளியே தமிழும் தமிழரும் எப்படி இருக்கிறார்கள் என்ற நிலையைச் சொல்லும் நிகழ்வு. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைச் சொன்னார்கள். ஆனால், இதில் நிச்சயம் இருந்திருக்க வேண்டிய நாடு இலங்கை. அதைத் தந்திர மாகத் தவிர்த்துவிட்டனர். ஈழத்தில் மொத்தமாக ஓர் இனம் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் கொன்று குவிக்கப்பட்டது. மீதம் உள்ளவர்களும் அன்றாடச் சோற்றுக்குக்கூட சிரமப்பட்டு வருகிறார்கள். ஈழத்தின் தமிழ்க் கொடையும் இன்றைய தமிழர் கொலையும் அங்கு பேசப்படவில்லை!

கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்!
                                                
அதே கவிஞர்கள், அதே கூட்டம் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர். 'யாரங்கே... தொடங்கட்டும்' என ஆரம்பமாகிறது கவியரங்கம்...
                                                "கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்" என்று வைரமுத்துவும், "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று வாலியும் ஆளுக்கு ஒரு சோப்பு கம்பெனியுடன் வந்தார்கள். "செம்மொழித் தங்கமே! எங்கள் செல்லச் சிங்கமே! உன்னைக் கும்பிட்டால் ஊரையே கும்பிட்ட மாதிரி" என்று ஆரம்பித்து, பாப்பநாயக்கன் பாளையம் டீக்கடை ஒன்றில் செம்மொழி மாநாடு நோக்கி நிற்கும் ஒரு மூதாட்டியிடம் தான் பேசும் பாவனையில் முதல்வர் மேல் மும்மாரி பொழிந்தார் வைரமுத்து. "கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட, ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா?, அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால், அதியமான் ஏமாந்திருப்பான்!" என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்
                                                               பாடலாசிரியர் விவேகா, "தலைவா... நீ சாகா விளக்கு, விதி விலக்கு, அகல் விளக்கு, அகலா விளக்கு, சென்னைக்குத் தெற்கே உள்ள திருக்குவளையில்தான் தமிழுக்குக் கிழக்கு பிறந்தது" என்று கண்டுபிடித்துச் சொன்னார். விடுவாரா நா.முத்துக்குமார். "சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய், திரை உலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், கலைஞர் திரை உலகையே ஜெயித்திருக்கிறார், கலைஞர் ஒரு மலைக்கோட்டை" என்று வாசித்தார். கயல்விழிக்கான அறிமுகமே அபாரம். "தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அப்பா பாராட்ட, சித்தப்பா சீராட்ட... பாடவா பெண்ணே, உன் தாத்தாவிடம் நீ கேட்ட தமிழ்ப் பாட்டை" என்று அழைத்தார் வைரமுத்து. பாட்டு என்று அழைத்ததால் உண்மையில் பாடியேவிட்டார் கவிதாயினி. "பள்ளம் மேடாக வேண்டும், புரையோடிப்போன லஞ்சம் போக வேண்டும்" என்று சொன்னதுதான் யாருக்கு என்று புரியவில்லை.
                                                       
  இதையெல்லாம் கேள்விப்பட்ட வாலி தலைமையிலான அணி 16 அடி பாய்ந்தது. "ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது. அக்குவளை திருக்குவளை," என்று சொன்னவர் மேத்தா. "காற்றே கலைஞரின் புகழைப் பாடித் திரி" என்று இயற்கைக்கு உத்தரவிட்டார் வாலி. "கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்தத் தமிழ், வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை பிள்ளை. கடைசிவரை கலைஞர்" என்றெல்லாம் புகழ் பாடிப் பொழிந்தவர் இறுதியில் "முத்துக்குமார் தீக்குளித்து வளர்த்த தமிழ்" என்று முடித்தார் பழநிபாரதி. "82 வயது உடல் மறைத்த இளைஞனே, கலைஞரில் இருக்கிறார் கடவுள். 108 வடிவில் காப்பது கலைஞர்தானே" என்று தன் பணியைச் செவ்வெனே முடித்தார் பா.விஜய்!

திருமாவின் தீ... அனல் கிளப்பிய அருள்மொழி!
 
"இது தமிழைப் பாராட்டும் மாநாடு என்பதைவிட தமிழனைத் தட்டி எழுப்ப வேண்டிய மாநாடு. காலம் அறிந்து இதை கலைஞர் செய்திருக்கிறார். நிலத்தை, களத்தை, இனத்தை இழந்த தமிழா... நீ கவலைப்படாதே என்று சொல்வதற்காகத்தான் இந்த மாநாடு நடக்கிறது. நம்முடைய தமிழன் இலங்கையை ஆண்டவன். ஆனால், இன்று தமிழ் நிலத்தை சிங்களவன் ஆக்கிரமித்துள்ளான். அநாதையாக அந்த இனம் அலைகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள்தான் தமிழீழத் தனித் தாயகம் அமைத்துத் தர வேண்டும்" என்று திருமா சொன்னபோது மாநாட்டுப் பந்தல் அதிர்ந்தது. அடுத்து வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் டி.ராஜா, பாரதிய ஜனதா இல.கணேசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் இது தொடர்பாகப் பேச தூண்டுதலாக அமைந்தது திருமாவின் பேச்சு.
                                   
மறு நாள் கருத்தரங்கில் திராவிடர் கழகப் பேச்சாளர் அருள்மொழி வெளிப்படையாகவே அனல் கிளப்பினார். 'போரைப் புறந்தள்ளி பொருளைப் பொதுவாக்கு' என்பது அவருக்கான தலைப்பு. "இன மரத்தின் மிகப் பெரிய கிளை முறிந்திருக்கிற இந்த நேரத்தில் மாநாடு நடக்கிறது. நாம் இழந்த வர்கள். இழந்தவர்களால் போரைப் புறந்தள்ள முடியாது. திலீபனும் மில்லரும், ஏராளமான பெண் போராளிகளும் போராடி உலகத்துக்கு வழிகாட்டிய இனம் இந்த இனம்" என்று கொந்தளித்தார். யாரும் எதைப் பேசிவிடக் கூடாது என்று நினைத்தார்களோ, அதற்குத்தான் மாநாட்டில் அதிகமான வரவேற்பு!


முழுப் புகழும் கண்காட்சிக்கே!
                                            அந்த அரங்கத்துக்குள் நுழைந்தால், சிந்துச் சமவெளிக்குள் பயணிப்பதுபோலவே இருந்தது. மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இருந்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த எழுத்துக்களில் தொடங்கி, அங்கே இருந்த வீடுகள், கிணறுகள், அம்மக்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதைவுகளை மாதிரியாகச் செய்துவைத்து இருந்தார்கள். ஓலைச் சுவடிகளை ஊர் ஊராக அலைந்து திரிந்து கைப்பற்றி புத்தகங்களாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவர் வைத்துஇருந்த திருக்குறள், புறநானூறு, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், அதை எழுதப் பயன்படுத்திய எழுத்தாணிகள் வைக்கப்பட்டு இருந்தன. புராதனச் சிலைகள், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியங்கள், பழைய காலத்துத் தமிழ் எழுத்துக்கள் என எல்லாமே பழமையை நினைவுபடுத்துவதாக இருந்தன. இலக்கியக் காட்சிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட 3டி அனிமேஷன் காட்சிகள்கொண்ட ஒலி - ஒளி கண்காட்சி அரங்கம் அருமை!

அருந்தமிழ் அல்வா!
                                    
   ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தத் திட்டமிட்டார் முதல்வர் கருணாநிதி. அதை நடத்த வேண்டிய நிறுவனம் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தலாம் என்றது. அதற்குச் சம்மதிக்காத முதல்வர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர்த் திருத்தம் செய்து, தானே நடத்திவிட்டார். இது இன்னொரு தி.மு.க. மாநாடாகத்தான் இருக்கப்போகிறது என்று விமர்சனங்கள் வந்தன. கட்சிக் கொடி பறக்கக் கூடாது என்ற கட்டளையை ஏற்று கறுப்பு சிவப்புக் கொடியைப் பார்க்கவே முடியவில்லை. ஆனால், அக்கறை இல்லாமல் நடத்தப்பட்ட ஆய்வரங்குகள், வெறும் அரட்டைக் கச்சேரிகளாக அமைந்த பொது அரங்குகளைத் தாண்டி, மாநாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அனைவராலும் சில செய்திகள் எதிர்பார்க்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், "உலகமெங்கும் வாழும் தமிழனைக் காக்க ஒரு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்கள். அதைவிட முக்கியமாக, புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மனம் குளிர்வது மாதிரியான அறிவிப்பை எதிர்பார்த்தார்கள். 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து சொல்லிவரும் 'மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்' என்பதையே மீண்டும் ஒரு முறை கருணாநிதி வாசித்தார். இன நலன்கொண்டோருக்கு இது ஏமாற்றம் ஆனது.
                                      தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதே இனிக்கும் அறிவிப்பாக இருக்கிறது. கட்டாயத் தமிழ்க் கல்வி, உயர் கல்வியைத் தமிழில் படிக்க வசதி, அனைத்து விளம்பரப் பலகைகளிலும் தமிழ் கட்டாயம், ஆட்சி மொழி தொடர்பான அனைத்து உத்தரவுகளும் கடுமையாகக் கண்காணிக்கப்படும், காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், கவனிப்பாரற்றுக்கிடக்கும் தமிழ் நிறுவனங்கள் மறுசீரமைப்பு போன்ற கருத்துக்களை எதிர்பார்த்த மொழி ஆர்வலர்கள் முகங்களிலும் மகிழ்ச்சி இல்லை. சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பண்டிகை நாட்களில் பார்ப்பதுதான்

  பாலம் கட்டுவதும் பூங்கா அமைப்பதும் பொதுப் பணித் துறையின் வேலைகள்.
                            இதைத் தமிழ்த் தொண்டு என்று எப்படிச் சொல்ல முடியும்?