Feb 23, 2011

காங். தகிடுதத்தம். தடுமாறும் திமுக.


தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க  முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனியாவை சந்திக்க டெல்லி சென்று உள்ளார். இது என்ன சாதாரணமான பிரச்னையாஇது நேரில் பேச வேண்டிய மிக மிக முக்கியமான பிரச்சனையாம். அதனால்டி.ஆர்.பாலு, டெல்லி சென்று உள்ளார்.

இது ஒன்றும் இலங்கை தமிழர் பிரச்சனையோ, காவிரி பிரச்சனையோ, முல்லை பெரியாறு பிரச்சனையோ, பாலாறு பிரச்சனையோ, தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் பிரச்சனையோ, மின் வெட்டு பிரச்சனையோ, விலைவாசி உயர்வு பிரச்சனையோ, பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையோ இல்லை. கடிதமோ தந்தியோ அனுப்பும் அளவுக்கு திமுக+இ.காங்.கூட்டணி என்ன  சாதாரண பிரச்னையா?
 
காலில் விழுந்து சரணாகதி நிலையில் சோனியாவிடம் பேசி தீர்க்க நேரில்தான் போயாக வேண்டும் என்பது சமத்துவ பெரியார், சுயமரியாதை செம்மல், தமிழர் மானம் காக்கும் தலைவன், காலில் விழும் சாணக்கியர் கருணாவுக்கு  தெரியாதா?
 
ஒரு வேடிக்கையான காமெடியை பாருங்கள் இ.காங்.வைத்துள்ள டிமாண்ட் மூன்றில் இரண்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது தெரியாமல் திமுக.வும் மறுக்கிறது. இ.காங்.வும் கேட்கிறது.
 
டிமாண்ட் 1 = ஆட்சியில் பங்கு
அடுத்த முறை ஆட்சிக்கு வராத தி மு க விடம் ஆட்சியில் பங்கு கேட்பது நல்ல தமாஷ்.
 
டிமாண்ட் 2 =குறைந்த பட்ச செயல் திட்டம்
முடிந்த வரை கொள்ளை அடிப்பது. ஈழ தமிழனை பழி வாங்குவது. என்பது தான் குறைந்த பட்ச செயல் திட்டம்.குறைந்த பட்ச செயல்திட்டம் எப்போதும் உள்ளது.
 
டிமாண்ட் 3 = ஒருங்கிணைப்புக் குழு
 
சிதம்பரம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ்(இவர் இ.காங்.சா,இல்லை திமுக.வா)   போன்றவர்கள் அடிக்கடி கருணாநிதியை பார்த்து பாராட்டி பேசி விட்டு வருகிறார்கள். இதைவிட வேறு என்ன ஒருங்கிணைப்பு வேண்டும்?

Feb 19, 2011

சோனியா(காங்)சதியா? கருணாநிதி(திமுக)நாடகமா?தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி கட்சியின் மிக முக்கியத்தலைவரின் தொலைக்காட்சியில் சோதனை என்பதை மனநிலை பாதிக்கப்பட்டவன் கூட நம்ப மறுப்பான் . எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போகிறான் என்று உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்லும் நடவடிக்கையே தவிர  உண்மை வெளிவருமா. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா  
சந்தேகம் தான்.

மு.க.(திமுக)நாடகம்

ஏனென்றால்அவரிடம்(மு.க) எந்த எதிர்வினையும் வெளிப்படவில்லை இதுதேர்தலுக்காக! நான்(சோனியா) அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் , நீ (மு.க.) அழுகின்ற மாதிரி அழு என்று மத்தியஅரசின் நாடக காட்சி  நடக்கிறது.சி.பி.ஐ என்றுமே மத்திய அரசின் கைகூலி தான்,அது தன்னிச்சையாக,அதிகாரத்தை பயன்படுத்த துணியாது,இன்னமும் சிபிஐயின் மீது நம்பிக்கை வைத்துள்ள நம் தமிழர்கள் எவ்வளவு அப்பாவிகள் எனப் புரிகிறது. ஐயா அவ்வளவு சீக்கிரம் பழசையெல்லாம் மறந்துடாதீங்க. எல்லாம் ஒரு நாடகம் தான். நமக்குத்தான் சினிமா, ட்ராமான்னா உயிராச்சே. நடக்குறவரைக்கும் பாத்துட்டு கையத் தட்டிட்டு போய் கஞ்சிக்கு வழியப் பார்ப்போம். அவங்க வந்த வரை ஜமக்காளத்துல முடிஞ்சிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.  சட்டத்தில் உள்ள எல்லா ஓட்டைகளும் கலைஞருக்கு அத்துபடி,கலைஞர் சாதாரண ஆள் இல்லை, அவர் ஒரு நடமாடும் ஊழல் மெகா பல்கலைக்கழகம். ஆனால் அவரின் வாரிசுகளுக்கு அறிவு கொஞ்சம் குறைவு தான். அவர்களுக்கு திருட தெரியுமே தவிர மு.க அளவுக்கு திறமையானவர்கள் இல்லை.

சோனியா(காங்)சதி
மேற்கண்ட கருத்துக்களைப் படிக்கும்போது, இத்தகைய நடவடிக்கைகள்,காங்கிரஸ் கட்சி,தி,மு,கவை பணிய வைக்கவே பயன்படுத்துகிறது,தமிழகத்தில் அதிக தொகுதிகளை பெறுவதற்கும்,தி.மு,க.வின் செல்வாக்கை குறைப்பதற்கே, சி.பி,ஐ.யை பயன்படுத்துகிறது.   உண்மையில் ஸ்பெக்டரம் ஊழலுக்கு  தி,மு,க மீது மட்டும் பழி சுமத்துவது மடமை,காங்கிரஸுக்கும் அதில் பெரும் பங்கு உள்ளது, உண்மையில்,ராசா குற்றவாளி என்றால்,காங்கிரஸ் இன்னும் ஏன் தி,மு.க.வுடன் கூட்டணி வைக்க முயல்கிறது, ஊழல் குற்றச்சாட்டில் உள்ள கட்சியுடன்,ஊழலை எதிர்ப்பதாக கூறும் காங்கிரஸ் ஏன் கூட்டணி வைத்துக் கொள்ளவேண்டு,எல்லாம் அரசியல், அதுவும் வட இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் மாநிலகட்சிகளின் வளர்ச்சியை விரும்புவதில்லை.

தமிழகத்தில் மீண்டும் அதிகாரத்தை பிடிக்க பார்(துடி)க்கிறது காங்கிரஸ்.  ஆனால் தமிழின விரோத போக்கு கொண்ட சோனியா காங்கிரஸை    வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கவேண்டும்.  இந்தமுறை தமிழக மக்கள் இவர்களை(காங்.திமுக.) நிச்சயம் புறக்கணிப்பார்கள்,

Feb 14, 2011

''சாகித்ய அகாடமி விருது மகிழ்ச்சியா?'' நாஞ்சில்நாடன்.

நாஞ்சில் நாடன்.

க மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. 'தலைகீழ்விகிதங்கள்’, 'எட்டுத்திக்கும் மத யானை’, 'என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். 'சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ''என்னைப் பார்த்து எழுத வந்தவர்கள், எனக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். இது தாமதமாக எனக்குக் கிடைத்த விருதுதான்!'' - சிநேகமாகச் சிரிக்கிறார்.  இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார் நாஞ்சில்நாடன். 

 ''சாகித்ய அகாடமி விருது... மகிழ்ச்சியா?''

''இது ஓர் அங்கீகாரம்... அடையாளம். அவ்வளவுதான். அது இருக்கட்டும். அதனால் என்ன நிகழும்?
கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ஞான பீட விருது கிடைத்தது. அவர் வீட்டுக்குப் பாராட்ட வந்து நின்ற கார்களில் கேரள முதல்வர் ஏ.கே.அந்தோணியின் காரும் ஒன்று. ஆனால், யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ஓர் எழுத்தாளருக்கு ஞானபீட விருதே கிடைத்தாலும் முதலமைச்சர் வீடு தேடி வந்து பாராட்டுவாரா?

எழுத்தாளரே தன் சொந்த செலவில் சால்வையும் பூச்செண்டும் வாங்கிக்கொண்டு, புகைப்படக் கலைஞரையும் கூட்டிக்கொண்டு முதல்வர் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். மறு நாள் செய்தித்தாள்களில் அது செய்தியாக வரும், 'ஞானபீட விருது வென்ற எழுத்தாளர், முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!’ என்று. ஆக, முதல்வர் அப்போதும் எழுத்தாளரை வாழ்த்து வது இல்லை, முதல்வரிடம் எழுத்தாளன்தான் வாழ்த்துப் பெற வேண்டும்.

தமிழ்ச் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிற சமூகம். இரண்டு காட்சிகளில் தலை முடியைக் கலைக்கும் நடிகனுக்குக் கொடுக்கும் மரியாதையை எழுத்தாளனுக்குத் தருவது இல்லை. நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தருகின்றனவே... ஏதாவது ஓர் எழுத்தாளருக்கு எப்போதாவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறதா?''

''இப்போது இலக்கியத்தை சினிமாவுக்குள் நுழைவதற் கான விசிட்டிங் கார்டுபோல சிலர் பயன்படுத்துகிறார்களே... பிறகு, அவர்களே, 'என் கதையைச் சிதைத்துவிட்டார்கள்’ என வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?''

''முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒரு நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத் தாளன்... சினிமா வேறு, எழுத்து வேறு என் பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும். நான் வட்டார வழக்கில் எழுதிய 'தலைகீழ் விகிதங்கள்’ நாவல் 'சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம்  கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் என் கதையைச் சினிமாவாக மாற்று வதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன் பிறகு, 'நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!''

''சினிமா இருக்கட்டும், அரசியலுக்குப் போகிற எழுத்தாளர்களை ஆதரிக்கிறீர்களா?''

''இல்லை. அரசியல் என்பது இப்போது ஒரு தொழில். சொல்லப்போனால், மிக மோசமான தொழில்!
ஊழல் பண்ணத் தெரிந்தவன், சாதிரீதியாக அரசியல் பண்ணத் தெரிந்தவன், தன்மானத் தைத் துறக்கத் தெரிந்தவன் இவர்கள்தான் இன்றைய  அரசியலுக்குத் தகுதியானவர்கள். ஒருவேளை இலக்கியவாதிகள் அரசியலுக்குப் போனால், அரசியல் மேம்படுமே என்று கேட்கலாம். சினிமா எவ்வளவு தரம் கெட்டுப் போனாலும், படைப்பாளிகள் பங்கெடுக்கும் போது அதை மீட்டெடுக்க முடியும். ஆனால், அரசியல் மீள முடியாத ஒரு சாக்கடை. 

இப்போது அரசியலுக்குப் போன இலக்கிய வாதிகளையே எடுத்துக்கொள்வோம். அவர் கள் எழுதித் தள்ளும் ஆதர்சங்களுக்கும் அவர் களின் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதில் விதிவிலக்குகளே இல்லை. மேலும், அரசியலுக்குப் போகிற இலக்கியவாதிகள் மீது இலக்கியவாதிகளுக்கே மரியாதை கிடையாது. சுருக்கமாகச் சொல்லப் போனால், குற்றம் செய்யக் கூசாத மனோபாவம்தான் அரசியலுக்குத் தேவை!''


''விஜயகாந்த், குஷ்பு, விஜய் போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதையாவது ரசிக்கிறீர்களா?''

''தமிழக அரசியல் என்பது சினிமா கவர்ச்சி யின் உச்சம். நான்கு படங்களில் தலை காட்டு கிற நடிகர்கள், ஒருகட்டத்தில் தான் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைப்பதும் நம்புவதும் எனக்கு இன்னமும் ஒரு கலாசாரப் புதிராகவே இருக்கிறது. ஒரு குடிமகன் என்ற வகையில் ஒரு நடிகன் அரசியலுக்கு வருவது தப்பு இல்லைதான். ஆனால், ஓர் இசைக் கலைஞன், ஓவியன் இவர்களுக்கு எல்லாம் வராத மனத் துணிவு ஒரு சினிமா நடிகனுக்கு மட்டும் எப்படி வருகிறது என்பதுதான் கேள்வி. 

ஒரு கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை சொல் பவனாக நடிகன் மாறிவிடுகிறான். மக்களுக்குச் சொன்னால்கூடப் பரவாயில்லை... அறிஞர் களுக்கே அறிவுரை சொல்பவனாகவே நடிகன் மாறிவிடுகிறான். படிப்பறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்கள்கூட சினிமா பைத்தியத்தால் சீரழியவில்லை. தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும்  நாட்டு நடப்புகள் குறித்து இவ்வளவு அசிரத்தைகள் இல்லை!''

''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''

''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?

இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!''

''ஈழப் பிரச்னை ஒரு படைப்பாளியாக உங்களை எப்படிப் பாதித்தது?''

''வெகுவாக! அடுத்து வெளிவர இருக்கிற என்னுடைய 'பச்சை நாய்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பில் ஈழம் சார்ந்த அரசியல் கவிதைகள் நிறைய இருக்கும். நான் ஒரு படைப்பாளி. என்னுடைய மறுப்பைப் படைப்பாகத்தான் பதிவு செய்ய முடியும். ஆனால், பல படைப்பாளிகள் தங்கள் எதிர்ப்புகளையும் உணர்வுகளையும் படைப்பாகக்கூட பதிவு செய்யவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், இந்தத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்னை ஒரு மலையாள எழுத்தாளர் கேட்டார், 'இவ்வளவு பெரிய இன அழிப்பு நடந்திருக்கிறதே... ஏன், உங்கள் ஊரில் ஒரு முனிசிபல் கவுன்சிலர்கூட ராஜினாமா செய்யவில்லை?’ என்று. மௌனத்தைத் தவிர, வேறு எந்தப் பதிலும் என் வசம் இல்லை. ஈழப் பிரச்னையைப் பொறுத்தவரை அலட்டிக்கொள்கிறோமே தவிர, எல்லாமே பாசாங்கோ என்று தோன்றுகிறது. நிறைய இளைஞர்களுக்குப் பிரச்னையே என்னவென்று புரியவில்லை!''

''இணையத்தில் எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதே?''

''மகிழ்ச்சிதான். ஆனால், இவர்கள் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள் என்கிற சந்தேகம் உண்டு. முன்பு எழுத்தாளர்கள், சமகாலம் மற்றும் முற்காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வாசித்துவிட்டுத்தான் எழுதினார்கள். ஆனால், இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களிடம், வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவு. இணையத்தில் வம்பு வழக்குகளும் கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன!''

''மற்றவர்களைக் குற்றம்சாட்டுவது சரி. எழுத்தாளர்கள் என்றாலே குடிகாரர்கள், குழு மோதலில் ஈடுபடுபவர்கள் என்றுதானே மற்றவர்கள் நினைக்கிறார்கள்?''

''குடி என்பதே நண்பர் வட்டம்தானே! யார் இங்கே குடிக்காமல் இருக்கிறார்கள்? எல்.ஐ.சி-யில் வேலை பார்ப்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் என நண்பர்கள் சேர்ந்தால் குடிக்கத்தானே செய்கிறார்கள். அதேபோல இலக்கியவாதிகளும் நண்பர்களாகச் சேர்ந்தால் குடிக்கிறார்கள். காசு இருக்கிறவன் அடுத்தவனுக்கு வாங்கித் தருகிறான். இல்லாதவன் அடுத்தவனோடு சேர்ந்து குடிக்கிறான். நாலு லார்ஜுக்கு மேல் போனால் சண்டை வருவது எல்லாப் பக்கமும் இருக்கும் இயல்புதான். எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் குடித்தால் சண்டை வருகிறதா என்ன? எல்லா எழுத்தாளனும் ஏதோ ஒருவகையில் மொழிக்கும் சமூகத்துக்கும் பங்காற்றவே செய்கிறான். எனவே சச்சரவுகள், சர்ச்சைகளைவைத்து மட்டுமே எழுத்துலகத்தை மதிப்பிட முடியாது... கூடாது!''

''இன்று புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் சினிமா பூஜைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே, பளபளப்பான ஆளுமைகள்தானே புத்தக விழாக்களில் கலந்துகொள்கிறார்கள்?''

''அப்படி பொத்தாம்பொதுவாகச் சொல்லாதீர்கள். நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன், திருச்செந்தாழை இவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு எல்லாம் எந்த சினிமாக்காரர், எந்த வி.ஐ.பி. வருகிறார்?
சென்னையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இருக்கிற வசதி அது. புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களின் வியாபார உத்திகளையும் சார்ந்தது இது. ஆனால், இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று ஒரு நாளாவது, ஒரு சினிமா பிரபலம் ஓர் எழுத்தாளனைப் பாராட்டி நாலு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போகட்டுமே!''
நன்றி: விகடன்.

Feb 3, 2011

மக்களின் விருப்பம் நிறைவேறவே அதிமுக.வுடன் கூட்டணி. தே.மு.தி.க. அறிவிப்பு.


சேலத்தில் நடத்திய ‘உரிமை மீட்பு’ மாநாடு சக்ஸஸ் ஆன உற்சாகத்தில் தே.மு.தி.க. தரப்பு, அடுத்தகட்டமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை என்று அதிரடியாகப் பாயத் தயாராகிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்தச் சூழலில் தி.மு.க. ஆட்சியை ஒழித்துக்கட்ட எங்கள் பங்களிப்பு தவிர்க்க முடியாதது" என்கிறார் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.


 2006 மற்றும் 2009 தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க., தி.மு.க. ஆட்சியை அகற்ற எந்த வகையில் யுக்திகளை வகுக்கிறது?
வரும் தேர்தலில் நாங்கள் 15 சதவிகிதம் வாக்குகளைப் பெற முடியும் என்று நம்புகிறோம். இதைப் பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். எனவேதான் எதிர்க்கட்சிகளோடு கூட்டணி சேர்வோம் என்று கேப்டன் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். தமிழகத்தின் முக்கிய சக்தியான எங்கள் உதவியின்றி தி.மு.க. ஆட்சியை விரட்ட முடியாது."

தி.மு.க.வுடன், அ.தி.மு.க.வையும் சேர்த்துத்தான் நீங்கள் விமர்சித்து வளர்ந்தீர்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்பது உங்கள் செல்வாக்கில் சரிவு ஏற்படுத்தாதா?
இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றுக் கட்சியாக வளர்ந்திருக்கிறோம் என்பதே யதார்த்த நிலை. ஆனால், தற்போது மற்ற எந்தக் கட்சிகளும் இயங்க முடியாதபடி தி.மு.க.வின் எதேச்சதிகாரம் பரவியிருக்கிறது. முதலில், தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதன்பின்தான் கண்ணியமான சுதந்திர சூழலில் அரசியல் நடத்த முடியும். ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கே ஆபத்து என்ற நிலையில், தி.மு.க.வை வீழ்த்த மற்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து களமிறங்குவது அவசியம். தமிழ்நாட்டு மக்களும், எங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இதனால் எந்த வகையிலும் தே.மு.தி.க. செல்வாக்கு சரியாது. ஏனென்றால் மக்களின் விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம். தி.மு.க.வை அகற்றுவது என்பது முன்னுரிமையாக இருப்பதால் வேறு எந்த சிந்தனையும் தற்போது இல்லை."

கூட்டணி சேர வேண்டும் என்பதுதான் உங்கள் தொண்டர்களின் விருப்பமா?
சேலம் மாநாட்டில் தொண்டர்களிடம் கேப்டன் விஜயகாந்த் நேரடியாக, ‘கூட்டணி சேர வேண்டுமா?’ என்று கேட்டதற்கு ‘ஆமாம்’ என்றுதான் 99 சதவிகிதத் தொண்டர்கள் குரல்கொடுத்தார்கள். எனவே, கொடி பிடிக்கும் தொண்டர்களே முடிவெடுத்திருக்கிறார்கள்."

தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து வந்துவிடும் என்று எதிர்பார்த்தீர்களா?
நாங்கள் காங்கிரஸுக்காகக் காத்திருக்கவில்லை. அதனுடன் கூட்டமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அலைவரிசை ஊழலில் தி.மு.க.வும் காங்கிரஸும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று."

கூட்டணி என்ற முயற்சியில் இறங்கி விட்டீர்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
இன்னமும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கவில்லை. பேச்சு வார்த்தை நடக்கும்போதுதான் இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படும்."

அலைவரிசை ஊழல் கிராம அளவில் பேசப்படுகிறதா?
சாதாரண படிக்காத மக்கள் கூட அலைவரிசை ஊழல் குறித்துத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்காக கலைஞருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம், அவர் கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிதான் இந்த தி.மு.க. - காங்கிரஸ் ஊழலை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. தி.மு.க. மீது ஏற்கெனவே ஊழல் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அலைவரிசை ஊழல் எல்லாவற்றுக்கும் சிகரமாக, இமாலய ஊழலாக அமைந்து விட்டது. எனவே, தி.மு.க. ஊழல் செய்திருக்கிறது என்றால், மக்கள் உடனடியாக நம்புவார்கள். தி.மு.க. விவகாரத்தை எப்படித் திசை திருப்பினாலும் மக்கள் அதை இந்தத் தேர்தலில் தண்டித்தே தீருவார்கள்."

தே.மு.தி.க.வைத் தனித்து நிற்கவைக்க தி.மு.க. தரப்பு முயற்சிப்பதாகச் செய்திகளும் வருகின்றனவே?
தி.மு.க. வெற்றி பெற தர்மத்துக்கு விரோதமான அனைத்து யுக்திகளையும் அக்கட்சியினர் மேற் கொள்வார்கள். எதிர்க் கட்சிகள்தான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை."

அரசின் இலவசத் திட்டங்கள், மற்றும் அதிகாரம் - பணபலம் காரணமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று ஆளும்கட்சி நம்புகிறதே?
இது மட்டுமா? தங்களுக்கேற்ற வகையில் செயல்பட ஊடகத் துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது தி.மு.க. அதிகாரமும், பணபலமும்தான் தி.மு.க.- காங்கிரஸின் பலம். அதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லையேல் தி.மு.க. வின் சூழ்ச்சிகள் வெற்றி பெற்றுவிடும்."

எந்தச் சூழலிலும் தனித்து நிற்கும் முயற்சியில் தே.மு. தி.க. இறங்காது என்று சொல்ல முடியுமா?
நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம் நாங்கள்."

நன்றி:  கல்கி

Feb 1, 2011

ராமதாஸுக்கு வந்த வாழ்வைப் பாத்திங்களா?ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ன்னு சொல்வாங்க, அது ராமதாஸ் விசயத்துல நல்லாவே பொருந்தி வருது...யாராவது கதவை திறந்து உள்ள வா ன்னு கூப்பிட மாட்டாங்களான்னு எல்லார் வீட்டு வாசல் முன்னாடியும்  தவம் இருந்த ராமதாஸுக்கு வந்த வாழ்வைப் பாத்திங்களா? அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் அதுபோல போனா போகட்டும் ன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டு சோறு போடலாம்ன்னு தாத்தா முடிவு பண்ணிய பிறகு வாலை ஆட்டிகிட்டு மறுபடியும் சாக்கடைக்கு தான் ஓடுவேன் ன்னு அவரோட குணத்தை காட்டுறாரு.இவரை கூட்டணியில் சேத்துகிறதும் ஒன்னு தான் வழியிலே போகிற ஓணானை உள்ள புடிச்சி விட்டுகிறதும் ஒன்னு தான்...இந்த இடத்தில நல்லா கவனிச்சி பாருங்க,தனியா நிற்க மாட்டேன் கூட்டணி வச்சி தான் தேர்தல சந்திப்பேன் ன்னு சொல்லிட்டு இருந்த ராமதாஸ் எப்படியாவது தாத்தா கூட ஜாயின்ட் பண்ணிகிலாம் ன்னு ஸ்பெக்ட்ரம் பத்தி கூட பேசாம கோமாளி வேஷம் போட்டாரு...ஆனா  பா.ம.க சேர்த்துக்க படும் ன்னு தாத்தா அறிக்கை விட்ட உடனே கூட்டணி சேர்வது பற்றி நான் இன்னும் முடிவு எடுக்கலை என்று அப்படியே பல்டி அடிச்சிட்டாரு. பாத்திங்களா அங்க தான் ராமதாஸ் நிக்கிறாரு...சல்லடை போட்டு தேடினாலும் இந்த உலகத்துல ராமதாஸ்  மாறி ஒரு கேடிய நீங்க பார்க்கவே முடியாது.கிட்ட தட்ட விபச்சாரி மாறி அவருக்கு பதவி, பணம் தான் முக்கியம்..கொள்கை அப்படின்னா கிலோ எவ்வளவு ன்னு கேட்பாரு...சமயம் பாத்து அவரோட திருவிளையாடலை விளையாட ஆரம்பிச்சிட்டாரு..ஜாதி வெறி ராமதாஸை சேர்க்க வேண்டிய அவசியம் அம்மாவுக்கு இல்லை. தாத்தா ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு அதுக்கு தான் ராமதாசுக்கு நூல் விட்டாரு அது வொர்க் அவுட் ஆகலன்னு தெரிஞ்சதும் மண்டை காஞ்சி போயி இருக்காரு. திமுக,..அதிமுக,இருவருமே பாமக.வை சேத்துக்காம நடுத் தெருவில அரசியல் அனாதையா நிக்க வைக்கணும் அப்பத்தான் இந்த மாறி ஒவ்வொருத்தர் முதுகிலும் சவாரி செஞ்சி பொழப்பு நடத்துவதை நிறுத்துவார். பாண்டிச்சேரியில ஊத்திகிட்ட மாறி தமிழ் நாட்டிலேயும் பா.ம.க வை கழுவி மூடி வைக்க திமுக,..அதிமுக,இருவருமே  முன் வர வேண்டும்.