Dec 4, 2012

அடேங்கப்பா இப்படி பொய் பேச இவரை விட்டால் யார்???..


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றி தி.மு..வின் நிலை என்ன என்று தி.மு.. தலைவர் கருணாநிதியிடம், ”இடதுசாரிக் கட்சிகளும், வேறு சில கட்சிகளும் இணைந்து தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்களே, அந்த கோரிக்கையை தி.மு.. வும் சேர்ந்து ஆதரிக்குமா?” என்று கேட்டதற்கு,

நவம்பர் 14ம் தேதி கருணாநிதியின் முதல் பல்டி இது

 கருணாநிதி:அன்னிய நேரடி முதலீடுகளை பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களையெல்லாம் அழைத்து கலந்து பேசி கழகத்தின் சார்பில் எங்கள் கருத்துக்களை தெரிவிப்போம்
 நிருபர்: நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள் சஸ்பென்ஸாக சொல்கிறீர்களே 

கருணாநிதி: "நான் நூறு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறேன். அந்த படங்களில் சஸ்பென்ஸ் இருந்தால் தான் அந்தப் படம் நன்றாக ஓடும்என்றார்.

நிருபர்: ”அன்னிய நேரடி முதலீடு சிறு வியாபாரிகளைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்கிறார்கள் இந்த பிரச்னையில் நீங்கள் தெளிவான முடிவைச் சொல்ல வேண்டும். அதிலே ஏன் சஸ்பென்ஸ்?”

கருணாநிதி,  "தமிழ்நாட்டிலேயே உள்ள சில்லரை வியாபாரிகளும், நடுத்தர வியாபாரிகளும், அன்னிய நேர முதலீடு தங்களை பெரிதும் பாதிக்கும் என்று சொல்லுகிறார்கள் அவர்களின் நலன்களை முன் வைத்து தான் இதைப் பற்றி நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம்." என்றார்.

நவம்பர் 25ம் தேதி அடித்த இரண்டாவது பல்டி இது:

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு அனுமதி விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் கொண்டு வந்தால், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என, தி.மு.., தலைவர் கருணாநிதியை, காங்., மேலிட தூதரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், நேற்று சந்தித்து பேசினார்; அவரது சமரச பேச்சு பலிக்கவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவு ஓட்டு தர, தயங்கிய கருணாநிதி, எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

இம்மாதம், 22ம் தேதி, பார்லிமென்டில் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்கியது. இரு நாட்கள் பார்லிமென்டில் கடும் அமளி ஏற்பட்டது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இந்தக் கூட்டத்தொடரை, சுமுகமாக நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு, பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, விவாதத்துடன் கூடிய, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற நோட்டீசை, இடதுசாரி கட்சிகள் அளித்துள்ளன. ஏற்கனவே கருணாநிதி, "சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கு, தி.மு.., ஆதரவு அளிக்காது' என, திட்டவட்டமாகக் கூறினார்.

நவம்பர் 27ம் தேதி மாலை அடித்த மூன்றாவது பல்டி:
கருணாநிதி அறிக்கை

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவினை தி.மு.. ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும்கூட; பாராளுமன்றத்தில் 184-வது விதியின்கீழ் இந்தப் பிரச்னை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற பா... உள்ளிட்ட சில கட்சிகளின் கோரிக்கையைப் பொறுத்த வரை; அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுமேயானால் - இன்று மத்தியிலே உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை.

அதன் விளைவுகளைச் சிந்திக்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, அதன் காரணமாக இமயம் முதல் குமரி வரை பெரும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்அரசுக்கு இழப்பு என்றெல்லாம் இல்லாத புகார்களைக் கற்பனையாகக் கூறி,(அடேங்கப்பா இப்படி பொய் பேச இவரை விட்டால் யார் இருக்காங்க
மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா... ஆதிக்கமோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசோ ஆட்சிப் பொறுப்புக்கு வருமேயானால்;

 இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள்; பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து, அத்தகைய மதவாத அரசோ - ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்கவைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக் கூடாது என்ற நிலைப்பாட்டையும் மறந்து விடுவதற்கில்லை.

இவற்றையெல்லாம் யோசித்து, இந்தப் பிரச்னைக்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது, அன்னிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய எதிர்மறை (கனிமொழி...ராசா..2.ஜி.ஸ்பெக்ட்ரம்.கலைஞர் TV க்கு கடன் வாங்கிய ஊழல்) விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில் இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, தி.மு.. ஆதரவு தர முடிவு செய்கிறது.

இது போன்ற பல்டிகளை தொடர்ந்து கருணாநிதி அடிக்க வாழ்த்துக்கள்!