சுயநலமே மேலோங்கிய இருள் மயமான மானுடவாழ்வில் அவ்வபோது ஒரு சில மனிதாபிமான வெளிச்சமான நம்பிக்கை ஒளிகீற்றுக்களாக வெளிப்படும் சில செயல்பாடுகளால் உலகில் தர்மம்,இரக்கம்,அன்பு,மனிதாபிமானம் ஆகியன இன்னும் பட்டுப்போகவில்லை என நாம் அடையும் சந்தோசத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் எச்ஐவி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நடிகர் கமல்ஹாசன் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச் சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. இம்மாதிரி குழந்தைகளுக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கும் வாழ அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த உரிமைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன், என்றார். நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைப் போல, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல,
சமுதாயத்திற்கு நல்லது நடக்குமேயானால் அடுத்தவர்களுக்கு உதவி கிடைக்குமெனில் தனது கொள்கைகளையேவிட்டு விலகுவதில் தவறு இல்லை எனும் ஓர் அருமையான உன்னதமான முடிவெடுத்த கமலுக்கு வாழ்த்துக்கள்.கமல் சார் உங்கள் பொது தொண்டு தொடர வாழ்த்துக்கள். உண்மையிலே நீங்கள் உலகம் போற்றும் உலக நாயகன் நீங்கள் தான். நிஜம் வேறு , நிழல் வேறு அல்ல என இரண்டும் ஒன்று என வாழ்பவர் நீங்கள்..
உங்கள் சாதனைகள்தொடரவும் தமிழர்கள் சார்பாக நன்றி,வாழ்த்துக்கள்.மற்ற சினிமா பிரபலங்களும் இது பற்றி சிந்திப்பார்களா?
Tweet | |||||
8 comments:
Congratulations Mr.Kamal JIkeep it upthxcheran s
இதே போல பிற முன்னணி நட்சத்திரங்களும் செய்யலாம். கமலுக்கு இம்மாதிரி முடிவெடுத்ததற்காக பாராட்டுக்கள்.
இதே போல பிற முன்னணி நட்சத்திரங்களும் செய்யலாம். கமலுக்கு இம்மாதிரி முடிவெடுத்ததற்காக பாராட்டுக்கள்.
அன்புள்ள திரு கமலஹாசன் அவர்களே அருமையான முடிவெடுத்து எப்போதும உலக நாயகன் என்று நிருபிதீர்கள் நீங்கள் உண்மையானவர் - தமிழர் . மற்றவர்களை போல போலியாக தமிழன் என்று சொல்லாதவர்.ஒரு சிலர் தங்களை நாட்டுக்கு நன்மை செய்வது போல் சினிமாவில் நடித்து கோடி சம்பாதித்து (வாங்கிகொண்டு ) ஊரை ஏமாற்றும் நடிகனல்ல.நன்றி.அருள்குமார் ராஜாராமன்
ஹாய் கமல் சார் உங்களை போன்ற நல்ல உள்ளங்களை பார்க்கும் பொது என் மனது ஆனந்தம் அடைகின்றது. நீங்கள் எப்போதும் உலக நாயகன் தான். உங்கள் பனி தொடருக தொடருக.......... இதை மற்றவர்கள் பின்பற்றியான்ல் நன்றாக இருக்கும் அதேபோல் அவர்களுக்கு ஒரு படமாக இருக்கட்டும். கோடி கோடியை சம்பாதித்து எதற்கு...............
கமல் ஒஉர் உயர்ந்த மனிதர் தான் என்றுமே
I லவ் கமல் நான் உங்களைபோல் ஒரு மனிதரை பார்த்ததில்லை
Post a Comment