Jan 21, 2011

தனது தாய்க்கு விலை வைப்பதற்கு சமம்

ஜன., 25 செவ்வாய்  அன்று தேசிய வாக்காளர் தினம்.
 
அன்று,  வாக்காளர் விழிப்புணர்வு முகாமும்,
 
ஓட்டுசாவடிகளில் வாக்காளர் தினம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

"ஸ்லோகன்கள்' வெளியிடப்பட்டுள்ளது.அவை -
 
 வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்; 
 
வாக்களிக்க தயார் என்போம். மதித்திடுவீர் ஜனநாயகத்தை... 
 
வாக்களிக்க மறவாதீர்.
 
 உங்களது எதிர்காலத்தின் குரல் உங்களது வாக்கு; அதை சரியாக பயன்படுத்துவீர்.
 
 பொறுப்புள்ள குடிமகனின் அடையாளமாக வாக்களிப்போம்; 
 
ஜனநாயகத்தை தழைக்க செய்வோம்.
 
விலைமதிப்பில்லாத உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பதா...
 
 உங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவீர்;
 
எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்.
 
 உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்; சரியாக பயன்படுத்துவீர்.

இதுபோன்ற கருத்துக்களை வாக்காளர்களிடம் எடுத்து கூற வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் ஆலோசனை கூறியுள்ளது. 


மக்களுக்குத்தான்  ஸ்லோகமா?

 வேட்பாளர்களுக்கும் ஸ்லோகன் எழுதலாமே?

எப்படி? இப்படி

வேட்பாளர்களே..... ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றாதே......

சொன்ன வாக்குறுதிகளை காலத்தே நிறைவேற்று.....

தாதாவாக மாறாதே....

மக்களே உனது கடவுள் ...

மக்களின் வயிற்று எரிச்சலை வாங்காதே....

உன் பொண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கு பாவங்களை சேர்க்காதீர்....

மனித நேயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் ....

ஆணவத்தை விட்டு விடுங்கள்.... 

அரசியல் வாதி நல்லவனா என்று பார்த்து ஒட்டு போடவும்.
இதையும்  தேர்தல் ஆணையம்  மக்களின் கருத்தாக  தெரிவித்து புண்ணியம் தேடலாமே 

1 comment:

vasan said...

"ஆயிர‌ம் ஏக்க‌ர் நிலத்துக்கார‌னுக்கும், நிலையான‌து ஆற‌டி"

"லஞ்ச‌த்திற்கு நீளும் கை, கைவில‌ங்கில் சிக்க‌லாம்"

"ஒட்டுப் பிச்சைவாங்கிய‌வ‌ர்க‌ள், டிவி பிச்சை த‌ருகிறார்க‌ள்".

ப‌ணம் சுவிஸ் லாக்க‌ரில், இவ‌ர் திகாரில்.