இந்தத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி பெற்ற 1.90 கோடி வோட்டுக்களில், அ.தி.மு.க. மட்டுமே 1.41 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது 38.41 சதவிகிதம். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 51.80. சென்ற 2006 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, அ.தி.மு.க. இம்முறை 12 சதவிகித வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று முன்னணி வகித்திருக்கிறது.
அ.தி.மு.க. தொடர்ந்து தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொண்டே வந்திருப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, எம்.ஜி.ஆர். இன்றைக்கும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் எம்.ஜி.ஆரும் அவர் உருவாக்கிய இரட்டை இலைச் சின்னமும்தான் வெற்றிச் சின்னங்களாக மக்கள் மனத்தில் பதிந்திருக்கின்றன.
ஆனால், இம்முறை அ.தி.மு.க. பெற்ற வாக்குகளில், தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளும் பெருமளவு அடங்கியிருக்கிறது. எதிர்ப்பு வாக்குகளை அப்படியே தமது அணிக்கு அள்ளிக்கொண்டு வந்தது ஜெ.வின் கூட்டணித் திறன்.
எம்.ஜி.ஆர். என்ற மந்திர எழுத்துக்கள் இன்றும் வாக்குகளாக மாறுமா என்று சந்தேகம் எழுப்புபவர்கள் உண்டு. ஏழை எளியவர்கள் மனத்தில் எம்.ஜி.ஆர். ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், பிம்பம் இன்றும் அப்படியே தொடர்கிறது என்பதைத்தான், இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பணத்துக்கோ இலவசங்களுக்கோ தங்களை அடகுவைத்துக்கொள்ள மக்கள் தயாரில்லை. திறமையை சம்பளம் கொடுத்துப் பெற முடியும்; நேர்மையை அப்படிப் பெறமுடியாது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தங்களுக்குச் சேவை செய்ய, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, சுய நலத்தில் உழலுவதை மக்கள் ஏற்பதில்லை. பதவி கொடுக்கிறார்கள்; அந்தப் பதவியை துஷ்பிரயோகம் செய்பவர்களை, பதவியிலிருந்து நீக்கவும் தயங்குவதில்லை.
நன்றி. கல்கி.மே. 2011.
Tweet | |||||
2 comments:
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
Post a Comment