Aug 28, 2011

ராஜீவ் காந்திகொலை வழக்கு தீர்ப்பின் முரண்பாடுகள்.

ராஜீவ் காந்தி படுகொலை  வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்

இந்திய தண்டனை சட்டம் 302 A தெளிவாக சொல்கிறது. 
கொலை குற்றவாளிக்கும், மற்றும் இன்னொரு பிரிவு கற்பழிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே தூக்கு தண்டனை கொடுக்கிறது.

எந்த இடத்திலும் கொலைக்கு உடந்தையாக இருப்போருக்கு தூக்கு தண்டனை விதிக்க இந்திய தண்டனைச் சட்டம்  இடமளிக்கவில்லை.

இராஜீவ் கொலை குற்றம் சுமத்தப்பட்டது முதல் குற்றவாளி பிரபாகரன் .இரண்டாம் குற்றவாளி பொட்டு அம்மான். மூன்றாம் குற்றவாளி தாணு, சிவராசன் மற்றும் சிலர்.இதில் 18,19,நிலையில் உள்ளவர்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்.

இதில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 129 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிக்கை சொல்கிறது.

26 பேர் (இந்த மூவர் உட்பட) உடந்தை  என்றும் சொல்கிறது.  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் யாருக்கும் இராஜீவை கொல்லபோகிறார்கள் என்கிற உண்மை தெரியாது என்றும் அதே குற்றப்பத்திரிக்கை தான் கூறுகிறது.

வழக்கும் குற்றப்பத்திரிக்கையும் இப்படி இருக்க இருபது ஆண்டுகள் நீடிக்கும் இவ்வழக்கில் இவர்கள் மூவரை தூக்கிலிட எந்த சட்டம் அனுமதி கொடுக்கிறது! இது சட்டத்தை கொச்சை படுத்தும் செயல்.

இவ்வழக்கு ஒரு கொலைகுற்றத்துக்கான வழக்காக நடைபெறாமல், ஏதோ ஒரு இன அழிப்பு குற்றத்துக்காக நடைபெறுவது போல் உள்ளது.
இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டால் சீனாவையும் விட மிஞ்சும் கொடுமையான அடக்குமுறை அரசாட்சி என்று உலகம் இந்தியாவை தூற்றாதா?.

கடுமையான தண்டனை விதிக்கும் அரபுநாடான் சவுதியில் கூட கடந்த மாதம் ஜூலை 31 தேதி இலங்கையை சேர்ந்த ஒரு கொலை குற்றவாளி மன்னித்து விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

இவர்களை விட ஒரு மடங்கு மேன்மையாக அல்லவா இந்தியா இருக்க வேண்டும். கீழ்த்தரமான செயல்களை செய்து இந்திய நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவேண்டாம்.

எனவே மத்திய அரசும்,தமிழக அரசும் தூக்குதண்டனையை தடுத்து நிறுத்தி தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

No comments: