கருணாநிதி இன்று விடுத்த அறிக்கையில்,
“ஸ்பெக்ட்ரம் வழக்கு, அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். அதில் புதிதாக எதுவுமில்லை. ஆனால், அதன்பின் கருணாநிதி கூறியிருப்பவற்றில் இருந்த பல விஷயங்களை ஊகித்துக் கொள்ளலாம்.
“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கைதாகியிருக்கும் பலருக்கு, விசாரணை ஏதுமில்லை. ஜாமினும் வழங்கப்பட இல்லை. இந்த வழக்கு நடக்கும் கோர்ட்டில், ஏதேதோ காரணங்களைக் கூறி, காலம் கடத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட பல ஏடுகள் கூட, ஜாமின் வழங்காமல் இருப்பதையும் கண்டித்து, கட்டுரை மற்றும் தலையங்கம் எழுதியுள்ளன” என்கிறது கருணாநிதி அறிக்கை.
இதிலிருந்து புரிவது என்ன?
ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று கருணாநிதி சொல்லவில்லை. இந்த ஊழல்பற்றி கடும் விமர்சனங்களை வெளியிட்ட ஊடகங்கள், தவறாக விமர்சிக்கின்றன எனவும் கருணாநிதி சாடவில்லை.
மாறாக, அந்த ஊடகங்களே, ஜாமீன் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன என்று அவற்றை சப்போர்ட்டுக்கு இழுக்கிறார் கருணாநிதி. தர்க்க அடிப்படையில், குறிப்பிட்ட ஊடகங்கள் ‘ஜாமீன்’ விஷயத்தில் கூறுவதை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறார் என்றால், ஊழல் பற்றிய அவர்களது விமர்சனங்களையும் கருணாநிதி ஏற்றுக் கொள்கிறார்.
அந்த விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
தி.மு.க.வினர் செய்த ஊழல்தான் இது என்கின்றன. இதில் கலைஞர் கருணாநிதி குடும்பத்துக்கு பெரிய பங்கு இருப்பதாகக் கூறுகின்றன.
கருணாநிதி அறிக்கையின் அடுத்த பகுதியைப் பாருங்கள்:
“இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் சிறையிலே உள்ள பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில், ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், கனிமொழி, சரத்குமார் மீது, கலைஞர் டிவி சம்பந்தமான காசோலை கொடுக்கல், வாங்கல் என்ற நிலையில்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இருவர் மீதும், நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை. இருப்பினும், 120 நாட்களாக விசாரணை இல்லாமல், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமின் வழங்குவது சம்பந்தமாக, இந்த வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என, கோர்ட் கூறியிருந்தது. ஆனால், டிராய் அறிக்கை அடிப்படையில், வழக்கு விசாரணையை கோர்ட் பதினைந்து நாட்கள் ஒத்தி வைத்துள்ளது”
அறிக்கையின் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
கனிமொழியை வெளியே கொண்டு வருவதற்காக, ஆ.ராசாவையும், மற்றையவர்களுக்கும், ஊழலில் ஏதோ தொடர்பு இருப்பதை ஒப்புக் கொள்கிறார் கருணாநிதி. கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக, மற்றையவர்களை கைகழுவி விடவும் தயாராகி விட்டார் கருணாநிதி.
இதை நன்றாகப் புரிந்துகொண்டு ஆ.ராசா, ‘வாயைத் திறந்தால்’ என்னாகும்? அதுகூட ஒரு ரிஸ்க் பாக்டர்தான்!
நன்றி:viruviruppu.com
Tweet | |||||
2 comments:
ராசா வாய் திறந்தால் தி.மு.க விற்கு மட்டுமல்ல, காங்ரஸிலிருந்து (குறிப்பாக ப.சி) பி.ஜெ.பி வரை மாட்டுவாங்க... நல்ல கட்டூரை.. வாழ்த்துக்கள்
ராசா வாய் திறந்தால் தி.மு.க விற்கு மட்டுமல்ல, காங்ரஸிலிருந்து (குறிப்பாக ப.சி) பி.ஜெ.பி வரை மாட்டுவாங்க... நல்ல கட்டூரை.. வாழ்த்துக்கள்
Post a Comment