நான் நாற்பதுகளிலேயே, சின்னச் சின்னதாய் நாடகங்கள் எழுதத் தொடங்கி –திருச்சி தேவர் ஹாலில் அரங்கேற்றுவதுண்டு. அமரர் திரு.ரத்தினவேலுத் தேவரின், அருமைப் புதல்வன் திரு.கணேசன் என் ஆருயிர்த் தோழன்.
அப்படியிருந்தும் நாடகம் போட, சில நேரங்களில் தேவர் ஹால் கிடைக்காமல் போகும்.‘City Club’-ல் – சீட்டாடிக்கொண்டிருக்கும் அன்பில் தர்மலிங்கத்திடம் போய் நிற்பேன்; அடுத்த விநாடி ஹால் கிடைத்துவிடும்!
திருவானைக்காவலில் – ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியின் பராமரிப்பில் உள்ளது.அங்கு ‘காலேஜ் குமாரி’ என்று ஒரு நாடகம் நான் எழுத பள்ளி மாணவர்களை வைத்துப்போட்டேன்.
இதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க, இரு பையன்கள் வருவார்கள். இருவரும் வயது இருபதை நெருங்கிக்கொண்டு இருந்தவர்கள். சற்று முன்பின் கூட இருக்கலாம்.
குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.
இன்னொரு இளைஞன் – நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன். அந்த இளைஞன் பக்கத்தில் உள்ள T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக்கொண்டிருப்பவன்.
‘பாய்ஸ் கம்பெனி’யில் ஏற்கனெவே இருந்துபழக்கப்பட்டவன்.அவனுக்கு நடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் – பள்ளி மாணவனாக இல்லாததால் நான் சொன்ன பெண் வேஷத்தைப் போட இயலவில்லை!
இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டு – நான் ‘INNOVA’ காரில் திருச்சி வந்து சேர்ந்தேன்!
நாடகத்தில் பெண் வேடம் போட மறுத்த பாடசாலை மாணவர் தான் –காஞ்சி மடாதிபதி திரு.ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
நாடகத்தை வேடிக்கை பார்த்த – T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணிபுரிந்த பையன் பேர் திரு.கணேசமூர்த்தி. சிவாஜி கணேசன் என்று சொன்னால் புரியும்! நன்றி
கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)
Tweet | |||||
1 comment:
இரண்டு பேரும் பெரிய நடிகர் ஆகிவிட்டார்கள்.
பெரியார் "சிவாஜி" ஆக்கினார்.
பெரியவாள் "சினிமாவில் நடிப்பதைத் தவிர மீதியெல்லாம் இவா பண்ணிண்டுருக்கான்னு" சர்டிபிகேட் கொடுத்து வருந்தினாராம்.
Post a Comment