அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங்
கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது
நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது
வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம்
என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு
ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்"
தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்?
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும்
இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும்
கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை
போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்'
பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி
விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில்
கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.
என்னுடைய கேள்வி
என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?
பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது
நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
இந்த
அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு
விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன்
நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
எத்தனை எத்தனை ஏழை
மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?
அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்
திருடுவது?
பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்
கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?
மில்லி கிராம் தங்கம்
கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான
ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும்.
விரைவில்இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...
நன்றி :- Subra Maniyan & Muruganjapan Japanmurugan..facebook.
அதுவும் உங்களால் தான் முடியும்...
நன்றி :- Subra Maniyan & Muruganjapan Japanmurugan..facebook.
Tweet | |||||
1 comment:
நண்பரே நீங்கள் எழுதி இருக்கும் பதிவு தவறானது .
மன்னிக்கவும் .KDM வகை நகைகள் செய்யும் போது சேதாரம் இல்லாமல் நகை வாங்க முடியாது .
KDM வகை நகைகள் உதாரணமாக 91.6 % நகைகள் நீங்கள் வாங்கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந்த நகையை உருவாக்க நீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .
ஒரு நகை செய்யும் போது சேதாரம் ( கழிவு ) போகும் .அதாவது உ-தா பாலிஷ் செய்ய ,உருக்கும் போது ,நகை டிசைன்களுக்கு ,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .
KDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80 % மே இருக்கும் .
இது தான் KDM நகைகளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் .
எந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .
ஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம் ,தாழ்வு வரலாம் .அந்த லாபத்தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம் ,வரி ,கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .
பின் குறிப்பு : நான் நகை கடைக்காரன் அல்ல .நகை தொழிலை நன்கு அறிந்தவன் .நகை கடை வைத்து உள்ளவர்கள் எல்லோரும் அதிகம் சம்பாதிப்பது இல்லை .பெரிய கடைகளில் அதிக விற்பனை நடைபெறுவதால் அதிக லாபம் ஈட்டுகிறார்கள் .
இந்த பதில் எல்லோருக்கும் உணர்த்தவே அன்றி கயபடுத்த அல்ல நண்பரே !
Post a Comment