Jan 31, 2013

இந்துக்களும் உங்களுடன் இணைந்து போராட தயாராகவே இருக்கிறோம்.



விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லீம் சகோதரர்களின் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஒரு விமர்சனத்துக்கோ அல்லது கண்டனத்துக்கு குறிப்பிட்ட வரம்பு உள்ளது.
அந்த வரம்புக்குள் தன் எதிரியை அல்லது சம்பந்தப்பட்டவரை விமர்சிக்க வேண்டுமே தவிர அதை விடுத்து மிக கொடிய வார்த்தைகளால் விமர்சிப்பது எதிரிக்கு பதில் சொல்ல தெரியாதவனின் கையாலாகத்தனம்.

சென்னை மண்ணடியில் நடந்த கூட்டத்தில் "விஸ்வரூபம் அடுத்து என்ன"எனும்
தலைப்பில் பேசிய பி.ஜைனுல் ஆபிதீன் நீ உன் குடும்பத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாயா?என பாரதிராஜாவையும், நீ உன் அப்பனுடன் படுக்க ஆசைபடுகிறாயா ? என்று ஸ்ருதிஹாசனையும் கேட்கிறார். ஒரு பழுத்த அரசியல்வாதியும் முஸ்லிம்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டிய ஒருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை. 

நபிகள் நாயகத்தின் போதனைகளை படித்தவர்  இப்படி பேசலாமா? இதற்கு பதிலடி கொடுப்பது போல் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதில் பேசினால் என்னவாகும் என யோசித்து பார்த்தாரா? அவர் கேட்ட அதே வார்த்தையை கமலஹாசனோ அல்லது அவரது பெண்ணோ பேசியிருந்தால் இந்துக்களும் , முஸ்லிம்களும் அடித்து கொண்டிருப்பார்கள். நீ உன் வீட்டில் பதுங்கி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாய். அப்பாவி இந்துக்களும் ,முஸ்லிம்களும் பாதிக்க பட்டிருப்பார்கள். நீ சிலரின் முன் ஹீரோவாக அப்பாவி மக்களை பலியாக்காதே.

விஸ்வரூபம் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை.ஆனால் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள கேரளாவில் வெளியாகிவிட்டது.படத்தை பார்த்த முஸ்லிம் நண்பர் ஒருவர் பேஸ்புக் வலைத்தளத்தில் அப்படி தவறான கருத்து எதுவும் இல்லை என கூறியிருக்கிறார்.ஆப்கான் தீவிரவாதத்தையும்,அங்கு நடக்கும் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை பற்றியுமே படம் நகர்கிறது.கதைப்படி தீவிரவாதிகளின் தலைவன் கமலிடம் தமிழில் பேசுகிறார். நீங்கள் எப்படி தமிழ் பேசுகிறீர்கள் என  கேட்கும் போது அவன் தமிழ் நாட்டில் கோவை மதுரை போன்ற இடங்களில் சில காலம் பதுங்கியிருந்தேன் என கூறுகிறாரன். அவ்வளவுதான்.இதில் ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் முஸ்லிம்களையே தவறாக கூறியது போல் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்.இதைவிட கொடுமை இதை சொன்ன முஸ்லிம் நண்பரை நீ இஸ்லாமியனே அல்ல என தூற்றுகின்றனர்.

அடுத்து கமல் என்ன படம் எடுத்தாலும் வெளியாகும் சமயத்தில் அதற்க்கு
தொந்தரவு செய்தால் நாமும் பிரபலம் ஆகிவிடலாம் எனும் போக்கு
தற்போது அதிகரித்து வருகிறது. விருமாண்டி படத்திற்கு முதலில் "சண்டியர்"
என பெயர் வைத்து இருந்தார் அதை மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர். படம் வந்ததும் தான் தெரிந்தது அது மரணதண்டனை வேண்டாம் என கருத்து சொல்ல பட்ட அருமையான திரைப்படம். 

அடுத்து வசூல்ராஜா MBBS.மருத்துவர்களை தவறாக சித்தரிக்கிறார் என மருத்துவர்கள் போராட்டம் செய்தனர். மறுபடியும் கமலஹாசன் அவர்களின் முகத்தில் கரியை பூசினார்.மருத்துவர்கள் நோயாளிகளிடம் எப்படி பழக வேண்டும் என மருத்துவர்களுக்கே பாடம் நடத்தினார்.  விஜயகாந்தின் "ரமணா" வில் மருத்துவத்துறையின் மறுமுகத்தை கிழித்து எறிந்தார்களே அப்போது எந்த போராட்டமும் இல்லை.அதே போல்தான் இதுவும் விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் வெளியாகாமல் போகாது. அதை பார்த்து விட்டு எந்த முஸ்லிம் தோழனும் வருத்த பட்டால் அனைத்து இந்துக்களும் உங்களுடன் இணைந்து போராட தயாராகவே இருக்கிறோம். 


9 comments:

Viswa said...

Very good post :-)

Rathna said...

Am not a Hindu, but this what we need. keep it up.

okyes said...

U have told. But u will never do.

Anonymous said...

வீண் எதிர்ப்பரசியல் எதிரிக்குழுவினருக்கு ஆதரவு சேர்த்துவிடும் என்பதை மறந்ததன் விளைவு. ஜெயாவுக்கு எதிர்ப்பு வந்து முகவுக்கு சற்றே ஆதரவு அலை தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு வந்து இந்து மதவெறியர்கள் தேவையோ என்ற நினைப்பு விதைக்கப்பட்டுள்ளது. இரண்டுமே ஆபத்தான பின்விளைவுகளைத் தரலாம் என்பதை நினைவுப் படுத்திச் செல்கின்றேன்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Mohamed Bismillah.


இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். சபை நாகரிகம் என்பதை இஸ்லாம் சரியாக போதித்துள்ளது. இவ்வாறு பீ.ஜே அவர்கள் பேசியது சற்று வருத்தமாகதான் உள்ளது. இஸ்லாம் எங்களுக்கு போதித்தது எதிரியிடமும் அன்பை காட்டு என்பது தான். ஆனால் ஒன்றை மற்றும் புரிந்துக் கொள்ளுங்கள் இந்து சமய சகோதரர்களே புண்பட்டது, புண்படுவது, புண்படப்போவது எப்பொழுதும் எங்கள் சமுதாயமாகத்தான் இருந்துள்ளது. அதனை சிந்தித்து பாருங்கள். மேலும் பாரதிராஜா, ரமேஷ் கன்னா மற்றும் விக்ரமன் போன்றவர்கள் பேசியது வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல் இருந்தது. நடுநிலைமையோடு சிந்தியுங்கள்.

Unknown said...

Mohamed Bismillah

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். சபை நாகரிகம் என்பதை இஸ்லாம் சரியாக போதித்துள்ளது. இவ்வாறு பீ.ஜே அவர்கள் பேசியது சற்று வருத்தமாகதான் உள்ளது. இஸ்லாம் எங்களுக்கு போதித்தது எதிரியிடமும் அன்பை காட்டு என்பது தான். ஆனால் ஒன்றை மற்றும் புரிந்துக் கொள்ளுங்கள் இந்து சமய சகோதரர்களே புண்பட்டது, புண்படுவது, புண்படப்போவது எப்பொழுதும் எங்கள் சமுதாயமாகத்தான் இருந்துள்ளது. அதனை சிந்தித்து பாருங்கள். மேலும் பாரதிராஜா, ரமேஷ் கன்னா மற்றும் விக்ரமன் போன்றவர்கள் பேசியது வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல் இருந்தது. நடுநிலைமையோடு சிந்தியுங்கள்.

arul said...

true words good post