Dec 12, 2013

ராகுல்காந்தியின் அசிங்கங்கள் - சுப்ரமணியன் சுவாமி.# லண்டனில் இருக்கும் ரௌலிங் கல்லூரியில் 1995 ஆம் ஆண்டில் ராகுல் காந்தி எம் ஃபில் படித்ததாக இங்கே புளுகிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த கிறித்துவமிஷனரி கல்லூரியில் இவரது பெயரை எங்கும் காணோம். ரோலர் லிஸ்டிலும் தேர்வுப் பட்டியலிலும் எங்குமே காணோம். இவர் அதை இல்லை என்று நிரூபிக்கமுடியுமா..?

# அதற்கும் முன்னால் ஹார்வர்ட் பல்கலையில் படித்ததாகக் கூறி இருக்கிறார். அது உண்மை. ஆனால் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு இந்துஜாக்கள் அளித்த 11 மில்லியன் டாலர்களின் டொனேஷன் கோட்டாவில் இவருக்கு சீட் கிடைத்தது நிஜம். ஆனால் அங்கே கோட்டாவில் சேர்ந்தாலும் படித்து முன்னேறவில்லை என்றால் வெளியேற்றி விடுவார்கள். இவர் சரியாக மூன்றே மாதத்தில் அங்கே இருந்து வெளியேற்றப்பட்டார். துரதிருஷ்டவசமாக என்னைப்போல ஹார்வர்ட் பல்கலைக் கழக சிறப்புப்பேராசியர் இந்தியாவில் அமைந்ததால் அவர் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பற்றி தற்போது வாயைத் திறப்பதில்லை.

# ஏன் இப்படிப் பொய் சொல்லவேண்டும்..? நம் நாட்டில் கல்விக்கு அல்ல நேர்மைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம். பிறகு ஏன் இப்படிப் புளுகவேண்டும்..?

# ராகுல் காந்தி இந்தியரா..? கண்டிப்பாக கிடையாது. இத்தாலிய குடியுரிமைச் சட்டத்தின் படி இத்தாலியத்தாய்க்கு பிறக்கும் குழந்தை எங்கே பிறந்திருந்தாலும் இத்தாலியப் பிரஜைதான். 1970 இல் ராகுல் காந்தி பிறந்த போது சோனியாகாந்தி இத்தாலியப்பிரஜை தான்.. ( இப்போதும் கூடத்தான் ) அப்படி இருக்க ராகுல் காந்தி இத்தாலியப் பிரஜைதான். இந்தியாவில் பிறந்தமைக்காக இந்தியப்பிரஜை என்று உரிமை கொண்டாடலாம். ஆனால் அதற்கு இத்தாலியப் பிரஜைத்தனத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டும்.. அப்படித்தான் இந்திய பிரஜா உரிமைச் சட்டம் கூறுகிறது. ராகுல் காந்தி செய்திருக்கிறாரா என்று சான்றுடன் நிரூபிக்கட்டும். ஆக ராகுல் காந்தி இந்தியர் இல்லை.

# இப்போதும் இத்தாலிய பாஸ்போர்ட்டில் ராவுல் வின்சி என்னும் பெயரைப் பயன்படுத்தி இத்தாலியப் பிரஜையாகத்தான் இருக்கிறார். இது என்ன ஃப்ராட் தனம்..? இரட்டை குடியுரிமைத்தனம்..? காங்கிரஸ் அல்லாத ஆட்சியில் காசுக்கு விலைபோகாத அமைச்சர்கள் வந்தால் ராகுல் காந்தியும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

# ராகுல் காந்தி பாஸ்டன் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அவரது கையில் 160000 டாலர் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ( 10 ஆயிரம் டாலருக்குமேல் அமெரிக்கா செல்பவர்கள் கையில் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. ) அவர் கைது செய்யப்பட்டபோது அவருடன் வெரொனிக் கத்தலி என்னும் அவரது கேர்ள்ப்ஃப்ரெண்ட் இருந்தார். அவர் ஸ்பெயினைச் சேர்ந்தவர். ட்ரக் மாஃபியாவின் மகள். அமெரிக்க எஃப் பி ஐ கைது செய்து இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்தது. இது நடந்த தேதி 27 செப்டம்பர் 2001.

# ராகுலுக்குக் காவலாய் இருந்த எஸ்பிஜி கமேண்டோக்கள் ராகுல் காந்தி அரசாங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியும் அமெரிக்க எஃப் பி ஐ விடவில்லை. 9 மணிநேரம் அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்திய அரசாங்கம் தலையிட்டு இந்தோ - யு எஸ் நல்லுறவை அடிப்படையாகக் காட்டி ராகுலை கேஸ் பதிவு செய்துகொண்டு விடுவித்தது. இதுகுறித்தான வழக்கைப் பற்றி நான் ஆர் டி ஐ மூலம் கேட்டதற்கு அமெரிக்க எஃப் பி ஐ தொடர்புடையவர் ( ராகுல் காந்தி ) சம்மதக்கடிதம் இல்லாமல் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. இது குறித்து ராகுல் காந்திக்கு அனுமதிக்கடிதம் கேட்டு எழுதினேன். அவர் பதில் தரவே இல்லை.

# ராகுல் காந்திக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்று தெரிந்துகொள்ள இந்தியர்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா..? டெல்லியில் துக்ளக் ரோடில் இருக்கும் ராகுல் காந்தியின் இல்லத்தில் வெரொனிக் கத்தலிக் என்னும் வெளிநாட்டுப் பெண் ராகுலுடன் வசிக்கிறார். அவருடன் திருமணம் ஆகி இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க ராகுல் கடமைப்பட்டிருக்கிறாரா இல்லையா..? ஏன் அறிவிக்கவில்லை..? ஒரு ட்ரக் மாஃபியாவின் மகளை வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் வைத்திருக்கும் ராகுல் அடுத்த பிரதமராக வரவேண்டுமா..? சிந்தியுங்கள்.

# சோனியா காந்தி இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகில் இருந்து இந்தியாவில் இந்துமத விழுமியங்கள் தாழ்ந்துகொண்டிருக்கின்றன. சங்கராச்சாரியாரின் கைது ஒரு உதாரணம். அதுவும் மிகச்சரியாக தீபாவளி தினத்தன்று கைது செய்யப்பட்டார். ஓரிரு நாட்கள் பொறுத்திருந்திருக்கலாம். அவர்மேல் புகார் இருப்பின் ஆசிரமத்தில் காவல் வைத்திருக்கலாம். ஆனால் ஒரு மதத்தலைவரை ஒரு கிரிமினலைப் போல சிறையில் அடைத்தனர். சோனியாவின் அழுத்தத்தினால் ஜெயலலிதா செய்த வேலை இது. வேறு ஒரு மதத்தலைவர்களை இதுபோல் சிறையில் அடைக்க முன்வருவார்களா..?

இத்தனைக்கும் பிறகும் சோனியாவின் ராகுலின் இந்த காங்கிரஸ் ஆட்சியில் இருக்கத்தான் வேண்டுமா..?
நன்றி: தமிழாக்கம் : கலைவேந்தன்.

2 comments:

நேர்கோடு said...

//சோனியாவின் அழுத்தத்தினால் ஜெயலலிதா செய்த வேலை இது.

Hilarious!

rahul's thoughts said...

2001 WHEN Rahul was arrested, it was bjp in power. why did they keep it silent, why didn't they arrest him. why didn't they take action for possessing dual citizenship?