ராஜீவ்
கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற
முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை
பெற்ற நளினி, ராபர்ட் பயஸ்,
ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 23 ஆண்டுகளாக
சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு
தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. எப்போது தூக்கு என்று
தெரியாமல் நித்திய கண்டம், பூரண
ஆயுசாக அவர்கள் தவித்திருக்கும் தவிப்பை,
ராஜீவ் காந்தி கொலையை மறந்துவிட்டு
நினைத்துப் பார்த்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கும் நியாயம் புரியும்.
காலதாமத்தைக்
காரணம் காட்டி ராஜீவ் கொலையைளிகளின்
தூக்கு தண்டனையை ரத்து செய்து, மாநில
அரசின் ஒப்புதலுடன் விடுதலை செய்ய வழிகோலும்
அதே வேளையில், கருணை மனுவை நிராகரிக்க
கால அளவு நிர்ணயிக்க உச்சநீதிமன்றத்துக்கு
அதிகாரம் இல்லை என்பதால், அதுவும்
தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நியாயமான காலத்துக்குள் அவர்கள் கருணை மனுக்கள்
மீது முடிவு எடுக்க வேண்டும்
என்பதுதான் எதிர்பார்ப்பு. கருணை மனுக்கள் மீது
முடிவு எடுப்பதில் நியாயமற்ற, விவரிக்க முடியாத, தேவையற்ற தாமதம் ஏற்படுமானால் அப்போது
மனுதாரர்களின் கோரிக்கையில் தலையிட வேண்டிய கட்டாயம்
உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு' என்கிறது தீர்ப்பு.ராஜீவ் கொலை வழக்கு தண்டனையை ஒதுக்கிவைத்துவிட்டு கருணை மனு மீதான காலதாமதத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பாராட்டுகள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கும் தமிழக அரசின் முடிவும் வரவேற்புக்குரியது.
Tweet | |||||