Jun 25, 2010

கிளம்பிற்று தமிழ்ச்சிங்கக்கூட்ட ஜால்ராக்கள்

                               செம்மொழி மாநாட்டின்  கவியரங்கம் .

ஜால்ராக்கள் அனைவரும், தமிழ் புகழ் பாடுவதற்கு பதிலாக, கலைஞர் புகழ் பாடுகின்றனர். இதற்காகத்தானே 500 கோடி செலவு செய்தது  இந்த அரசு.     ஐயா கவிஞர்களே கலைஞரை புகழத்தான் ஒரு மாநாடு அப்படின்னு சொன்னத நிருபிசிடிங்க.இது தமிழுக்கு விழாவா தமிழை யாரும் வாழ்த்த வில்லை . கலைஞரை தான் மூச்சுக்கு முன்னுறு தடவை வாழ்த்தரங்க என்னமோ இவர் ஒருத்தர் தான் தமிழன் மாதிரி இந்த ஜனங்களும் ஆட்டு மந்தைகள அங்க போய் குவிதுங்க மொத்தத்தில் 500 கோடி வேஸ்ட்.  10 ரூபா சம்பதிக்கனும்னா எவ்வளவு கஷ்டம்னு மக்களுக்கு தான் தெரியும் அதை எவ்வளவு ஈஸியா செலவு செய்யறாங்க இந்த பாவத்தை நல்ல அனுபவிப்பாங்க.

                                                                                                  


            ஒவ்வொரு கவிஞருக்குமே தனித்தனி தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தாலும் எல்லாமே ஒரே மாதிரி இருந்தன. குறிப்பாகத் தலைப்பு சம்பந்தமாகவோ, தமிழ் சம்பந்தமாகவோ எதுவும் இல்லை. எல்லாருக்குமே கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

கவிஞர் வைரமுத்து .கவிதை
     
    இயக்கத்தின் தலைவராக இருந்த நீங்கள் மக்கள் இதயத்தில் வீற்று இதயத்தலைவராக இருக்கின்றீர்கள், வீடு தந்தீர்கள், இந்திய அரசியல் படம் போட்ட வீடு , தியாகத்தில் நீ புடம் போட்ட வீடு தந்தீர்கள், அறம் ,பொருள், இன்பம் என 3 தந்தார் வள்ளூவர், ஆனால் நீ இத்துடன் வீடும் ‌கொடுத்து வள்ளூவரை வென்று விட்டீர்கள், , கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும், கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும்

நா.முத்துக்குமார்  கவிதை
               
                               தலை வைத்ததால் தண்டவாளம் கூட தமிழ் பேச கற்றுக்கொண்டது. கலைஞர் கால் வைத்ததால் கோவை மாநகர் செம்மொழி மாநாடு நடக்கும் தகுதி பெற்றது.கலைஞர் திரை உலகை வென்றவர், எல்லோரது பேனாவும் மீன் பிடிக்கும், கலைஞர் பேனா விண்மீன் பிடிக்கும், கலைஞரும், கடிகாரமும் ஓன்று . இவ்வாறு  கவிதை படித்தார்.

நெல்லை கவிஞர் ‌ஜெயந்தா கவிதை
          
                                      அரச மரம் அருகே ஆல மரம் இருக்கும். இதில் விழுதுகள் இருக்கும் ஆனால் நீ அதிசய ஆலமரம் எனவே உனக்கு அருகே விருதுகள் இருக்கிறது. வைகை கூட தன்மானம் உள்ளது இது போல தமிழின் தன்மானம் காக்க கலப்படம் இல்லாத கண்ணீராக இருக்க வேண்டும்.  கண்ணில் கவர்ச்சி, கண்ணத்தில் குழி இருப்பது போல், நாக்கில் மொழி இருக்கட்டும்.  அந்த வள்ளூவன் தமிழ் கிடைத்தபோது அதிகாரங்களை பாடினான். இவர் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் தமி‌ழை பாடினார். தன்மானம் காத்த தமிழ்தலைவர்கள் பெயர்களை உயிருள்ளவரை நாக்கில் பச்சைக்குத்திக்கொள்வோம்.

 தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை

                                 இக்காலத்து இளங்கோ நீ, உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான் உனக்கு, ஏழைகளின் இக்கால குலோத்துங்கன், குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடு கொடுத்த கரிகாலன், செம்மொழி மாநாட்டிற்கு கோவையை தேர்வு செய்த தமிழ்கால பாண்டியன், பாட்டுடை தலைமகனே, செம்மொழி நாயகனே !  கருணாநிதியை வர்ணித்தார்.

ஈரோடு தமிழன்பன்,கவிதை

                    "கலைஞர் என்பதுதாயின் ஆண்பால் பெயர்.அவர் வேட்டி கட்டுகிறார்,ஆனால், அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...அவரது கபால களஞ்சியத்தில்ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டைகொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்இவர் இருந்திருந்தால்,அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்..

கவிஞர் விவேகா .கவிதை

 எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்..."சென்னைக்கு தெற்கே உள்ளதிருக்குவளையின் தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'எனத் துவங்கி, முதல்வர் கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே போனார். இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர். காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க... கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.

 பேராசிரியர் கருணாநிதி  கவிதை

. "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின் இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர் தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே... பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார்.

மரபின் மைந்தன் முத்தையா கவிதை

"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?மண்ணெடுத்தார் மாலையிலேதார் தெளித்தார் இரவினிலே
காலையில் கண் விழுத்து பார்க்கையிலேகண்ணாடி போல மின்னியது சாலை.சறுக்கிவிட்ட பள்ளங்கள் சமச்சீராய் ஆனதுவழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறதுவெறிச்சோடி கிடந்த வீதி சந்துகளும்
குளித்து தலைமுழுகி கலகலப்பாக இருக்கிறது. துணைமுதல்வர் வந்து வந்துதூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா வெளிச்சத்தில்ஜொலிக்கிறது எங்கள் கோவை...' என்றார்.


கலைஞரின் பேத்தி கயல்விழி வெங்கடேஷு கவிதை 


அவர் வாசித்த அழகைப் பார்த்தால் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று தோன்றியது. மா.....................றி விடும், கலைங்கர் அவர்கல் ச்செம்மொழியின் காவழர் என்றெல்லாம் முழங்கியபோது செம்மொழி சீக்கிரம் செத்துவிடும் என்று தோன்றியது.

அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா, "தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கியமுழக்கத்தை, முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர்.

          ஜால்ராக்கள் அனைவரும், தமிழ் புகழ் பாடுவதற்கு பதிலாக, கலைஞர் புகழ் பாடுகின்றனர். இதற்காகத்தானே 500 கோடி செலவு செய்தது  இந்த அரசு.     ஐயா கவிஞர்களே கலைஞரை புகழத்தான் ஒரு மாநாடு அப்படின்னு சொன்னத நிருபிசிடிங்க.இது தமிழுக்கு விழாவா தமிழை யாரும் வாழ்த்த வில்லை . கலைஞரை தான் மூச்சுக்கு முன்னுறு தடவை வாழ்த்தரங்க என்னமோ இவர் ஒருத்தர் தான் தமிழன் மாதிரி இந்த ஜனங்களும் ஆட்டு மந்தைகள அங்க போய் குவிதுங்க மொத்தத்தில் 500 கோடி வேஸ்ட்.  10 ரூபா சம்பதிக்கனும்னா எவ்வளவு கஷ்டம்னு மக்களுக்கு தான் தெரியும் அதை எவ்வளவு ஈஸியா செலவு செய்யறாங்க இந்த பாவத்தை நல்ல அனுபவிப்பாங்க.
                                                                                           
                                                                                              இது மக்களின் சாபம் .

                          

No comments: