Aug 8, 2010

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது முடியாத காரியம்.


காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே, அதை விட காங்கிரசுக்கு ஒரு தற்கொலை முயற்சி வேறொன்றும் இருக்க முடியாது.தமிழகத்தில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்தி 43 வருடங்கள் ஓடிவிட்டன.மாண்டவன் மீண்டு  வந்தாலும் வரலாம் ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது  முடியாத காரியம்.காமராஜர் ஆட்சியின் போதுதான் மாநிலப் பிரிவினையின்பெயரில்இயற்கைவளமும்,நீர்வளமும்,நிறைந்த பகுதிகளை கேரளாவிடம் பறிகொடுத்தது.  மலம்புழா டேம்  ,கொல்லங்கோடு, நெம்மாரா,   பாலக்காடு மாவட்டத்தின் பெரும் பகுதிகள் ,நெல்லியாம்பதி,ஆழியாறு டேம் , தேவி குளம், பீர்மேடு, மூணார்,குமுளி, வண்டிப்பெரியார்,ஆகிய பெரும் பான்மையான தமிழகத்திற்கு என்று  ஈடு செய்ய முடியாத இழப்பு  ஏற்பட்டது. அதனால் இன்று  தென்தமிழகத்தில்  தண்ணீர் பிரச்னை..இதை காமராஜரின் புகழ் பாடும் காங்கிரஸ் கதர்  சட்டைகளால் மறுக்க முடியுமா?. இல்லை உண்மைத் தமிழர்களால் இதை மறக்க முடியுமா?

அதே போல் இந்தியாவின் பிரதமர் யார் என தீர்மானிக்க வேண்டிய தருணத்தில் தேச நலனை விட, கட்சி நலனை விட , நேரு குடும்ப பாசத்தால்  இந்திராவை பிரதமராக்கியதால்  இந்தியாவின் எதிர் காலமே சிதைந்து போய்  இன்றைய அரசியல்  அலங்கோலங்கள் அரங்கேற காரணமானார் காமராஜர். .இது தான் தமிழக காங்கிரஸ் கதர்சட்டைகளின்  ஆசையா?. .
.
காமராஜர் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் இந்திராஅம்மையாரின் ஆட்சியின் அராஜகத்தை பொறுக்க முடியாமல்  காங்கிரஸ் கட்சியை வெறுத்து  தனியாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தார் இது வரலாறு. இப்பொழுது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே  அது ஸ்தாபன காங்கிரஸ்ஆட்சியா?. அல்லது இந்திராஅம்மையாரின் ஆட்சியா? எந்த  ஆட்சி அமைக்க போகிறிர்கள்?. ஏனென்றால்  காமராஜர் தன் கடைசி காலத்தில் இந்திராஅம்மையாரின் எமர்ஜென்சி ஆட்சியின் அராஜகத்தை பொறுக்க முடியாமல்  அந்த வேதனையால் மனம் நொந்து அதனாலேயே மரணமடைந்தார்  என்பது  வரலாறு .மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு குடும்பமும் பல தலைமுறையாக இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் கசப்பான உண்மை. அதேபோன்ற காமராஜர் ஆட்சி  என்ற  பெயரில் மீண்டுமொருமுறை தமிழகம்     தன் இனஉணர்வு இழந்து ,மொழி உணர்வு இழந்து,  அவமானத்தை  சந்திக்க வேண்டுமா?.மீண்டுமொருமுறை தமிழகம் சந்திக்காமல் இருப்பதுதான்  தமிழக மக்களின் ஆசையும்  இதுதான் .

2 comments:

vijayan said...

ஊழல் செய்து மாட்டிக்கொண்டு sarkaariya commission நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இந்திரா மிரட்டலுக்கு பயந்து கட்ச தீவை இலங்கைக்கு தாரைவார்ததை விட நமது தேசதிர்க்குள்ளேயே சில பகுதிகளை சென்னயை மீட்பதற்காக விட்டுக்கொடுத்தது தவறில்லை.

Thamizhan said...

தமிழர்களின், தமிழினத்தின் முதல் எதிரி காங்கிரசுதான்.ராகூல் பெரோசு...( காந்தி, காந்தியார் ராகூலின் தத்தாவின் திருமணத்தை எதிர்த்த நேரு பெருமானுக்காகக் கொடுத்த ஓசிப் பெயர்) தமிழர்கள் ஏன் மற்ற இந்தியர்களைப் போல இந்தி அடிமைகளாக இல்லை, அதை எப்படிக் கொண்டுவருவது, திராவிடப் பரம்பரையை எப்படி அடிமையாக்குவது என்பதிலேதான் குறியாக இருக்கிறார். இதை இப்போதே உண்ராமல் இன்னும் பல "அறிஞர்கள்" பல்லிளிப்பது தான் வெட்கமும்,வேதனையும் தருகிறது.ப்.சி க்களும்,உளறல்கோவன்களும்,தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கட்டுமே.திராவிடக் கட்சிகளின் மேல் சவாரி செய்தது போதும்.காங்கிரசைக் குழி தோண்டிப் புதைப்பதே அனைத்துத் தமிழர்களின் முக்கிய,முதன்மையானக் கடமை.எந்தக் கட்சியுடன் காங்கிரசு கூட்டு சேர்ந்தாலும்,ஒரு காங்கிரசு கூட வெற்றி பெறக்கூடாது என்பதைச் சிந்தித்துச் செயல் படுத்த ஆவண செய்வோம்.