Sep 27, 2010

ராஜராஜன் 1000 கருணாநிதி அவமரியாதை



"நீர் உயர நெல் உயரும் நெல் உயர மக்கள் உயர்வார்கள் மக்கள் உயர மன்னன் உயர்வான்" என்ற பழமொழி இன்று   இந்த தி மு க ஆட்சியில் மக்கள் உயராமல், மன்னன் மட்டும் உயரும்  காலமாக தமிழகம் மாறிவிட்டது.
இந்த சூழலில் ராஜராஜன் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி அவர்கள் ,

தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன் என்று அறிவிப்பு செய்து பேசியுள்ளார்கருணாநிதி. ஒரு மாநில முதல்வர், மூத்த அரசியல் வாதி, இந்திய அரசியலுக்கே ஆலோசனை சொல்பவர், முத்தமிழ் வித்தகர்   என பல பெருமைகளை தாங்கியவர் இப்படியா பேசுவது .

உங்களுக்கு என்னையா ஆச்சு? செம்மை நெல் என்பது நெல் ரகம் அல்ல. அது நெல் சாகுபடி செய்யும் முறைக்குபெயர்தான் செம்மைநெல் சாகுபடியே  தவிர  அது ஒரு நெல்லின் பெயர் அல்ல என்பதே உண்மை ஆகும். 
இது கூட இந்த கரிகால் சோழ மன்னர் கலைஞர் கருணாநிதிக்கு  தெரிய வில்லையா?நெல் ரகத்திற்கு பெயர் வைத்தால் கூட பரவாஇல்லை. சாகுபடி முறைக்கா ஒரு புகழ் பெற்ற மாமன்னன் ராஜராஜன்  பெயரை சூட்டுவாங்க?. அதெல்லாம் கூட இருக்கட்டும், மக்களிடம் அதிகமாக சென்றடையும் ஜனரஞ்சகமாக இருக்கும் திட்டத்திற்கு எல்லாம் கலைஞர் கருணாநிதி என உங்கள் பெயர். பரிச்சயம் இல்லாத  மக்களுக்கு தெரியாத ஒரு சாகுபடி முறை  நெல் ரகத்திற்கு ராஜராஜன் பெயரா?. வாழ்க உங்கள் பழந் தமிழரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தமிழ்த்தொண்டு !!!



3 comments:

நண்பர்கள் உலகம் said...

மிக அருமையான பதிவு!இந்த சவுக்கடி உடன்பிறப்புகளுக்கும்,வால் பிடி- வாலி/வைரமுத்துக்களுக்கும் சேர்த்துத்தான்.

Nagarajan salem said...

இது பற்றி06.10.2010 ஜூவி செய்தியில்
இது குறித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதிகல்யாணம், ''ராஜராஜன்-1000 என்று அழைக்கப்படும் செம்மை நெல்' என்று ஒரு நெல் ரகமே கிடையாது. அது ஒரு தொழில் நுட்பம். நெல் வயலில் நாற்றுகளை குத்துக் குத்தாக நடவு செய்து வருவதைத்தான் இது வரை விவசாயிகள் மேற்கொண்டனர். அதற்கு விதை நெல் அதிகம் தேவைப்பட்டது மட்டுமின்றி, குறைவான இடைவெளியில் நடவு செய்வதால், நாற்றுகளுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைப்பது இல்லை. இதனால், அதிக மகசூல் கிடைக்கவில்லை.
ஆனால், இந்த செம்மை நெல் சாகுபடி என்கிற ஒற்றை நாற்று நடவு முறையில் (SYSTEM OF RICE INTENSIFICATION) என்கிற S.R.I. முறையில், ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை நெல் மட்டும் போதுமானது. 25x25 இஞ்ச் இடைவெளியில் ஒரு நாற்று மட்டும், நடவு செய்தால் போதுமானது. இதன் மூலம் மகசூல் அதிகம் கிடைத்ததை பல சோதனைகள் வாயிலாக உணர்ந்த விவசாயிகள், சில வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடன் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
உண்மை நிலை இது தான் நன்றி

G.V. Sharma said...

வெரி குட் நல்ல பதிவு.