Nov 15, 2010

ராசா என்பார்! எந்திரி என்பார்!ராஜ்ஜியம் இல்லை ஆள? திமுகவின் தில்லாலங்கடி அறிக்கை


அமைச்சர்.ஆ.ராசா.

பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.ஆகா,  என்ன ஒரு விளக்கம் பாருங்கள். என்ன ஒரு வார்த்தை ஜாலம் பாருங்கள்.  இப்படி பேசி பேசியே எவ்வளவு நாள் மக்களை ஏமாத்த போறீங்க?. சொந்தமாகஒருசின்னகடைவைத்திருபவனுக்கே எப்படி விற்றால் லாபம் வரும்னு தெரியும் போது ஒரு மத்திய அமைச்சர் இப்படி ஒரு கேவலமான காரணம் சொல்லும்போது இன்னும் இது போல எத்தனை துறை இப்படி இயங்குகிறதுன்னு தெரியலை. கடவுள் தான் மக்களை காப்பாத்தனும்.

இந்தியாவில் நடந்த ஊழல்களில் மிகப் பெரியதான ஊழல் இது தான். இது வெளிப் பட்டதுமே ராசா ராஜினாமா செய்திருந்தால் திமுகவிற்குக் கொஞ்சமாவது கவுரவம் மிஞ்சி இருக்கும். ஏன் உச்சநீதிமன்றமே இந்த நபர் (ராசா)இன்னும் பதவியில் இருப்பது ஏன் எனகூறியும், அத்தனை எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் வெளி‌யேற்றப் படவேண்டும் என்று தீவீரமாக எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரசும் கடைசி நிமிடத்தில் ராஜா வெளியேறிவிட வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டதாலேயே ராஜினாமாவைச் சமர்ப்பித்திருக்கிறார். திமுகவிற்கு இது பேரிடியாகவே இருக்கும். எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து எங்கே காங்கிரஸ் ராஜாவை பதவி நீக்கம் செய்தால், திமுக தன்மானத்தை தக்கவைத்து கொள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டிய சூழல் ஏற்படும்,அதனால் வளம் கொழிக்கும் இலாக்கா பறிபோகும்,கொள்ளை அடிக்க முடியாது,கனிமொழியை எப்படி மத்திய அமைச்சர் ஆக்குவது, அதனால் நாமே ராஜாவை விலக்கிவிட்டால், ஜெயலலிதாவின் ஆதரவை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று கணக்கு போட்டு செய்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. ஜெயலலிதா மட்டும் இந்நேரம் ஆதரவு தருகிறேன் என்று கூறாமல் இருந்திருந்தால் ராஜா ராஜினாமா செய்திருக்கவே மாட்டார், திமுக தலைவர் கருணாநிதி யும் ஒத்துக்கொண்டிருக்கமாட்டார். எல்லாம் கூட்டணி பயம் தான் ராசா ராஜினாமா இந்திய லெவலில் எத்தனையோ கட்சிகள் ஆட்டி பார்த்த போதும் நடக்காத காரியம் ஜெயலலிதா அவர்கள் கொளுத்தி போட்ட சரவெடியால்  உடனே காரியம் முடிஞ்சுடிச்சி.

நினைவிருக்கிறதா! எல்லா வேலைகளையும் விட்டு விட்டு டெல்லியில் சக்கர வண்டியில் திமுக,தலைவர் கருணாநிதி இந்த மந்திரி பதவிக்கு தானே குறி வைத்து அலைந்தார்.தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தயாநிதிபேரனுக்கு கிடைக்க வேண்டிய தகவல் தொடர்பு துறையை மாற்றி ஜவுளித்துறையை கொடுத்துவிட்டு, ராஜாவுக்கு தகவல் தொடர்பு துறை கொடுத்து 'வேண்டியதை' (1.7லட்சம் கோடிகள்)எடுத்துக்கொண்டு பிரச்சனை வரும் பொழுது ராசாவை பலியாக்கி விட்டார். கைதேர்ந்த திருட்டு கூட்டம். இவ்வளவு ஆணித்தரமாக நிரூபித்த பிறகும் கழுத்தை பிடித்து தள்ள வேண்டி இருக்கிறது. மந்திரி பதவியில் இருந்து வெளியே தள்ளினால் மட்டும் போதுமா ? அந்த களவு போன பணம் எங்கு,இருக்கிறது யார் யார் இந்த கூட்டு கொள்ளையில் பயன் அடைந்தவர்கள், பினாமிகள் யார் என்று கண்டு பிடித்து அவர்களை "சட்டம் என்று ஒன்று இருந்தால்" அதன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும். சிபிஐ மற்றும் உச்ச நீதி மன்றம் எந்த வித பாரபட்சமும் இன்றி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும். 

5 comments:

Vetriselvan said...

உண்மை

பொதிகைச் செல்வன் said...

உப்பை திண்ணவன் தண்ணி குடிச்சாகணும், தப்பு செஞ்சவன் தண்டணை அனுபவிச்சாகணும்.

இனியவன் said...

கருணாநிதியின் பதில்கள் எல்லாமே கேக்கிறவன் கேணப்பயலா இருந்தா.................. என்ற சொல்லடைக்கு பொருத்தமாக இருக்கும்.

moondrezhthu said...

ayyakooo..... KOLA PANRAANGAPAA.......

மாணவன் said...

//"சட்டம் என்று ஒன்று இருந்தால்" அதன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும். சிபிஐ மற்றும் உச்ச நீதி மன்றம் எந்த வித பாரபட்சமும் இன்றி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும்.//

மிகச்சரியான கருத்து