இந்த முறை நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தி.மு.க., கூட்டணி தலைவர்கள் தொண்டைகிழிய பேசி வருகிறார்கள்.ஆனால் உண்மை நிலையையோ,அல்லது மக்களின் மனநிலையையோ இவர்கள் அறியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
தமிழகமக்கள் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர், பிறகு, சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு முழுவதும் சீரழிந்துள்ளது. அடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்து கொண்டால் நகர்புறத்தில் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் கிராமபுரங்களில் செல்போன் ஊழல் என்று 1,76 லட்சம் கோடிகள் கொள்ளையடித்தது திமுக தான் என்றும் திமுக அரசு தந்த இலவச தொலைக்காட்சியிலேயே தமிழக மக்கள் தெரிந்து கொண்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் கண்டுகொள்ள வில்லை என்று திமுககூட்டணியினர் நினைப்பது முட்டாள்தனமானது.
ஜெயலலிதாவின் செருப்பு, புடவை,நகை என்று பொய் சொல்லி வெற்றி பெற்றார்கள். அதுவே எடுபடும் போது, இது எடுபடாதா? கடந்த தேர்தலில் ஒரு ரூபாய் அரிசியோ, இலவசமோ, திமுக வெற்றிக்கு காரணமில்லை.ஒரே காரணம் தேமுதிக விஜயகாந்த் தனியாக நின்று ஓட்டை பிரிந்ததால் தான். அப்படி ஓட்டு பிரித்தும், மைனாரிட்டி ஆட்சியைத்தான் திமுக அமைத்தது. தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால் இன்னொரு 60 தொகுதிகள் கூடுதலாக பெற்று அதிமுக ஆட்சியை பிடித்திருக்கும். இம்முறை ஆரம்பத்தில் கூட்டணி குழப்பம் வந்தாலும் இப்போது கூட்டணி மிகுத்த பலத்தில் உள்ளது. அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தையும், வாக்குறுதிகளையும், தேர்தல் அறிக்கையையும், காங்கிரஸ் கூட்டணியில் நடக்கும் உள்ளடி வேலைகள், வேட்பாளர் குழப்பங்கள், தேர்தல் ஆணையம் கண்டிப்பு, அனைத்து காவல் துறையை கூண்டோடு மாற்றியது, கூட்டணி கட்சியினரின் வலுவான பிரச்சாரத்தையும், கேபிள் இணைப்பு இலவசம் என்ற ஒரே ஒரு வாக்குறுதி இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் அதிமுக கூட்டணி 220 இடங்களில் எளிதாக வெற்றிபெற்றுவிடும்.. ஆனால் ஆளும் கட்சிக்கு உள்ள எதிர்ப்புகளை வைத்து பார்க்கும் போது அதிமுக கூட்டணி வெற்றி பெறபெரும் வாய்ப்பு உள்ளது.
Tweet | |||||