Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Mar 29, 2011

திமுக கூட்டணி வெற்றி பெறுமா?.



இந்த முறை நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தி.மு.க., கூட்டணி தலைவர்கள் தொண்டைகிழிய பேசி வருகிறார்கள்.ஆனால் உண்மை நிலையையோ,அல்லது மக்களின் மனநிலையையோ இவர்கள் அறியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

தமிழகமக்கள் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர், பிறகு, சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு முழுவதும் சீரழிந்துள்ளது. அடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்து கொண்டால் நகர்புறத்தில் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் கிராமபுரங்களில் செல்போன் ஊழல் என்று 1,76 லட்சம் கோடிகள் கொள்ளையடித்தது திமுக தான் என்றும் திமுக அரசு தந்த இலவச தொலைக்காட்சியிலேயே தமிழக மக்கள் தெரிந்து கொண்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் கண்டுகொள்ள வில்லை என்று திமுககூட்டணியினர் நினைப்பது முட்டாள்தனமானது.

ஜெயலலிதாவின் செருப்பு, புடவை,நகை என்று பொய் சொல்லி வெற்றி பெற்றார்கள். அதுவே எடுபடும் போது, இது எடுபடாதா? கடந்த தேர்தலில் ஒரு ரூபாய் அரிசியோ, இலவசமோ, திமுக வெற்றிக்கு காரணமில்லை.ஒரே காரணம் தேமுதிக விஜயகாந்த் தனியாக நின்று ஓட்டை பிரிந்ததால் தான். அப்படி ஓட்டு பிரித்தும், மைனாரிட்டி ஆட்சியைத்தான் திமுக அமைத்தது. தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால் இன்னொரு 60 தொகுதிகள் கூடுதலாக பெற்று அதிமுக ஆட்சியை பிடித்திருக்கும். இம்முறை ஆரம்பத்தில் கூட்டணி குழப்பம் வந்தாலும் இப்போது கூட்டணி மிகுத்த பலத்தில் உள்ளது. அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தையும், வாக்குறுதிகளையும், தேர்தல் அறிக்கையையும், காங்கிரஸ் கூட்டணியில் நடக்கும் உள்ளடி வேலைகள், வேட்பாளர் குழப்பங்கள், தேர்தல் ஆணையம் கண்டிப்பு, அனைத்து காவல் துறையை கூண்டோடு மாற்றியது, கூட்டணி கட்சியினரின் வலுவான பிரச்சாரத்தையும், கேபிள் இணைப்பு இலவசம் என்ற ஒரே ஒரு வாக்குறுதி இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் அதிமுக கூட்டணி 220 இடங்களில் எளிதாக வெற்றிபெற்றுவிடும்.. ஆனால் ஆளும் கட்சிக்கு உள்ள எதிர்ப்புகளை வைத்து பார்க்கும் போது அதிமுக கூட்டணி வெற்றி பெறபெரும் வாய்ப்பு உள்ளது.

Feb 23, 2011

காங். தகிடுதத்தம். தடுமாறும் திமுக.


தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க  முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனியாவை சந்திக்க டெல்லி சென்று உள்ளார். இது என்ன சாதாரணமான பிரச்னையாஇது நேரில் பேச வேண்டிய மிக மிக முக்கியமான பிரச்சனையாம். அதனால்டி.ஆர்.பாலு, டெல்லி சென்று உள்ளார்.

இது ஒன்றும் இலங்கை தமிழர் பிரச்சனையோ, காவிரி பிரச்சனையோ, முல்லை பெரியாறு பிரச்சனையோ, பாலாறு பிரச்சனையோ, தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் பிரச்சனையோ, மின் வெட்டு பிரச்சனையோ, விலைவாசி உயர்வு பிரச்சனையோ, பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையோ இல்லை. கடிதமோ தந்தியோ அனுப்பும் அளவுக்கு திமுக+இ.காங்.கூட்டணி என்ன  சாதாரண பிரச்னையா?
 
காலில் விழுந்து சரணாகதி நிலையில் சோனியாவிடம் பேசி தீர்க்க நேரில்தான் போயாக வேண்டும் என்பது சமத்துவ பெரியார், சுயமரியாதை செம்மல், தமிழர் மானம் காக்கும் தலைவன், காலில் விழும் சாணக்கியர் கருணாவுக்கு  தெரியாதா?
 
ஒரு வேடிக்கையான காமெடியை பாருங்கள் இ.காங்.வைத்துள்ள டிமாண்ட் மூன்றில் இரண்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது தெரியாமல் திமுக.வும் மறுக்கிறது. இ.காங்.வும் கேட்கிறது.
 
டிமாண்ட் 1 = ஆட்சியில் பங்கு
அடுத்த முறை ஆட்சிக்கு வராத தி மு க விடம் ஆட்சியில் பங்கு கேட்பது நல்ல தமாஷ்.
 
டிமாண்ட் 2 =குறைந்த பட்ச செயல் திட்டம்
முடிந்த வரை கொள்ளை அடிப்பது. ஈழ தமிழனை பழி வாங்குவது. என்பது தான் குறைந்த பட்ச செயல் திட்டம்.குறைந்த பட்ச செயல்திட்டம் எப்போதும் உள்ளது.
 
டிமாண்ட் 3 = ஒருங்கிணைப்புக் குழு
 
சிதம்பரம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ்(இவர் இ.காங்.சா,இல்லை திமுக.வா)   போன்றவர்கள் அடிக்கடி கருணாநிதியை பார்த்து பாராட்டி பேசி விட்டு வருகிறார்கள். இதைவிட வேறு என்ன ஒருங்கிணைப்பு வேண்டும்?

Jun 5, 2010