ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட
பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில்...மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்குமேடையில் நிறுத்தப்படலாம்!
'மரண தண்டைனையை பல்வேறுநாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதைனப் பின்பற்ற வேண்டுமா?’ என்று மனித
உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்கிறார்கள். '
மூன்று தமிழர்கள் உயிரை பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொருபக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது.''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களைவிட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது
நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்குரிய முக்கியக் குரல்!
இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!
நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திராசாமி என்றால்தான்அனைவருக்கும் தெரியும். முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானநண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரேசகருக்கு நெருங்கிய சகாவாகவும் இருந்தார்.
உலகத்தின் மிக முக்கியமானஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கேசாக்கிக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
அரசியல் தலைவர்கைள சதி வேலைகள் செய்து கவிழ்ப்பதில்
கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக்கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டேபாது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங்மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது.இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!
இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றாலும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றேசெல்ல முடியும்.
'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலிஸார் பதில்மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையைய டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டேபாது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தை சொன்னது.சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார்.பல ஆதாரங்களை அழித்துவிடுவார்.
மேலும் அவர் மீது சி.பி.ஐ. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.ஐ. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, தொடரும்...’ என்று பதில் தந்தார்கள்.
ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது.
அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார்.எனவே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னது.
'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என
நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்’ என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச்செலுத்தி விடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி.
பணத்தைஉடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி
இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்டவேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார்.
அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ்உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!ராஜீவ்
கொலைவழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19பேரின் தண்டனைன விலக்கப்பட்டு, அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள்.
மூன்று பேருக்கு ஆயுள் தண்டைனயாகக் குறைக்கப்பட்டது.மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டணை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு,அவர் ஆயுள் தண்டைனக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.
நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில் ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது.
இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது.
இந்த கமிஷனில் தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.
பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின் கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும் சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார்.
'நரசிம்மராவைப் பிரதமராக்கப் போறேன்...’ என்று சொல்லிக்கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறது’ என்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார்.
சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம்கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.
ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல் போன தகவல்களும் 97-ம்ஆண்டு அம்பலம் ஆனது.
89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திராசாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத்தொகுப்பும் காணாமல்போனது.
இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்குமூலமும் சந்திராசாமியைநேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்ப வைத்து விடுவார்.நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்’ என்று சிவராசன் தன்னிடம்சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.
சென்னையில் இருந்த பத்திரிக்கையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப்படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால்
அடையாளப்படுத்தப்படும் கேஸாகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிக்கைகள்அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....
'பிரபாகனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம்
ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை நிறைவேற்றத் தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது.
பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில்
ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார்
ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணைமுடிந்துவிட்டதாக எப்படிச் சொல்லமுடியும்?
நன்றி:ஜூ.வி.