ஒரு கனவு கண்டால்அதை தினம் முயன்றால் ஒருநாள் நிஜமாகும்
Oct 21, 2011
உள்ளாட்சிதேர்தல் அ இ அதிமுக வெற்றி.ஏன்.
வெளிப்படையான நிர்வாகம்,
மக்கள் தேவை அறிந்து உடனடி நடவடிக்கைகள்,
ஜால்ராக்கள் கூட்டத்தை தள்ளி வைத்திருப்பது,
உயர் அதிகாரிகளை நேரடியாக கண்காணிப்பது,
தவறு செய்யும் கட்சிகாரர்களை உடனடியாக கண்டிப்பது கட்டம் கட்டுவது
என மிக சிறப்பான முதல்வராக ஜெயலலிதா அவர்கள் மிளிர்ந்திருப்பதை உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் ஓட்டுக்கள் மூலம் மீண்டும் ஒரு முறை பாராட்டி இருக்கிறார்கள்.
கருணாநிதி மற்றும் அவர் சார்ந்த குடும்பம், தேமுதிக விஜயகாந்த், மதிமுக வைகோ, இரண்டுகம்யூனிஸ்ட்கட்சிகள்,பாமக ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதைசிறுத்தைகள் திருமாவளவன், தமிழகத்தில் இல்லாத தங்கபாலுவின் சோனியாகாங்கிரஸ், இவர்கள் அனைவருமே மக்கள் மனதில் என்ன கருத்து உள்ளது என்பதை உணர முடியாமல் போனதற்கு அடையாளம் தான் இந்தஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.
தமிழகம் மீண்டும் ஒருமுறை போலி அரசியல்வாதிகளுக்கு இடம் கொடுக்காதது மிகவும் பெருமை அடைய வைக்கிறது.
ஜனநாயக திருநாட்டில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக உள்ளாட்சி தேர்தலில் கட்சியை கணக்கில் கொள்ளாமல், நிற்கும் வேட்பாளரின் தகுதியையே பெரும்பாலோர் கணக்கில் கொள்வர் என்பதை நீங்கள் கணக்கில் கொள்வது நலம். :)
1 comment:
பொதுவாக உள்ளாட்சி தேர்தலில் கட்சியை கணக்கில் கொள்ளாமல், நிற்கும் வேட்பாளரின் தகுதியையே பெரும்பாலோர் கணக்கில் கொள்வர் என்பதை நீங்கள் கணக்கில் கொள்வது நலம். :)
Post a Comment