Aug 30, 2011

தூக்கிலிட 8 வாரங்கள் தடை. தூக்கு தண்டனை குறைக்க தமிழக சட்டசபை தீர்மானம்.


ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்பொழுது தான் சிறிதாவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது..

லட்சக்கணக்கான தமிழார்வர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை பெற சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி நல்ல காரியம் செய்தார்.

அரசியல் அயோக்கியத்தனம், நாடகம், நீலிகண்ணீர், கொடூர எண்ணம், வஞ்சம் தீர்ப்பது, போன்ற எத்தனை எண்ணற்ற பல துரோக செயல்களை கொடுமைகளை, தமிழ் மக்களுக்கு காங்கிரஸ், மற்றும் மத்திய அமைச்சர்கள், அரங்கேற்றி வருகின்றனர். 

தமிழ் இனத்தை ஒன்றும் தெரியாத மடையர்கள் என நினைத்து.
'வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான அடிப்படை உரிமையை" பறித்த கொடுமையிலும் கொடுமை. காங்கிரஸால்  எற்படுத்தப்பட்ட்து. 

இடைக்காலத் தடைக்கு பிறகு இவர்களது தூக்கு தண்டனை முழுவதும் ரத்து செய்து தீர்ப்பு வர வேண்டும்.இதுவே உலக தமிழார்வர்களின் வேண்டுகோள்.

Aug 28, 2011

ராஜீவ் காந்திகொலை வழக்கு தீர்ப்பின் முரண்பாடுகள்.

ராஜீவ் காந்தி படுகொலை  வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்

இந்திய தண்டனை சட்டம் 302 A தெளிவாக சொல்கிறது. 
கொலை குற்றவாளிக்கும், மற்றும் இன்னொரு பிரிவு கற்பழிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே தூக்கு தண்டனை கொடுக்கிறது.

எந்த இடத்திலும் கொலைக்கு உடந்தையாக இருப்போருக்கு தூக்கு தண்டனை விதிக்க இந்திய தண்டனைச் சட்டம்  இடமளிக்கவில்லை.

இராஜீவ் கொலை குற்றம் சுமத்தப்பட்டது முதல் குற்றவாளி பிரபாகரன் .இரண்டாம் குற்றவாளி பொட்டு அம்மான். மூன்றாம் குற்றவாளி தாணு, சிவராசன் மற்றும் சிலர்.இதில் 18,19,நிலையில் உள்ளவர்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்.

இதில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 129 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிக்கை சொல்கிறது.

26 பேர் (இந்த மூவர் உட்பட) உடந்தை  என்றும் சொல்கிறது.  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் யாருக்கும் இராஜீவை கொல்லபோகிறார்கள் என்கிற உண்மை தெரியாது என்றும் அதே குற்றப்பத்திரிக்கை தான் கூறுகிறது.

வழக்கும் குற்றப்பத்திரிக்கையும் இப்படி இருக்க இருபது ஆண்டுகள் நீடிக்கும் இவ்வழக்கில் இவர்கள் மூவரை தூக்கிலிட எந்த சட்டம் அனுமதி கொடுக்கிறது! இது சட்டத்தை கொச்சை படுத்தும் செயல்.

இவ்வழக்கு ஒரு கொலைகுற்றத்துக்கான வழக்காக நடைபெறாமல், ஏதோ ஒரு இன அழிப்பு குற்றத்துக்காக நடைபெறுவது போல் உள்ளது.
இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டால் சீனாவையும் விட மிஞ்சும் கொடுமையான அடக்குமுறை அரசாட்சி என்று உலகம் இந்தியாவை தூற்றாதா?.

கடுமையான தண்டனை விதிக்கும் அரபுநாடான் சவுதியில் கூட கடந்த மாதம் ஜூலை 31 தேதி இலங்கையை சேர்ந்த ஒரு கொலை குற்றவாளி மன்னித்து விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

இவர்களை விட ஒரு மடங்கு மேன்மையாக அல்லவா இந்தியா இருக்க வேண்டும். கீழ்த்தரமான செயல்களை செய்து இந்திய நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவேண்டாம்.

எனவே மத்திய அரசும்,தமிழக அரசும் தூக்குதண்டனையை தடுத்து நிறுத்தி தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

Aug 26, 2011

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா அமைச்சர் அழகிரி

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மத்திய அமைச்சர் அழகிரி பேசியுள்ளார்..

அழகிரி அவர்களே, உங்க குடும்பத்துக்கே பைத்தியம் பிடித்துவிட்டதா? திமுக மீண்டும் ஆட்சிக்கா ? நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்க.. முதலில் திமுக ஆட்சிக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம், தேர்தலுக்கு பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று சொன்னீர்களே, இப்போ யார் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்போதாவது புரிகிறதா?

சென்ற தேர்தலில் எதிர் கட்சிக்கு கூட தகுதி இல்லாமல் பொது மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.உமக்கும் உன் கூட்டத்தாருக்கும் புரியவில்லையா. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பது வெறும் பகல் கனவு.
ஒரு வேளை நீங்கள் சொல்லுவதை போல நடக்கவே இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆகும், அதற்குள் என்னென்னமோ நடக்கலாம்,

அதாவது கருணாநிதிக்கு 60 வயதாக இருந்திருந்தால்
உங்க  இரண்டு பேருக்கும் சண்டை வந்து கட்சி உடையாமல் இருந்தால்,
கட்சியில் உள்ள அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால்
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நீங்கள் விலகினால் நடக்கும் வாய்ப்பு உள்ளது,

கேள்வி பதில் அறிக்கை விடுவதும், இரட்டை அர்த்தத்தில் கரித்து கொட்டுவதும், மக்களை மடையர்களாக நினைப்பதும், வெங்காய விலையை பெரியாரிடம் போய் கேள் என்று நக்கலாக சொல்லுவதும்,
தமிழர்களை ஏமாற்ற இரண்டு மணி நேரம் காமெடி நாடகஉண்ணாவிரதம் இருந்தால் நீங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அடுத்த தேர்தலுக்குள் திமுக அழியாமல் இருந்தால் நடக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இதெல்லாம் நடக்க கூடிய சாத்தியமா?  

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆகமுடியும்.... என்ன நான் சொல்லுவது?இன்னும் 5 வருடம் இருக்கு அது வரைக்கும் உங்கள் கட்சி இதை போல் ஒன்னா சேர்ந்து இருக்குமா? முதலில் அதை யோசி அப்புறம் அதிகாரிகளை தண்டிக்கலாம். அத்தைக்கு மீசை முளைத்தபின் சித்தப்பா என கூப்பிடுவதைப்பற்றி யோசிக்கலாம்.

Aug 25, 2011

ராஜீவ் காந்திகொலை.அதிரவைக்கும் உண்மைகள்.தொடர்ச்சி.3 பழ. நெடுமாறன் பதில்.

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மரண தண்டனைக் கைதிகள் மூவருக்குநீதி வழங்க வேண்டும்என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள் என வரிசையாக உரிமை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கனவே, ராஜீவ்கொலை வழக்கில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்க...அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று 19 பேரை உயிருடன்மீட்டது, '26 தமிழர் உயிர் காப்புக் குழு.’ அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பழ. நெடுமாறனிடம் சில கேள்விகளைமுன்வைத்தோம்!

''இந்த விவகாரத்தில் நடந்தது, நடப்பது என்ன?''

''இந்த வழக்கை தடா நீதிமன்றத்தில் விசாரித்த முறையே அடிப்படையில் தவறானது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைவழக்குகளில்கூட, ரகசியமாக அல்ல, பகிரங்கமாகத்தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணை மூடுமந்திரத்தைப் போல பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. விசாரணையில் பத்திரிக்கையாளர், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை . 26 தமிழர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களும் மிரட்டப்பட்டனர்.

தடா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த நீதிபதி சித்திக்திடீரென மாற்றப்பட்டு, நவநீதம் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள், குறுக்கு விசாரைணைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓர் ஆண்டு காலத்திலேயே படித்தறிந்து, 26 பேருக்கு அவர் தூக்குத் தண்டனையை விதித்தார்.

இது மனித முயற்சிகளுக்குஅப்பாற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இதை விசாரித்து, 19பேரை விடுதலை செய்தனர். மூன்று நபர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. சிறந்த வழக்கறிஞர் என்.நடராஜன்மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். அப்படிச் செய்திருக்காவிட்டால், 26 தமிழர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

'ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது செல்லாது’என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதே தடாசட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்பைடயில், நான்கு பேரின்மரண தண்டைன உறுதி செய்யப்பட்டது முரண்பாடானது அல்லவா? உச்சநீதிமன்றத்தால் நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு,தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே, 'தமிழர் உயிர்காப்புக் குழுவின் சார்பில், சென்னை உயர்
நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்ப்பைப் பெற்றோம். 'தமிழக அமைச்சரைவயின் ஆலோசனையின்படிஆளுநர் முடிவெடுக்க முடியுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎன உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநேரா அல்லது குடியரசுத் தலைவரோ, கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நான்கு பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தைமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பெற்றுத்தந்தோம். ஆனால், அதை வைத்து அவர் எதுவுமே செய்யவில்லை.

'ராஜீவ் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளனஎன்று ஜெயின் கமிஷன் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்ற அமைப்ப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்னும் தன் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்பது முக்கியமானது. இப்போது, (நளினியின் தண்டனைஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது).

 மூன்று பேரின் மரண தண்டனை ஒருவேளை நிறைவேற்றப்படுமானால், அதன் பிறகு இந்தக் கண்காணிப்புக் குழு தரும் அறிக்கையில், வேறு சிலர்தான் உண்மைக் குற்றவாளிகள் என சுட்டிக்காட்டப்படுவார்கள். அப்போது, இழந்துபோன உயிர்களை மீட்க முடியுமா? அப்படி ஒரு நிலையை மனிதாபிமானம் உள்ள யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா?

எனவே,பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை மூன்று தமிழர்களின் மரண தண்டனையைநிறுத்திவைக்க வேண்டும்.''

''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். சி.பி.. ரகோத்தமனோ, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதற்கு வேறு காரணம் என்கிறாரே?''

''எதற்காக அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது? 'இந்தக் கொலையில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டு; அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்என்பதற்காகத்தானே இந்தக் கண்காணிப்புக்குழுவை அமைத்தார்கள்.அதை மறைத்தும் மழுப்பியும் பேசுகிறார் இந்த அதிகாரி!''

''மூவரின் உயிரைக் காக்க, சட்டரீதியான முயற்சிகள் என்ன? உங்கள் அடுத்தகட்டத் திட்டம்எது?'’

''மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனைநடத்தி வருகிறோம். சட்ட முயற்சிகள்பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க... மரண தண்டனையை  முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!''
நன்றி:ஜீ.வி.