Jan 1, 2012

6ம் அறிவு அரசியல் வா(வியா)திகள்.

            
                அனைவருக்கும் 2012 ம் ஆண்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


Dec 27, 2011

விக்கிரமாதித்தா! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! 

கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்!

பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? 

நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!
நன்றி : தினமணி

Dec 24, 2011

மோசடி விழாவில் பிரதமர் ஏமாற்றும் ப.சிதம்பரம்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு சென்னை வருகிறார். திங்கட்கிழமை காலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் கணித மேதை ராமனுஜத்தின் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்கிறார்.

தமிழக பயணமே ஒட்டுமொத்த மோசடி பயணம். அரசு விழாக்களுக்கு இடையே இரண்டு தனியார் விழாக்கள் நடக்கிறது. அதற்குதான், இரண்டு அரசு விழாக்களையே ஏற்பாடு செய்திருக்கிறார் ‘சிவகங்கை சின்னபையன்’ப.சிதம்பரம்

காரைக்குடி செல்லும் பிரதமர் அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரைக்குடியில் கட்டப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை ஆகிய இரண்டையும் திறந்து வைக்கிறார். ஏற்கனவே, திறந்து வைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு மருத்துவமனைகளை மீண்டும் திறப்பதற்கு வருகை தந்திருப்பது ஒரு மோசடி தானே.

எப்படி இந்த மோசடி நடக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் இடங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரிக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட 80 ஏக்கர் நிலத்தை, வங்கியில் கடன் பெற்று திவால் ஆனவர் என்று சொல்லப்பட்ட நபரிடமிருந்து சிதம்பரத்தின் சகோதரியும், சகோதரியின் மகனும் வாங்கியிருக்கிறார்கள். அதை விசாரித்தால், பல விவகாரங்கள் அம்பலத்துக்கு வரும்.

இந்த நிலத்தில்தான் 9 ஏக்கர் நிலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. ஒன்றரைஏக்கர் நிலம் வாசன் கண் மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மருத்துமனைகளும் சிதம்பரத்தின் குடும்பத்திற்காக கட்டப்பட்டவை

சிதம்பரத்தின் மருமகள் டாக்டர் ஸ்ரீநிதிக்காக அப்பல்லோ குழுமம் காரைக்குடியில் அப்பல்லோ மருத்துவமனையின் கிளையை கட்டிக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மளமளவென உருவாகி வரும் வாசன் கண் மருத்துவமனையின் குழுமத்தையே கார்த்திக் சிதம்பரம் தான் நடத்துகிறார்

இந்த இரு மருத்துவ மனைகளைத் திறப்பதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங்கை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துவந்திருக்கிறார். காரணம், மத்திய அமைச்சரவையிலிருக்கும் ப.சிதம்பரம் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா இல்லையா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது இமேஜை நிலை நிறுத்திக் கொள்ள இப்படியொரு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்து வருகிறார் என்று காங்கிரஸ்காரர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏன் பிரதமரை அழைத்து தாஜா செய்கிறார் என்றால், காங்கிரஸில் நடக்கும் உள்குத்து மோதலில் ப.சிதம்பரத்தை காலி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ப.சி.க்கு யாருமே ஆதரவு அளிக்க வரமாட்டார்கள். தனக்காக சோனியாவிடம் பேசக்கூடியவர் மன்மோகன் சிங் மட்டுமே, என்பதால், அவரை தாஜா செய்துக் கொண்டிருக்கிறார்

அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

                                    இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்லவேண்டும்.
                                              இவர் போல யார் என்று ஊர்சொல்லவேண்டும்.

 முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. 

அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். 


‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். 


ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!  
 சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )