Oct 16, 2010

விழித்திடு தமிழா,ஒழித்திடு தமிழா, இலவசத்தை அழித்திடு தமிழா!

"இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டுள்ள துண்டு பிரசுரம்(நோட்டீஸ்) வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் இலவசம் எனும்பெயரில்இன்றையஅரசியலில்உள்ளசமூகஅவலங்களை,மனசாட்சியுள்ள,சுயமரியாதையுள்ள,ஓர் சராசரி மனிதனின் உள்ளகுமுறலாக வெளியிட்டு உள்ளனர். அவர்களின் பெயர்,முகவரி அதில் இல்லைஎன்றாலும் ஒட்டு மொத்த தமிழகத்தின் மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சியின்     வெளிப்பாடாக அதில் உள்ள வாசகங்கள் இருப்பதால் அது அப்படியே இங்கு உங்களுக்காக!  

"ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்,எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!' "என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'


"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை.

இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இது மொத்த தமிழகத்தின் திமுக உடன்பிறப்புக்கள் உட்பட  தமிழகத்தின்  நிலை கண்டு கவலை கொள்ளும் அனைவரின் மனம் இன்றளவும் வெதும்பி கொண்டு தான் இருக்கு என்பது தான் உண்மை.
அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

1 comment:

சுதர்ஷன் said...

நல்ல பார்வை ...இப்படி வாங்கி வாங்கியே பழகிவிட்டார்கள் ...இதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html