Oct 28, 2010

கேட்காமலே கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!!

மனிதனும் மனிதாபிமானமும் இன்னும் செத்து விடவில்லை என்பதற்கு நாராயணன் கிருஷ்ணன் ஒரு எடுத்துகாட்டு. இவரை பார்த்து நிறைய நெஞ்சங்கள் மனிதாபிமான முறையில் சுயநலம் விட்டு இருந்தால் நாட்டில் செத்து கொண்டிருக்கிற மனித நேயமும், தான், தனக்கு என்கிற கர்வமும் போய் கண்டிப்பாக ஒற்றுமை, சகோதரத்துவம், உதவி செய்து மகிழ்தல், என்று நாடு  நலம் பெறும். கடவுள் கடவுள் என்று தேடும் மக்களுக்கு உங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன். பணம் என்னடா பணம் பணம் மனிதாபிமானம் தானடா நிரந்தரம் என வாழும் நீங்கள் தான் கடவுள். மனிதனை படைக்கும் கடவுள் அவனை பராமரிப்பது இல்லை. அதற்கு பதிலாக இவரை போன்ற மனித வடிவில் பூமிக்கு வந்து மனிதனை பராமரிக்கிறார்.

ஊருக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றாலும் ஒருவருக்கேனும் உணவு கொடுங்கள் என ஆரம்பித்து இன்று ஊருக்கே உணவு வழங்கும் வாடிய பயிரை கண்டபோதிலெல்லாம் மனம் வாடினேன் என்ற வள்ளலாரின் வாரிசு இவர்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே

இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24.10.2010 அன்று இவரை பற்றி ஜெயா டிவி.யில் விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பானது.உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல்ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 10ல் ஒருவராக உள்ள இவரை 10ல் முதல்வராக(1வது ரேங்க்) பெற அவருக்கு இங்கே சென்று உங்கள் வோட்டை பதிவு செய்யவும்

இவரைப்பற்றிய தகவல்:

 5நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் தனது பசிக்கு மனிதகழிவை உண்ணும் கொடுமையும், உணவுக்கு போராடும் அவலத்தையும், கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.

நாராயணன் கிருஷ்ணன் டிரஸ்ட் விபரம்.
 Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
 Doak Nagar Extension,
Madurai – 625 010.
India Ph: +91(0)452 4353439/2587104 Cell:+91 98433 19933

E mail : ramdost@sancharnet.in
இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை

No comments: