Oct 10, 2010

எந்திரன்! உயர்நீதிமன்றம் தடை! தமிழகஅரசு பதில்



திமுக ஆட்சியில் எல்லாமே இப்படித்தான்!  நீதி துறை ஓரளவிற்கு நியாயமாக இருப்பதால்தான் கொஞ்சமாவது மக்கள் ஆறுதல் அடையமுடிகிறது.

 
தமிழக அரசின் பதில்! ஒரு வார்த்தை விளையாட்டு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. முரசொலி கட்டுரையில், ஒரு பெண்ணை உயர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க முதல்வர் விரும்பியதை சிலரால் பொறுக்க முடியவில்லை என்றுள்ளது. பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருமாநில டி.ஜி.பி. பெண் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்  என்றால்  அப்போ பணிமூப்பு, அனுபவம்பணித்திறன் என்பதெல்லாம் தேவையில்லையா.  இப்படியா இடத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் ஒரு முதல்வர்  தமிழகத்திக்கு தேவையா என்று தான் கருத வேண்டியுள்ளது....

பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில டி.ஜி.பி., தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால், பணி மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை."என்பது தமிழக அரசின் வாதம். அவர் தன்னை விட மூத்த அதிகாரிகளை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவும் நியமன குறிப்பில் இடம் பெறவில்லை. திரு நடராஜ், திரு விஜயகுமார் ஆகியோர் பணித்திறன், அனுபவம், பணி மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களா? இல்லையா? என்பதை தமிழக மக்களே  அறிவார்கள் எனும்போது இது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா ?
லத்திகா சரண் பொறுப்பேற்றது முதல்  காவல் துறையில் "தமிழகமக்களுக்கு" பாதுகாப்பு கருதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை. கன்னி மேரி அஞ்சுகம் விவகாரம், ஆள் கடத்தல் சம்பவங்கள், கட்டபஞ்சாயத்து தாதாக்களின் அட்டுழியம்,பல்கலை துணை வேந்தருக்கு அடி உதை, ரேசன் அரிசி கடத்தல், கொள்ளை சம்பவங்கள்,சட்டக்கல்லூரிபிரச்னை, மணல் கொள்ளை, ஈரோடு ராஜாவின்  காட்டுதர்பார்  என பல சம்பவங்களை கூறலாம். கை கட்டி வாய் பொத்தி சேவை செய்ய ஒருவர் தேவை என்பதால்தான் அந்த பதவிக்கு லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் அவரது நியமனம் முற்றிலும் நியாயமானதே.

திமுக அரசு திரும்ப திரும்ப உயர் அதிகாரிகள் விஷயத்தில் மூக்குடைபட்டுள்ளது. ஏற்கனவே உமாசங்கர். தற்போது நடராஜ் விவகாரம். இந்த தீர்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம். இதற்கும்  முதல்வர் என்ன சொல்வார் தெரியுமா? நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்பார். இதன் மூலம் தமிழகத்தில் பதவி உயர்வு எப்படி கொடுக்கபடுகிறது என்பதை அறியலாம். போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ள திரு மு,க.விற்கு இதைவிட கேவலம் ஏதுமில்லை. வேண்டியவர்க்கு பதவி என்பது தி மு க வின் வழிமுறை. எது நடந்தாலும் கருணாநிதி பதவியை விடபோவதில்லை.இனியாவது தமிழகஅரசு தங்களுக்கு சாதகமானவர்களை பணியில் நியமிக்காமல் அரசு விதிகளின்படி நடக்குமா. பதவி நியமனத்தில் அரசியல் குறுக்கீடு இருந்தால் லத்திகாசரண் என்ன லத்தியேகூட D G P ஆகும்!.  ஏனென்றால் நடப்பது தமிழகஅரசு எந்திரத்தை இயக்கும் எந்திரன்(கருணாநிதி) ஆட்சி.. அப்பாடா தலைப்பு வந்துவிட்டது.

No comments: