இது ஒரு நல்ல தீர்ப்பு .பெரும்பான்மையான இந்தியர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு .நன்றி நீதிபதிகளே....தீர்ப்பின் படி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம், 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதி ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பிடமும், ஒரு பகுதி பாபர் மசூதி வக்பு வாரியத்துக்கும், ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை அகற்றப்படாது என்றும், அங்கு தற்போதைய நிலையே மேலும் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்
நல்ல முடிவு.. ராமர் பிறந்த இடத்தில அவருக்கு கோவில் அமைக்கலாம் அருகில் மசூதி அமைக்கலாம் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை இருக்காது.புதிய வழிபாட்டு தளங்கள் நம்மை ஒன்றிணைக்கட்டும்நாம் எல்லோரும் மனிதர்கள். நாம் அனைவரும் இந்தியர்கள். அதன் பிறகு தான் நான் ஹிந்து, நான் முஸ்லிம், நான் கிறிஸ்டியன் என்ற நினைப்பு நமக்கு வரவேண்டும். இந்தியர்கள் என்ற நினைப்பு ஒன்றே போதும். மதத்தை விட மனித நேயம் தான் முக்கியம். கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக, கண்ணுக்கு தெரியும் என் சகோதரனை காயபடுத்த மாட்டோம் என நாம் அனைவரும் உறுதி கொள்வோம் ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்று.
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும் என்ற வேத வாக்கியத்தை மனதில் கொண்டும், ஆண்டவன் முன்னிலையில் நாம் அனைவரும் சமம் என்ற உண்மையை உணர்ந்தும், இதை இத்தோடு விட்டுவிட்டு முன்னேறுவோம், முன்னேற்றுவோம், வாழ்வோம், வாழவைப்போம். ஹிந்து முஸ்லீம் நட்பு மலரட்டும்!.
Tweet | |||||