தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனியாவை சந்திக்க டெல்லி சென்று உள்ளார். இது என்ன சாதாரணமான பிரச்னையா? இது நேரில் பேச வேண்டிய மிக மிக முக்கியமான பிரச்சனையாம். அதனால்டி.ஆர்.பாலு, டெல்லி சென்று உள்ளார்.
இது ஒன்றும் இலங்கை தமிழர் பிரச்சனையோ, காவிரி பிரச்சனையோ, முல்லை பெரியாறு பிரச்சனையோ, பாலாறு பிரச்சனையோ, தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் பிரச்சனையோ, மின் வெட்டு பிரச்சனையோ, விலைவாசி உயர்வு பிரச்சனையோ, பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையோ இல்லை. கடிதமோ தந்தியோ அனுப்பும் அளவுக்கு திமுக+இ.காங்.கூட்டணி என்ன சாதாரண பிரச்னையா?

காலில் விழுந்து சரணாகதி நிலையில் சோனியாவிடம் பேசி தீர்க்க நேரில்தான் போயாக வேண்டும் என்பது சமத்துவ பெரியார், சுயமரியாதை செம்மல், தமிழர் மானம் காக்கும் தலைவன், காலில் விழும் சாணக்கியர் கருணாவுக்கு தெரியாதா?
ஒரு வேடிக்கையான காமெடியை பாருங்கள் இ.காங்.வைத்துள்ள டிமாண்ட் மூன்றில் இரண்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது தெரியாமல் திமுக.வும் மறுக்கிறது. இ.காங்.வும் கேட்கிறது.
டிமாண்ட் 1 = ஆட்சியில் பங்கு
அடுத்த முறை ஆட்சிக்கு வராத தி மு க விடம் ஆட்சியில் பங்கு கேட்பது நல்ல தமாஷ்.
அடுத்த முறை ஆட்சிக்கு வராத தி மு க விடம் ஆட்சியில் பங்கு கேட்பது நல்ல தமாஷ்.
டிமாண்ட் 2 =குறைந்த பட்ச செயல் திட்டம்
முடிந்த வரை கொள்ளை அடிப்பது. ஈழ தமிழனை பழி வாங்குவது. என்பது தான் குறைந்த பட்ச செயல் திட்டம்.குறைந்த பட்ச செயல்திட்டம் எப்போதும் உள்ளது.
முடிந்த வரை கொள்ளை அடிப்பது. ஈழ தமிழனை பழி வாங்குவது. என்பது தான் குறைந்த பட்ச செயல் திட்டம்.குறைந்த பட்ச செயல்திட்டம் எப்போதும் உள்ளது.
டிமாண்ட் 3 = ஒருங்கிணைப்புக் குழு
சிதம்பரம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ்(இவர் இ.காங்.சா,இல்லை திமுக.வா) போன்றவர்கள் அடிக்கடி கருணாநிதியை பார்த்து பாராட்டி பேசி விட்டு வருகிறார்கள். இதைவிட வேறு என்ன ஒருங்கிணைப்பு வேண்டும்?
சிதம்பரம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ்(இவர் இ.காங்.சா,இல்லை திமுக.வா) போன்றவர்கள் அடிக்கடி கருணாநிதியை பார்த்து பாராட்டி பேசி விட்டு வருகிறார்கள். இதைவிட வேறு என்ன ஒருங்கிணைப்பு வேண்டும்?
Tweet | |||||