Feb 1, 2011

ராமதாஸுக்கு வந்த வாழ்வைப் பாத்திங்களா?



ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ன்னு சொல்வாங்க, அது ராமதாஸ் விசயத்துல நல்லாவே பொருந்தி வருது...யாராவது கதவை திறந்து உள்ள வா ன்னு கூப்பிட மாட்டாங்களான்னு எல்லார் வீட்டு வாசல் முன்னாடியும்  தவம் இருந்த ராமதாஸுக்கு வந்த வாழ்வைப் பாத்திங்களா? அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் அதுபோல போனா போகட்டும் ன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டு சோறு போடலாம்ன்னு தாத்தா முடிவு பண்ணிய பிறகு வாலை ஆட்டிகிட்டு மறுபடியும் சாக்கடைக்கு தான் ஓடுவேன் ன்னு அவரோட குணத்தை காட்டுறாரு.இவரை கூட்டணியில் சேத்துகிறதும் ஒன்னு தான் வழியிலே போகிற ஓணானை உள்ள புடிச்சி விட்டுகிறதும் ஒன்னு தான்...இந்த இடத்தில நல்லா கவனிச்சி பாருங்க,தனியா நிற்க மாட்டேன் கூட்டணி வச்சி தான் தேர்தல சந்திப்பேன் ன்னு சொல்லிட்டு இருந்த ராமதாஸ் எப்படியாவது தாத்தா கூட ஜாயின்ட் பண்ணிகிலாம் ன்னு ஸ்பெக்ட்ரம் பத்தி கூட பேசாம கோமாளி வேஷம் போட்டாரு...ஆனா  பா.ம.க சேர்த்துக்க படும் ன்னு தாத்தா அறிக்கை விட்ட உடனே கூட்டணி சேர்வது பற்றி நான் இன்னும் முடிவு எடுக்கலை என்று அப்படியே பல்டி அடிச்சிட்டாரு. பாத்திங்களா அங்க தான் ராமதாஸ் நிக்கிறாரு...சல்லடை போட்டு தேடினாலும் இந்த உலகத்துல ராமதாஸ்  மாறி ஒரு கேடிய நீங்க பார்க்கவே முடியாது.கிட்ட தட்ட விபச்சாரி மாறி அவருக்கு பதவி, பணம் தான் முக்கியம்..கொள்கை அப்படின்னா கிலோ எவ்வளவு ன்னு கேட்பாரு...சமயம் பாத்து அவரோட திருவிளையாடலை விளையாட ஆரம்பிச்சிட்டாரு..ஜாதி வெறி ராமதாஸை சேர்க்க வேண்டிய அவசியம் அம்மாவுக்கு இல்லை. தாத்தா ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு அதுக்கு தான் ராமதாசுக்கு நூல் விட்டாரு அது வொர்க் அவுட் ஆகலன்னு தெரிஞ்சதும் மண்டை காஞ்சி போயி இருக்காரு. திமுக,..அதிமுக,இருவருமே பாமக.வை சேத்துக்காம நடுத் தெருவில அரசியல் அனாதையா நிக்க வைக்கணும் அப்பத்தான் இந்த மாறி ஒவ்வொருத்தர் முதுகிலும் சவாரி செஞ்சி பொழப்பு நடத்துவதை நிறுத்துவார். பாண்டிச்சேரியில ஊத்திகிட்ட மாறி தமிழ் நாட்டிலேயும் பா.ம.க வை கழுவி மூடி வைக்க திமுக,..அதிமுக,இருவருமே  முன் வர வேண்டும்.

9 comments:

Anonymous said...

அருமையான பதிவு கலக்குங்க

பொன் மாலை பொழுது said...

இனி வரும் காலங்ககில் இதேபோல நிகழவேண்டும். எவரும் சீண்டாமல் அப்பனும் பிள்ளையும் மறுபடியும் ஆசுபத்திரி நடத்த போகட்டும்.இதுபோல ஒரு ஜாதி வளர்க்கும் கட்சி வேண்டாம்.

Unknown said...

மரம் வெட்டி ராமதாஸ் மட்டும்தான் குறை சொல்லமுடியுமா? தாத்தா என்ன விஷத்தோட திட்டம் போட்டாரு? அறிவே இல்லேனாலும் யாரோ புண்ணியவான் கொடுத்த ஐடியாலே சரியஅன பல்டி அடிச்சாரே ராமதாஸ். தாத்தா மூஞ்சிலே ஈ ஆடலியே இப்போ. சபாஷ் சரியஅன போட்டி.

venkat said...

//திமுக,..அதிமுக,இருவருமே பாமக.வை சேத்துக்காம நடுத் தெருவில அரசியல் அனாதையா நிக்க வைக்கணும் அப்பத்தான் இந்த மாறி ஒவ்வொருத்தர் முதுகிலும் சவாரி செஞ்சி பொழப்பு நடத்துவதை நிறுத்துவார். பாண்டிச்சேரியில ஊத்திகிட்ட மாறி தமிழ் நாட்டிலேயும் பா.ம.க வை கழுவி மூடி வைக்க திமுக,..அதிமுக,இருவருமே முன் வர வேண்டும்.\\
இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ராமதாசை பெரியாள வளர்துவிடார்கள் . ராமதாஸ் தமிழக அரசியலுக்கு வந்ததுக்கு பிறகுதான் தமிழ் நாட்டில் ஜாதி அரசியல் பெரிகிவிட்டது. ஜாதி அரசியலை ஒழிக்க வேண்டும் என்றால் ராமதாசை ஒழிக்க வேண்டும் . இரண்டு கழகங்களும் செய்யுமா ?

வசந்தா நடேசன் said...

போட்டீங்களே ஒருபோடு! சபாஷ், தமிழகம் திருந்தவேண்டும்.

பாரதசாரி said...

வார்த்தை ஜாலங்கள் இல்லாத உண்மையான கருத்து- பதிவிற்கு நன்றி

Unknown said...

தி மு க மற்றும் ஆ தி மு க இரண்டு பேரும் கூட்டணி வைக்காமல் இதுவரை ஆட்சியை பிடித்ததில்லை . இரண்டு தலைமையும் தமிழர்க்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்து கொலைகார காங்கிரஸ் -டன் சேர்ந்து தமிழர்களை கொன்றொழிக்க உதவியவர்கள். தேர்தலுக்கு தேர்தல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கும் இவர்கள்தான் உண்மையில் விபச்சாரிகள்அய்யா ராமதாஸ் அவர்கள் எப்பொழுதுமே சாதி பெயரை சொல்லி ,தமிழர்க்கும் தமிழ்நாட்டு உரிமைக்கும் குரல் கொடுப்பவர். இந்த கால அரசியலில் கையில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டுதான் தமிழ்நாட்டுக்காக போராடமுடியும் என்பதற்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்கிறார்அது தவறு இல்லை . அவர் செய்வது சரியே . தவறு என்றால் தி மு க , அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே உண்மையிலயே விபச்சாரிகள் .அது உங்களுக்கு தெரியுமா அறிவிலித்தனமாக எதையும் சொல்லக்கூடாது

Unknown said...

நல்ல கருத்தூ

Murasoli Mran said...

'இது'வால் வன்னிய இனத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பது அணைவருக்கும் தெரியும்.தேர்தல் நேரத்தில் மட்டும்,'வன்னிய சொந்தம்'என சொல்லும் 'இது'ஓரு இன துரோகியே.பமகாவின் ஓட்டு வங்கி திவாலானது ஜெ-க்கு தெரியும்.