Oct 27, 2011

தமிழகமக்கள் கிள்ளிக்கூட கொடுக்கவில்லை விஜயகாந்த் புலம்பல்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வுக்கு சரியான மாற்றுத் தேர்வு நாங்கள்தான் என்ற கோஷத்தோடு அரசியலுக்குள் வந்த தே.மு.தி.க.விஜயகாந்த்,இரு கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த நிலையிலும், மிகப் பரிதாபகரமான கேவலமான முடிவை சந்தித்திருக்கிறது. 

தமிழக மக்கள் அள்ளிக் கொடுப்பார்கள் என்று விஜயகாந்த் நினைத்திருக்க,தமிழகமக்கள் கிள்ளிக்கூடகொடுக்கவில்லை.
இருந்ததையும் பறித்து கொண்டு ஓட,ஓட விரட்டிவிட்டார்கள்.

சென்னையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில்  
தே.மு.தி.க. 3வதாக வந்துள்ளது. ஆனால், வாக்கு வித்தியாசத்தைப் பாருங்கள். வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்
சைதை துரைசாமி பெற்ற வாக்குகள்        12,40,340.
தி.மு.க. வேட்பாளர் பெற்ற வாக்குகள்     7,20,593
தே.மு.தி.க வேட்பாளர் பெற்ற வாக்குகள்  1,42,203

இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் நானே சரியான மாற்று என கூறியவர் விஜயகாந்த். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் பெற்ற ஓட்டுக்களின் மொத்த எண்ணிக்கை 19,60,933.

இந்த கூட்டுத்தொகை வாக்குடன், தே.மு.தி.க பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப் பாருங்கள். கிட்டத்தட்ட 5%சதவீதம் வருகின்றது. டெபாசிட்டே திரும்பி வராது இதை வைத்துக்கொண்டு, யாருக்கு யார் மாற்றாடாக வருவது?

தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணிஎன்ற கோஷத்தோடு அரசியல் பயணத்தை தொடக்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்கள் வண்டவாளம்என்று சவடாலாக சவாலும் விட்டவர்.

இம்முறை அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. தனித்துத்தான் போட்டியிட்டன. சவால் விட்ட இவர்தான் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கினார்.

விஜயகாந்தின் ஸ்டைலே தேர்தல் சமயங்களில் மாத்திரம் அரசியல் செய்வது. ஆனால், தேர்தல் வராத நேரத்தில் இவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரிவதில்லை அதுதான்.இப்பொழுது தெரியுதா? யாருடைய வண்டவாளம், தண்டவாளம் ஏறியிருக்கிறது?

Oct 23, 2011

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.விஜயகாந்த் அறிக்கை.

தேர்தலுக்கு முன்னாடி தேமுதிக விஜயகாந்த் பேசிய பேச்சு என்ன? விட்டசவால் என்ன?
மக்கள் முன் நடித்த நாடகம் என்ன?
உள்ளாட்சி தேர்தலில் எனக்கு ஒருமுறைஆட்சிஅமைக்க வாய்ப்புதாங்க என உளறிய பைத்தியகாரதனமான பேச்சு என்ன?  
நாங்க தான் டாப்பு. நாங்க தான் கீப்பு அப்படின்னு உளறினது என்ன?.
இப்ப அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இப்படி சொல்றாரு.


இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை.

"தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன்.

நீங்க சொன்னீங்க ஆனா மக்கள் கேட்டுக்கொண்டார்களா? என்பதுதான் கேள்வி. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.


இதன் மூலம் தமிழ்நாட்டில் தேமுதிக ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

உள்ளாட்சியில் முரசு எங்கேயும் ஒலிக்கவில்லையே? உங்களுக்கு மட்டும் கேட்குதோ.

இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓய்வு எடுத்து கொண்டவர்களுக்கும் ஓட்டமெடுத்தவர்களுக்கும்.ஓட்டுபோடாத பொதுமக்களுக்கும் நன்றியா?

பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை.

மக்களாக மனமுவந்து அளித்த தீர்ப்பு இது தெரியுதில்லை.
அப்பால ஏன்யா இப்படி ஆர்ப்பாட்டம்.

இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.

வாக்காளர்களின் எதிர்பார்ப்பு தெரிந்தும் அப்புறம் ஏன் எனக்கு வாய்ப்பு தாங்க என அலம்பல் விட்டிங்க

ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தேமுதிக தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தேமுதிக துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தனிபாதை அல்ல தடுமாறுகின்றபாதை. தனித்து நின்று தற்கொலை செய்த்து தான் சாதனையா?

தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும்.

அரசியல் அங்கிகாரம் ஜெ.ஜெ.வால் கிடைத்தது. ஏங்க பண்ருட்டியாரே நீங்களாவது சொல்லக்கூடாதுங்களா.

விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.

அடுத்த கட்சியின் மகசூலை அள்ளிகொண்டு போனவர், தனது கட்சியான வரண்ட பூமியில் அடுத்த மகசூலை எதிர்பார்கிறாராம். எவ்வளவு முயன்றாலும் பலன் பூஜ்ஜியமே.

அதுபோல் தேமுதிக தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதான் நீயும் வேணாம் உங்க கட்சியும் வேணாம்னு மக்கள் நெத்தியடி அடித்து விட்ட பின்னாடியும் புலம்பறீங்க.வடிவேலு காமெடி போல,


பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தேமுதிக அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இவருக்கு ஓட்டு போட்டால் மக்கள் அறிவாளிகள். இவரை ஓட, ஓட விரட்டி அடித்தால் மக்கள் பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு மயங்கியவர்களா?என்ன புத்தி தடுமாற்றமா?

Oct 21, 2011

உள்ளாட்சிதேர்தல் அ இ அதிமுக வெற்றி.ஏன்.

வெளிப்படையான நிர்வாகம்,
 
மக்கள் தேவை அறிந்து உடனடி நடவடிக்கைகள்,
 
ஜால்ராக்கள் கூட்டத்தை தள்ளி வைத்திருப்பது,
 
உயர் அதிகாரிகளை நேரடியாக கண்காணிப்பது,
 
தவறு செய்யும் கட்சிகாரர்களை உடனடியாக கண்டிப்பது கட்டம் கட்டுவது
 
என மிக சிறப்பான முதல்வராக ஜெயலலிதா அவர்கள் மிளிர்ந்திருப்பதை உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் ஓட்டுக்கள் மூலம் மீண்டும் ஒரு முறை பாராட்டி இருக்கிறார்கள்.
 
கருணாநிதி மற்றும் அவர் சார்ந்த குடும்பம், தேமுதிக விஜயகாந்த், மதிமுக வைகோ, இரண்டுகம்யூனிஸ்ட்கட்சிகள்,பாமக ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதைசிறுத்தைகள் திருமாவளவன், தமிழகத்தில் இல்லாத தங்கபாலுவின் சோனியாகாங்கிரஸ், இவர்கள் அனைவருமே மக்கள் மனதில் என்ன கருத்து உள்ளது என்பதை உணர முடியாமல் போனதற்கு அடையாளம் தான் இந்தஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.
தமிழகம் மீண்டும் ஒருமுறை போலி அரசியல்வாதிகளுக்கு இடம் கொடுக்காதது மிகவும் பெருமை அடைய வைக்கிறது. 
ஜனநாயக திருநாட்டில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
வாழ்க ஜனநாயகம்.

Oct 10, 2011

ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? சுப்பிரணியன் சுவாமி


'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்' என்று விடாப்பிடியாகப் போர்க் குரல் கொடுத்துவரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரணியன் சுவாமி, சென்னையில் முகாமிட்டிருந்தார். 

அவரை சந்தித்தபோது, ''2008-ம் வருடம் ஏப்ரல் 21-ம் தேதியன்று, நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்,
 
'நாம் இருவரும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்துவிட்டுப் பிறகு அதை பிரதமரிடம் சமர்ப்பிக்கலாம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையே, பிரதமரும் கூட ஒரு பிரஸ் மீட்டில், 'இரண்டு அமைச்சர்களும் கூட்டாக வந்து சொன்னார்கள்’ என்று பேசி இருக்கிறார். அப்படியென்றால், இருவரும் கூட்டாக உட்கார்ந்து பேசித்தான் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரே குற்றத்தை செய்த இருவரில்ஆ.ராசா ஜெயிலில் இருக்க... ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? இவரையும் சி.பி.ஐ. விசாரித்தால் கண்டிப்பாகப் பல உண்மைகள் வெளிவரும்...'' என்றவரிடம்,
 
''சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஃபைலில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி யுள்ளதே?''
 
''அதற்கு முழுப் பொறுப்பையும் சிதம்பரம் சார்ந்த துறையினர்தான் ஏற்க வேண்டும். ஏதோ சந்தேகத் தின் பேரில் நீதிமன்றம் அந்த ஃபைல்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தபோது, சில பக்கங்கள் மிஸ்ஸிங். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் விலை நிர்ணயம் தொடர்பாக நான்கு முறை மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள். அந்த மீட்டிங்குகளின் பேச்சுகள் அனைத்தும் மினிட்ஸ் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மூன்று மீட்டிங்கின் விவரங்கள் மாயமாக மறைந்துவிட்டன. ஒரே ஒரு மீட்டிங் தொடர்பான மினிட்ஸ் மட்டும் எனக்குக் கிடைத்தது. அதைத்தான் கோர்ட்டில் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக விலை நிர்ணயம் செய்தார்கள் என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் அது!''
 
''நிதித் துறையின் துணை செயலாளர் ராவ், 'ஸ்பெக்ட்ரம் ஊழலை சிதம்பரம் நினைத்திருந்தால், அப்போதே தடுத்திருக் கலாம்' என்று எழுதியிருக்கிறாரே? நிதித் துறை அமைச்சர் பிரணாப்புக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா?''
 
''ராவ் பெயரில் வெளியான ஆதாரத்தைக் குறிப்பு, கருத்து, கடிதம், ஆவணம் என்றெல்லாம் குறிப்பிடக் கூடாது. அது, பக்காவான ஆபீஸ் மெமோரண்டம். பிரதமர் செயலர், கேபினெட் செயலர், தொலைத் தொடர்புத் துறை செயலர், நிதி செயலர் என்று பலரும் உட்கார்ந்து தயார் செய்து, கீழ் நிலை அதிகாரியான ராவ் பெயரில் அப்படிப் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அரசு ஃபைல்களில் வழக்க மாகப் பதிவாகும். அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி தரப்பில்கூட, 'அந்தக் கருத்து என்னுடையது அல்ல. ஆனால், ஆதாரங்கள் என்னுடையது' என்றுதான் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தடுத்திருக்கலாம் என்பது பல துறைத் தலைவர்களின் கருத்து, அது ராவின் தனிப்பட்ட கருத்து அல்ல.''

''சிதம்பரம் விவகாரத்தில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது உண்டா?''
 

''இதில் என்ன தனிப்பட்ட காரணம் இருந்துவிட முடியும்? ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளி என்கிறேன் நான். உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஒரு மணி நேரம் வாதம் பண்ணினேன். ஆனால், சிதம்பரம் தரப்பில் 16 மணி நேரம் வாதம் செய்து, மேலும் அவகாசம் கேட் டார்கள். அக்டோபர் 10-ம் தேதியுடன் வாதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அடுத்து, நான் பதில் கொடுப்பேன். எனக்கு அப்போதும் அரை மணி நேரம் போதும். இதேபோல், பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சக குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு முடிவைப் பொறுத்து, இந்த வழக்கு விசாரணை நடக்கும்.
 

இது தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். 'பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கும்,  சீன ராணுவத்திடம் இருந்து தளவாடங்களை வாங்கும் பிசினஸில் ஈடுபட் டுள்ள இன்னொரு கம்பெனிக்கும்  லைசென்ஸ் தரக் கூடாது’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒரு கடிதத்தை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஆ.ராசாவிடமும் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் கேட்கவில்லை. இதையும் நான் அடித்துச் சொல்கிறேன். இது தேசத்துரோகம் அல்லவா!''
 

''ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தைத் தொடர்ந்து வேறு யார் சிக்குவார்கள்?''
 
''சோனியாவின் மருமகன் வதேரா சிக்கலாம்! அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக இருப்பதால், சோனியா பொய் வழக்குகளை என் மீது ஏவப் பார்க்கிறார். கடந்த ஜூலையில் நான் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை, மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக டெல்லியில் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள்! இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன்!''
நன்றி: ஜுனியர் விகடன்