Oct 27, 2011

தமிழகமக்கள் கிள்ளிக்கூட கொடுக்கவில்லை விஜயகாந்த் புலம்பல்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வுக்கு சரியான மாற்றுத் தேர்வு நாங்கள்தான் என்ற கோஷத்தோடு அரசியலுக்குள் வந்த தே.மு.தி.க.விஜயகாந்த்,இரு கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த நிலையிலும், மிகப் பரிதாபகரமான கேவலமான முடிவை சந்தித்திருக்கிறது. 

தமிழக மக்கள் அள்ளிக் கொடுப்பார்கள் என்று விஜயகாந்த் நினைத்திருக்க,தமிழகமக்கள் கிள்ளிக்கூடகொடுக்கவில்லை.
இருந்ததையும் பறித்து கொண்டு ஓட,ஓட விரட்டிவிட்டார்கள்.

சென்னையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில்  
தே.மு.தி.க. 3வதாக வந்துள்ளது. ஆனால், வாக்கு வித்தியாசத்தைப் பாருங்கள். வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்
சைதை துரைசாமி பெற்ற வாக்குகள்        12,40,340.
தி.மு.க. வேட்பாளர் பெற்ற வாக்குகள்     7,20,593
தே.மு.தி.க வேட்பாளர் பெற்ற வாக்குகள்  1,42,203

இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் நானே சரியான மாற்று என கூறியவர் விஜயகாந்த். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் பெற்ற ஓட்டுக்களின் மொத்த எண்ணிக்கை 19,60,933.

இந்த கூட்டுத்தொகை வாக்குடன், தே.மு.தி.க பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப் பாருங்கள். கிட்டத்தட்ட 5%சதவீதம் வருகின்றது. டெபாசிட்டே திரும்பி வராது இதை வைத்துக்கொண்டு, யாருக்கு யார் மாற்றாடாக வருவது?

தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணிஎன்ற கோஷத்தோடு அரசியல் பயணத்தை தொடக்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்கள் வண்டவாளம்என்று சவடாலாக சவாலும் விட்டவர்.

இம்முறை அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. தனித்துத்தான் போட்டியிட்டன. சவால் விட்ட இவர்தான் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கினார்.

விஜயகாந்தின் ஸ்டைலே தேர்தல் சமயங்களில் மாத்திரம் அரசியல் செய்வது. ஆனால், தேர்தல் வராத நேரத்தில் இவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரிவதில்லை அதுதான்.இப்பொழுது தெரியுதா? யாருடைய வண்டவாளம், தண்டவாளம் ஏறியிருக்கிறது?

3 comments:

rajamelaiyur said...

You said very correct

nerkuppai thumbi said...

இதை மற்றொரு விதத்திலும் பார்க்கலாம்.
இரண்டு திராவிடக் கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் இன்னும் பலப்படவில்லை. 2-G போன்ற மிகப்பெரிய ஊழல் வந்ததால் தி மு க போனால் போதும் என்ற மனநிலை ஓங்கியது. அதிமுக சட்டசபை தேர்தலில் வென்றது. இதுவரை பெரிய அளவில் அதிருப்தி இலலாததால் உள்ளாட்சி தேர்தலில் அதே மனநிலையில் மக்கள் அதிமுகவிற்கு வாக்கு அளித்துள்ளனர். மூன்றாம் நிலையில் உள்ள தேமுதிக அடுத்த தேர்தலுக்குள் அதிமுகவும் தூக்கி எறியப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் எழச்செய்ய வேண்டும்.

ஜோதிஜி said...

தம்பி சொல்வது நடக்கவில்லையென்றால் கூட ஒரு பயம் இரு கட்சிகளுக்கும் இருந்தால் கூட போதுமானது?