அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வி.கே.சசிகலா, எம். நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அதிமுக தலைமைச் செயற்குழுவின் உறுப்பினராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிர்வாகத்தில் தலையீட்டின் காரணமாகவே, சசிகலா குடும்பத்தினர் மீது அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 14 பேரின் விவரம்:
1. வி.கே.சசிகலா
2. எம்.நடராஜன்
3. எம்.ராமச்சந்திரன்
4. ராவணன்
5. டி.டி.வி.தினகரன்
6. வி.பாஸ்கரன்
7. வி.என்.சுதாகரன்
8. திவாகரன்
9. வெங்கடேஷ்
10. மோகன் (அடையாறு)
11. குலோத்துங்கன்
12. ராஜராஜன்
13. மகாதேவன்
14. தங்கமணி
"இந்த 14 பேரும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது," என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
19.12.2011

Tweet | |||||
No comments:
Post a Comment