May 12, 2012

கோபாலபுரம்-ராஜபக்‌ஷேவும் கொழும்பு-கருணாநிதியும்.

இன்றைய  அரசியல் சூழ்நிலையில் தனது ஆசை விருப்பம் அனைத்துமே தனி தமிழ் ஈழமே என தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி பேசியும்,எழுதியும் வருகிறார். ஆனால் அதற்கானவாய்ப்பும்,சூழலும்,சந்தர்ப்பமும் அமைந்த நேரமான 2009 மே மாதத்தில் தமிழக ஆட்சிக்கட்டிலில் இருந்த இவர் செய்த அப்பட்டமான தமிழின துரோகத்தை தனது தம்பி-நான்-புரட்சித்தலைவர் தொடரில் புலவர் புலமைப்பித்தன் அவருக்கே உரிய ஆவேசத்தோடும்,ஆதங்கத்தோடும் கருணாநிதியின் போலிவேடத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார்


தியாகம் செய்பவனுக்கு இருக்கும் துணிச்சலைக் காட்டிலும்; துரோகம்
செய்தவனுக்குத்தான் துணிச்சல் அதிகம்.
தியாகம் செய்பவனது துணிச்சல், அந்த கண நேரம் வருகிற துணிச்சல்.
ஆனால், துரோகம் செய்கிறவனுக்கு உள்ள துணிச்சல் காலமெல்லாம் இருக்கும் துணிச்சல். மானமுள்ள தமிழ் மக்களுக்கு உயிராயுதம் வழங்கிவிட்டுப் போனானே;அந்த, மரணத்தை வென்ற மாவீரன் தம்பி முத்துக்குமார். அவனுக்கு இருந்ததுணிச்சல் தன் உடல் மீது தீவைத்துக் கொள்ளும் வரை இருந்த துணிச்சல்.
ஆனால், கருணாநிதிக்கு இருக்கும் துணிச்சல், காலத்தை வென்று நிற்கும் துணிச்சல்.எந்த துரோகத்தையும் அஞ்சாது செய்கின்ற அந்த துணிச்சல் கருணாநிதிக்குமட்டுமே வாய்த்த தனிப்பெரும் துணிச்சல்.
உலகம் எவ்வளவுதான் ஏசினாலும் பேசினாலும் துடைத்துப் போட்டுவிட்டுப்போகிற துணிச்சல், உலகத்தில் எத்தனை பேருக்கு வந்துவிடும்?ஒன்றரை லட்சம் நம் தமிழ் உறவுகளை ஈவிரக்கம் இல்லாமல் ஈனர்கள்கொன்றொழித்தபோது அந்த கயவாளி மக்களுக்கு துணை நின்று, காட்டிக்கொடுத்து, ஒற்றை நாற்காலியை பாதுகாத்துக் கொண்ட ஒருவன்;ஈழதேசமே ரத்தத்தில் குளித்த ஈர தேசமாய் போனதைப் பார்த்து ரசித்த;பிறக்கும்போதே மனசாட்சி இல்லாமல் பிறந்த இந்த மனிதர், தமிழ் ஈழம்தான்தீர்வு என்று பேசுவதற்கு எத்தனை தைரியம், எத்தனை துணிச்சல்இருக்கவேண்டும்!


சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள சிங்காரிகளின் தலைவி ஒருத்தி
சிலப்பதிகார மாநாடு கூட்டியதைப் போல... இந்த மனிதர் எப்படி வெட்கம்இல்லாமல் ஈழம் என்று பேச வருகிறார்! எப்படி பேச முடிகிறது!


மானமுள்ள மனிதனுக்கு ஒரு நாக்கு, ஒரு வாக்குத்தான் அடையாளம். ஆயிரம்நாக்கு, ஆயிரம் வாக்கு என்று இருக்கிற ஒருவரை மனித சாதியிலே சேர்த்துக்கொள்ள முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லாவற்றிலும் போலிகள் இருக்கின்றன.தமிழில் எழுத்துப் போலி கூட இருக்கிறது. அப்படி அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி.


மனிதர்களிலும் போலிகள் இருக்கிறார்கள்.தலை, முகம், கண், காது, வாய், மூக்கு, கழுத்து, உடல், கை, காலென்று எல்லாமனிதர்களுக்கும் இருப்பதைப் போல மனிதர்களாக இல்லாத சில பேருக்கும்இருக்கும். ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்கிறார் வள்ளுவர். அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி.


மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்’ -என்கிறார் வள்ளுவர்.


இந்த மனிதர்கள் மணிக்கு மணி நொடிக்கு நொடி நாக்கையும் வாக்கையும்மாற்றிக் கொள்வார்கள். அஞ்சுவதற்கு அஞ்சும் அச்சம் இவர்களிடம் ஒரு நொடியும் இருக்காது. மானம், வெட்கம் பார்க்கமாட்டார்கள்.
தங்களுக்காக, தங்கள் நலத்துக்காகஓர் இனத்தையே அழிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் பிணங்களைக் கூட விற்பார்கள். இவர்கள் மனிதர்கள் அல்ல; மனிதப் போலிகள்! அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி.


ஆம். கருணாநிதி மனிதரல்ல, மனிதப் போலி!இவர் உண்மையில் ஒரு மனிதராக இருந்திருந்தால்...
ஒன்றரை லட்சம் பேர்துள்ளத் துடிக்க கொன்றொழிக்கப்பட்டபோது; கொத்துக் கொத்தாக குண்டுமழை பொழிந்து நம் தமிழினம் செத்துச் செத்து விழுந்தபோது;


 தமிழ் ஈழ தேசத்தில் ரத்த ஆறு பாய்ந்தபோது;நம் தமிழ்க் குலப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுகொன்றொழிக்கப்பட்டபோது; 62 ஆயிரம் இளம் தமிழச்சிகள் தாலி
பறிக்கப்பட்டு தனி மரங்களாய் நிற்க நேர்ந்தபோது,


தன் ஒரு மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு சித்தம் துடித்த கருணாநிதி , சிதையிலே விழுந்து தமிழர்கள் பிணங்களாக வெடித்துச் சிதறியபோது ஏன் கவலைப்படவில்லை? கண்ணீர் விடவில்லை?


நான் இப்போதும் சொல்கிறேன், இவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில்போர் நின்று போயிருக்கும். இலங்கையில் நடந்த யுத்தத்தைத் தத்தெடுத்துக்கொண்ட இந்தியாவின் மத்திய அரசை கவிழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்ட மனிதர் இந்தமனிதர்தானே?
  
இந்த மனிதருக்கு மனசாட்சி இருந்திருந்தால் இப்போது தமிழ் ஈழம் என்றுவஞ்சக வசனம் பேசுகிற இவருக்கு கொஞ்சமேனும் தமிழ் இனமானம்இருந்திருந்தால்... மத்திய அரசுக்குத் தந்த ஆதரவைத் திரும்பப்பெற்றிருந்தால் மத்திய அரசும் கவிழ்ந்து போயிருக்கும். யுத்தமும் நின்றுபோயிருக்கும்.
  
அதை ஏன் செய்யவில்லை என்பதை மக்கள் மன்றத்தைக் கூட்டி பகிரங்கமாக இவர்தெரிவிக்கட்டும். அதை விட்டுவிட்டு இப்போது தமிழ் ஈழம் என்று சொல்லி முடிச்சவிழ்க்கிற வேலையிலே எதற்காக ஈடுபடுகிறார்? 
என்னுடைய பார்வையில்... கோபாலபுரம் வேறல்ல, கொழும்பு வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான்... தமிழர்களுக்கு இரண்டுமே பலி பீடங்கள்தான்.

No comments: