Jan 5, 2012

நன்றியில் கூட நஞ்சைக் கலக்கிறார் கருணாநிதி-பழ.கருப்பையா அதிரடி தகவல்.

கருணாநிதி முதல்வர் பதவி பெற நடந்த சம்பவங்களில் மறக்கப்பட்ட தகவல்களை 
பழ. கருப்பையா எழுதியுள்ள கருணாநிதி என்ன கடவுளா?” எனும் புத்தகத்தில் எழுதியது.

என்னை முதலமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்என்று சட்டப்பேரவையில் கருணாநிதி பேசியிருப்பதாகச் செய்தித்தாளில் பார்த்தவுடன் நம்ப முடியவில்லை! ஒருமுறைக்கு இருமுறை படித்தபோதும் நம்ப முடியவில்லை. அப்புறம் ஒன்றுக்கு மூன்று செய்தித் தாள்களும் அந்தப் பேச்சை உறுதிப் படுத்தியவுடன் தான் அப்படி அவர் பேசியிறுப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆராய வேண்டியதாயிற்று! சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழியாயிற்று

நன்றி கொன்ற குற்றத்திற்கு ஆளாக வேண்டாம் என்று மனச்சாட்சி சுட்ட காரணத்தால், வாழ்வின் மாலைப் பொழுதிலாவது இந்த அரிய வரலாற்று உண்மையை ஏற்றுக் கொண்டு, அலைபாயும் மனத்திற்கு அமைதி தேடிக் கொள்ளலாம் என்றெல்லாம் கருதுபவரில்லை கருணாநிதி!

மேலும் னச்சாட்சி என்பது ஒருவகை மன ஒழுங்கு! ஒரு பெண் கற்பைப் போற்றுவதும், அதன்படி ஒழுகுவதும் எப்படி அறிவும் உறுதியும் சார்ந்ததோ, அப்படி மனச்சாட்சியை முன்னிறுத்தி ஒழுகுவதற்கும் அறிவும் உறுதிப்பாடும் வேண்டும்! மனச்சாட்சி இட்லருக்கு இருந்ததா? முசோலினிக்கு இருந்ததா? செங்கிஸ்கானுக்கு இருந்ததா? தைமூருக்கு இருந்ததா?


ஆட்சிக் கட்டிலில் அமர்வது எளிதான ஒன்றில்லை! அதற்குச் சாம, பேத, தான, தண்டங்களைக் கடைப்பிடிப்பதென்பது வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கின்ற ஒன்றுதான்! கருணாநிதி இவற்றையெல்லாம் கடைப்பிடித்துத்தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்பதும் நாடறிந்த ஒன்றுதான்.

கருணாநிதி முதல்வரான பிறகு நெஞ்சுக்கு நீதிஎன்னும் பெயரில் தன்வரலாறு எழுதத் தொடங்கி, இப்போது ஐந்தாவது பாகம் வந்து விட்டது! வேறு யாரும் தன்னுடைய வரலாற்றை எழுதி விடாமல், தானே பாகம் பாகமாய்க் கருணாநிதி எழுதக் காரணம், தன்னுடைய வசதிக்கு உண்மைகளை வளைத்துக் கொள்ளத்தான்! எல்லாவற்றையும் ஆக்குவதும் அழிப்பதும் தான் தான் என்பது அவருடைய நம்பிக்கை! ஊத வேண்டியதை ஊதிப் பெரிதாக்கி, அழிக்க வேண்டிய அசிங்கங்களைத் தடம் தெரியாமல் அழித்து விட்டால், வரலாறு தன் விருப்பப்படி அமைத்து விடும் என்பது கருணாநிதியின் நினைப்பு!

அதனால் நெஞ்சுக்கு நீதி முதலாம் பாகத்தில் தான் முதல்வராவதற்கு என்னென்ன பேரங்கள் பேச வேண்டியிருந்தது என்பதையெல்லாம் மறைப்பதற்காக, அவருடைய பிறப்பிலேயே மிகப்பெரிதான முதல்வர் பதவியை அடைந்ததைக்கூட மிகவும் சுருக்கிக் கொண்டு, நான்கே வரிகளில் முடித்துக்கொண்டு விட்டார்!

அவர் பிறந்தது, வளர்ந்தது, ‘ஓடி வந்த இந்திப் பெண்ணேஎன்று திருவாரூர்த் தேரோடும் வீதியில் ஓலமிட்டது, கல்லக்குடியில் ஓடாத ரயிலுக்கு முன்னே தண்டாவளத்தில் தலைவைத்துப் படுத்தது என்று பக்கம் பக்கமாக எழுதும் கருணாநிதி முடியாமல் சுருக்கி கொள்ள வேண்டியதாயிற்று!

10-02-1969ல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஏ.கோவிந்தசாமி தலைமையில் கூடியது. அதன்பின் காத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களிடம் தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் மு. கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நாவலர்கள் அவர்கள் தெரிவித்தார்கள். (நெஞ்சுக்கு நீதி 1: பக் 752)

நாவலரே ஒருமனதாகக் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்என்று சொல்லி விட்டதாகக் கருணாநிதி ஒரு வரியில் சுருக்கி விட்டதன் மூலம், நாவலர் களத்தில் இருந்தார் என்பதையும், அவர் பெயரும் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது என்பதையும், ஏற்கனவே கருணாநிதி நாவலர் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, ‘என்னை முதல்வராகும்படி சொல்கிறார்கள்; நாவலர் இருக்கையில் நான் எப்படி ஆக முடியும் என்று ஒரே வரியில் சொல்லிவிட்டேன்என்று நாவலரைச் செயல்படத் தேவையில்லை என்பதுபோல் நம்ப வைத்து முடக்கி விட்டுக் கடைசியில் கழுத்தறுத்து விட்டதையும் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு, மனக் கசப்போடு நாவலர் வெளியேறி விட்டார் என்பன போன்ற அசிங்கங்களை எல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் முதல்வரான களிப்பைக்கூட வெளிப்படுத்தாமல் சுருக்கிக் கொள்கிறார் கருணாநிதி!

இதயக் கோயிலில் இறைவனாகவே கொலுவேறி விட்ட அண்ணனின் சிலைக்கு மாலை அணிவித்த கதையையும், கடற்கரையில் உள்ள கல்லறையில் மலர் வளையம் வைத்து வணங்கி நின்ற கதையையும், அண்ணா அமர்ந்த நாற்காலியைப் பார்த்து உருகிவிட்ட கதையையும்’ (மேற்படி ப.752) கருணாநிதி பேசும்போது, பக்தியின் முதிர்வால் பரவசநிலை எய்தி விடுகிறார்!

இறந்தவர்களை இறைவனாக்குவது பழந்தமிழர் மரபுதான்; ஆனால் பகுத்தறிவாளர்களின் மரபில்லை! இறந்தவர்களுக்குக் கல்லெடுத்துவணங்குவது பழந்தமிழர் மரபுதான்; ஆனால், கல்லறையை வணங்குவது பகுத்தறிவாளர்களின் மரபில்லை! பெரியார் எந்தச் சமாதியிலும் மலர்வளையம் வைத்து வணங்கியதாகவோ, இறந்தவர்களை இறைவனாக அறிவித்ததாகவோ செய்தி இல்லை! பெரியாருடைய கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிய ஒரே ஆள் பெரியார்தான் போலிருக்கிறது!

கருணாநிதி தன்னுடைய வரலாற்று நூலுக்கு, ‘நெஞ்சுக்கு நீதிஎன்று பெயரிட்ட்து இன்னொரு கொடுமை! போலி மருந்துகளின் வெற்றி அசல் மருந்துகளாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில்தானே இருக்கிறது!

அண்ணா இனித் தேற மாட்டார் என்னும் முடிவை மருத்துவர் மில்லருக்கு முன்பாகவே எடுத்து விட்டார் கருணாநிதி! காலியாகப் போகும் நாற்காலியில் அமரத் துடிக்கும் ஒருவர் எல்லாவற்றையும் முன்கூட்டியே சிந்திப்பது ஒரு அரசியல் வாதிக்குள்ள இயற்கையான உந்துதல்தானே!

அதற்கான வேலைகளை அண்ணா உயிரோடிருக்கும்போதே கருணாநிதி தொடங்கி விட்டார்’ (ப.476) என்று நெடுஞ்செழியன் எழுதுகிறார். நெடுஞ்செழியனின் தன்வரலாற்று நூலுக்குக்கண்டதும் கேட்டதும்என்று பெயர்!

இருந்தாலும் அண்ணாவுக்கு அடுத்தபடியாகக் கழக்கத்தில் மூத்த தலைவராகவும், மூத்த அமைச்சராகவும் இருந்து வந்த நான்தான் முதலமைச்சராக வருவேன் என்று நல்லவர்களும் பொது மக்களும் எதிர்பார்த்திருந்தனர்’ (ப.477) என்று நெடுஞ்செழியன் எழுதுவதிலிருந்து, எல்லாரும் தன்னிடம் வந்து, ‘தாங்கள்தான் இந்த மணிமுடியை ஏற்றருள வேண்டும்என்று சொல்லுவதை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது!

நெடுஞ்செழியனைப் பொதுச் செயலாளராக்கி, ‘தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம் வா!என்று அண்ணா தன்னுடைய பெருந்தன்மை காரணமாகக் கூறிய சொற்களின் மயக்கத்திலிருந்து நெடுஞ்செழியன் இன்னும் விடுபடவில்லை என்று தெரிகிறது! அதனால்தான் தி.மு.க. வளர அண்ணாவுக்கு அடுத்தபடி காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்-ஐப் பார்த்து அவருடைய ஆதரவைக் கேட்பதைக்கூட இன்றியமையாததாக நெடுஞ்செழியன் நினைக்கவில்லை!

எம்.ஜி.ஆர். கழக எம்.எல்.ஏக்கள் பலரையும் இராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் ஆதரவைக் கருணாநிதிக்குத் திரட்டித் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்’ (ப.477) என்று வேறு சொல்லுகின்ற நெடுஞ்செழியன், தன் பங்குக்குச் செய்ய வேண்டியது என்ன என்று கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை!

ஆளுக்கொரு கட்சியில் இரண்டாம் இடத்தில் வாழ்க்கை முழுவதும் அடை காப்பதற்கென்றே பிறந்தவர்கள் நெடுஞ்செழியனும் அன்பழகனும்! ஆனால் கருணாநிதியோ நிமிர்ந்தவனைக் காலைப் பிடிப்பார்; குனிந்தவனைக் குடும்பியைப் பிடிப்பார்!

எம்.ஜி.ஆர் தான் பெரிய கடவுள் என்று கும்பிட்டு விழுந்துதன் பக்கம் சேர்த்துக் கொண்டு விட்ட ஒரே காரணத்தால், கருணாநிதி வெற்றிக் குதிரையாகி விட்டார்!

இருந்தாலும் ப.உ. சண்முகம், மன்னை நாராயணசாமி, அன்பில் தருமலிங்கம், மதியழகன், சத்தியவாணி முத்து ஆகியோரிடமும் தரவேண்டியதைத் தந்து, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள்என்று சொல்லி எல்லாப் பேரங்களையும் முன் கூட்டியே முடித்து வைத்திருந்தார் கருணாநிதி! அந்தப் பேரப் பட்டியலில் சி.பா. ஆதித்தனாரும் ஒருவர்!

ஆதித்தனார் ஏராளமான பணத்தைச் செலவழித்து, எம்.எல்.ஏக்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து அவர்களின் ஆதரவைக் கருணாநிதிக்குப் பெற்றுத் தந்தார்’ (ப. 477) என்றும் நெடுஞ்செழியன் எழுதியிருக்கிறார்! ஆகக் குதிரை வாணிபமும் நடந்தேறியிருக்கிறது!

ஆதித்தனாரைக் கருணாநிதி மந்திரியாக்கியது அவர் ராபின்சன் பூங்காவில் தி.மு.க. வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் என்று கருதியா? இல்லையே! அவருடைய பணம் செய்த அளப்பரிய காரியங்களும் தன்னை முதல்வராக்க உதவியது என்பதால் தானே!

இவ்வளவுக்கும் பிறகும் எம்.ஜி.ஆர் அருள் சுரந்திருக்காவிட்டால், தான் வசனகர்த்தாவாகவே வாழ்க்கையைக் கழிக்க நேரிட்டிருக்கும் என்று வாய் தவறியும் கூடக் கருணாநிதி எங்கும் கூறியதில்லை. அவ்வளவு நன்றியுணர்ச்சி அவருக்கு! தான் சொல்லா விட்டாலும், நாடு அதை மறக்காமல் வைத்திருக்கிறது என்பதுதான் கருணாநிதிக்குள்ள அளப்பரிய கவலை! ஒரு பெருந்தலைவனாக வரலாற்றில் பரிணமிப்பதற்கு எம்.ஜி.ஆர் போட்ட பிச்சையால் ஏற்றம் பெற்றவர்என்னும் சொல் உகந்ததாகாது! நாற்பது ஆண்டுகளாக அந்த உண்மையைத் தான் அங்கீகரிக்க மறுத்தாலும், அந்த உண்மை மறைய மறுக்கிறதே என்னும் கவலை கருணாநிதியை அரித்துக் கொண்டிருந்தது!

அதனுடைய விளைவாகக் கருணாநிதி எம்.ஜி.ஆர் தான் தன்னை முதல்வராக்கினார் என்னும் உண்மையில் ஒரு பாதியை மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டு விட்டு, அதற்காகத் தான் இராமாவரம் தோட்டத்திற்கு அலையாய் அலைந்த மீதி உண்மையை முற்றாக மறைத்து விட்டு, எம்.ஜி.ஆர் தான் தன்னை முதல்வராக்கத் தன்னுடைய வீட்டுக்குத் தொடந்து இரண்டு மூன்று நாட்கள் அலையாய் அலைந்தார் என்று புதுக் கதை சேர்த்துச் சட்டப் பேரவையில் அவிழ்த்தார் கருணாநிதி!

கருணாநிதி முதல்வராக வேண்டாம் என்று குறுக்கே விழுந்து தடுத்தது அவருடைய குடும்பம்தானாம்!

எம்.ஜி.ஆர் என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார்; என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்; குறிப்பாக முரசொலிமாறன் நாவலர்தான் ஏற்றவர் என்று சொல்லியதையும், மாறன் வழியிலேயே நானும் நாவலர் பற்றிச் சொன்னதையும் ஏற்க மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்!

இவர்தான் முதலமைச்சராக ஆக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலுள்ளவர்களைச் சமாதானப்படுத்த இரண்டு மூன்று நாட்கள் வந்தார்!’ (கருணாநிதியின் சட்டமன்ற பேச்சு - தினத்தந்தி 14-10-2010)

கருணாநிதியின் இந்தச் சட்டமன்றப் பேச்சின் நோக்கம், மருமகன் ஆசைப்படவில்லை; மனைவி ஆசைப்படவில்லை; சகோதரிகளும் ஆசைப்படவில்லை; நானும் ஆசைப்படவில்லை; எம்.ஜி.ஆர் தான் ஆசைப்பட்டார் என்று சொல்லுவதுதான்! எம்.ஜி.ஆர் ஏன் ஆசைப் பட வேண்டும் என்பதற்கான விளக்கம் கருணாநிதி பேச்சில் காணப்படவில்லை. அதற்குள் நுழைந்தால் தொலைந்தார்!

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா கருணாநிதி? அதுவும் சட்டமன்றத்தில்!

நாடே தன்னை முதல்வராக்க்கத் தவமிருந்தது போலவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தன்னை முதல்வராகும்படி தொழுது கேட்டுக் கொண்டது போலவும், தன்னுடைய குடும்பம்தான் அதற்குத் தடையாக இருந்தது போலவும், தன் குடும்பத்தைச் சமாதானப்படுத்தாமல் தன்னை முதலமைச்சராக்க முடியாது என்பதால், எம்.ஜி.ஆர் இரண்டு மூன்று நாட்கள் கோபாலபுரத்திற்குப் புனிதப் பயணம் வந்ததாகவும் கருணாநிதி சொல்லியிருப்பது, இராமாவரம் தோட்டத்திற்குத் தான் அலகு குத்திக் கொண்டு பால் காவடியும், பன்னீர்க் காவடியும் எடுத்த அசிங்கத்தை மறைப்பதற்காகத்தான்! 

நன்றியில் கூட நஞ்சைக் கலக்கிறாரே கருணாநிதி!

எம்.ஜி.ஆர் தன்னை முதல்வராக்கினார் என்னும் தவிர்க்க இயலாத உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு, அதற்கொரு துணைக் கதையைக் கருணாநிதி சேர்ந்திருப்பது, வரலாற்றைத் தன் வசதிக்குத் திருப்பிக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையால்தான்!

7 comments:

anbu said...

பழ கருப்பையா பயந்தாகொள்ளி . ஒரு பொம்பளையிடம் போய் காலடியில் கிடக்கும் இவரெல்லாம் பேசுவது கேனத்தனமா இருக்கு.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//எம்.ஜி.ஆர் தன்னை முதல்வராக்கினார் என்னும் தவிர்க்க இயலாத உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு, அதற்கொரு துணைக் கதையைக் கருணாநிதி சேர்ந்திருப்பது, வரலாற்றைத் தன் வசதிக்குத் திருப்பிக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையால்தான்!
//

உண்மை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/2 Comments
Close this window Jump to comment form

Blogger anbu said...

பழ கருப்பையா பயந்தாகொள்ளி . ஒரு பொம்பளையிடம் போய் காலடியில் கிடக்கும் இவரெல்லாம் பேசுவது கேனத்தனமா இருக்கு
//

அப்ப சோனியா க்கு ஆதரவாக இருக்கும் தி மு க க்கு ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

அக்கப்போரு said...

//anbu said...
பழ கருப்பையா பயந்தாகொள்ளி . ஒரு பொம்பளையிடம் போய் காலடியில் கிடக்கும் இவரெல்லாம் பேசுவது கேனத்தனமா இருக்கு
//

சொல்லிட்டாருய்யா ஆம்பள வயித்துல பத்து மாசம் குடியிருந்து பொறந்தவரு .........

அக்கப்போரு said...

//எம்.ஜி.ஆர் தன்னை முதல்வராக்கினார் என்னும் தவிர்க்க இயலாத உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு, அதற்கொரு துணைக் கதையைக் கருணாநிதி சேர்ந்திருப்பது//


இது அண்ணா மறைவிற்குப்பின் கருணாநிதி தி.மு.க.வை கைப்பற்றியபின் தி.மு.க.வின் கொள்கை ஆகி விட்டது. திருச்சி இடைத்தேர்தலில் ஸ்டாலின் "தி.மு.க. ஏன் போட்டியிடுகிறது " என்று ஒரு காரணம் சொன்னாரே அது போல

Ravi said...

கருணாநிதி கடவுள் அல்ல. அவர் கடவுளைவிட உயர்ந்தவர். யோவ் பழம்....வரலாற்றை ஒழுங்கா படிடா...பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்லுடா போக்கத்த பயலே....!