Jan 22, 2012

எங்கிருந்தாலும் வாழ்க கருணாநிதியின் வஞ்சப்புகழ்ச்சி.

தமிழருவி மணியன்
எங்கிருந்தாலும் வாழ்கஎன்ற தலைப்பில் கருணாநிதி இன்றைய முரசொலியில் தமிழருவி மணியனுக்கு தான் செய்ததையெல்லாம்  பட்டியல் இட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பட்டியலில் தமிழருவி மணியனை வீட்டைவிட்டு காலிசெய் என்று விரட்ட முயற்சி செய்ததை மட்டும் ஏனோ எழுதாமல் மறந்துவிட்டார்.

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. திட்டக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் இல்லாமல் தமிழுக்காக,தமிழினத்துக்காக, தமிழருக்காக பாடுபடுபவர் என்ற எண்ணத்தில் பொதுப்பிரிவில் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது.

அப்படி வீட்டை ஒதுக்கித் தந்தவரே அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதிதான். ஏன் ஒதுக்கித் தந்தார் என்றால் ஒருவேளை மைனாரிட்டி தி.மு.க. அரசு, ஆட்சியிலிருந்து இறக்கப்படும் சூழல் வந்தாலும் தமிழருவி மணியனை வீட்டிலிருந்து காலி செய்ய உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த உத்தரவே பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

2008-ல்   இலங்கைத் தமிழர் பிரச்னை  உச்சகட்டமாக முற்றிவந்த நிலையில் தனது திட்டக்குழு பதவியை 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார்.

. “எங்கிருந்தாலும்  வாழ்கஎன்று தத்துவ பேராசான் அறிஞர் அண்ணாவிடம் பயின்ற கலைஞர் என்ன செய்தார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக காங்கிரஸையும் ஆளும் தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார், எழுதினார் என்பதற்காக அரசு குடியிருப்பில் வசித்து வந்த தமிழருவி மணியனை வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டது   தமிழக அரசு.

தமிழக அரசு பிரப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார் தமிழருவி மணியன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு தமிழ் வாழ்க என்று ஊரெல்லாம், கட்டிடங்களிலெல்லாம் எழுதி வைத்தால் போதாது. தமிழ் அறிஞர்களை வாழவைத்தால்தான் தமிழ் வாழும்என்று நெத்தியடியாக தீர்ப்பு சொன்னாரே. அதன் பிறகாவது கலைஞர் பேசாமல் இருந்தாரா? தமிழருவி மணியனை தொந்தரவு செய்யாமலும், நிந்திக்காமலும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் அது நம்முடைய முட்டாள்தனம்.

அவர் ஏதாவது செய்து தரும்படி என்றாவது கோபாலபுரத்தில் காத்துக்கிடந்தாரா?
அப்படி ஏதாவது தமிழருவி மணியன் கேட்டிருந்தால், அதை அப்படியே முரசொலியில் வெளியிட்டு அசிங்கப்படுத்தியும் மகிழ்ந்திருப்பார் கலைஞர். ஆனால், அப்படி அசிங்கப்பட தமிழருவி மணியன் என்றுமே தயாராக இருக்கவில்லை

2 comments:

rajamelaiyur said...

//தமிழருவி மணியனை வீட்டைவிட்டு காலிசெய் என்று விரட்ட முயற்சி செய்ததை மட்டும் ஏனோ எழுதாமல் மறந்துவிட்டார்.
//
தலைவருக்கு நாபக மறதி கொஞ்சம் அதிகம்

rajamelaiyur said...

உங்களுக்காக ..

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்