Jan 25, 2012

எப்படித்தான் இப்படி மாறி மாறி பேச முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால்.



தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில், வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்பதை வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுவதை நாம் காண்கிறோம்என்றும் பேசி புல்லரிக்க வைத்துவிட்டார்  கருணாநிதி.

வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுகிறார்களாம். உண்மையில் வெட்கப்பட வேண்டியவர் யார்? தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. அதை குறித்து கருணாநிதி என்றாவது சிந்தித்திருந்தால், வெட்கப்பட்டிருக்க மாட்டார். பல பேரை வெட்டி சாய்த்திருப்பார். நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஆற்காட்டாரே மின் துறைக்கு மந்திரியாக நீட்டிக்க விட்டது ஏன்?

நாடே காறி துப்பிய ஸ்பெக்ட்ரம் ராசாவை தூக்கி தூக்கி கொஞ்சியது ஏன்?


40 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை குப்பையில் தூக்கி வீசி, அந்த நிலத்தை ஆக்கிரமித்த வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து பம்மியது ஏன்?

ஆள் கடத்தல், அடிதடி என்று குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த ஈரோடு ராஜாவை மீண்டும் கட்டியணைத்தது ஏன்?

தென் மண்டலத்தில் பொட்டு சுரேஷ் போட்ட ஆட்டத்தை விட, அவருக்கு கால் அமுக்கி விட்ட அமைச்சர்களை பற்றி சொல்லும் போது, மெளனகுருவாக இருந்தது யார்?

தனக்கே தெரியாமல், தனது துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழிக்காக மந்திரி பதவி கேட்டு பேரம் பேசியதும், வோல்டாஸ் நிலத்தை அபகரித்ததையும் கண்டும் காணாமலும் இருந்தது யார்?

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் வந்த விவகாரத்தை இன்று வரை சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்? அந்த கடன் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது என்றதுமே, அக்கடன் தொகை எப்படி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை சொல்ல முடியவில்லையே ஏன்?

சாராய வியாபாரியும் லாட்டரி வியாபாரியும் கொடுத்த பணத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டு, நாட்டு மக்களை கண்டும் காணாமாலும் இருந்தது யார்?

சினிமா துறையையே தனது குடும்பம் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்ததை கண்டு, அகமகிழ்ந்தவர் யார்?

இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது, 300 கோடியில் செம்மொழி மாநாடு நடத்தியது யார்?

இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் உதவ முடியவில்லை என்று கேட்டால், “ஒரு அடிமை... இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்என்று கேட்டது யார்?

-இப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்ததே என்று ஒரு நாளாவது வெட்கப்பட்டிருந்தால்.... இந்த ஆட்சி போயிருக்குமா? அட... எப்படித்தான் இப்படி மாறி மாறி பேச முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால்.

1 comment:

Barari said...

நீங்கள் கூறியுள்ள அனைத்தும் இப்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு பொருந்துகிறதே?