Aug 23, 2010

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

நமது நாட்டில் இன்னும் ஏழைகள் மற்றும்  ,நடுத்தரமக்களை ,வலிமையான தாதாக்கள்,அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்திடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பு IAS , IPS ,அதிகாரிகளுக்கு உண்டு.அதுஅவர்களின்தலையாயகடமையும்ஆகும்.ஆனால்இன்றுள்ள
அதிகாரிகள்பெரும்பாலானவர்கள்தங்களுடையபொறுப்பு,கடமை,
சமூகஅக்கறைபோன்றவைகளைநிறைவேற்றுகின்றார்களா என்றால் விடை என்னவோ இல்லை என்பது தான்.

ஆனால் ஒரு சில IAS ,IPS ,அதிகாரிகள் (அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு) தங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு,தாங்கள் எதற்கு இந்த பொறுப்புக்கு வந்தோம்?, தமது கடமை என்ன?  நீதி, நேர்மை,  ஈவு,இரக்கம், ஒழுக்கம்,பண்பாடு,சமூக அக்கறை, போன்ற உயர்ந்த பண்புகள் பட்டுப்போகாமல் உயிரோடு இருக்க  தமது அதிகாரத்தை பயன்படுத்தும்போது இந்தஅரசியல்வாதிகள்அவர்களை IAS என்றால்ஆவனகாப்பகம்,போக்குவரத்துகழகம்,சிறுசேமிப்புஎனமாற்றிவிட வேண்டியது. IPS அதிகாரி என்றால்ரிசர்வ்போலீஸ்,ரயில்வேபோலீஸ் ,சிறப்பு பாதுகாப்பு,எல்லை பாதுகாப்பு, போலீஸ் பயிற்சி பிரிவு   என பந்தாடி பொதுமக்களிடம் தொடர்புகொள்ள முடியாத துறைக்கு மாற்றிவிடுகிறார்கள். எங்கு இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதை நிருபிப்பவர்கள் .அப்படிப்பட்ட ஒரு மாணிக்கமான ஒரு  IPS அதிகாரி தான் திரு.பொன். மாணிக்கவேல்  டி.ஐ.ஜி. அவர்கள். 

இவர் எங்களது சேலம் மாவட்டத்தில் எஸ்.பி.ஆக இருந்த பொழுது கள்ளசாராயம் என்பதே இல்லாத மாவட்டமாக மாற்றியவர். ஏனெனில் நான்குபுறமும் மலைகள் சூழ்ந்த இங்கு சாராயத்தை ஒழிக்கமுடியாமல் இருந்த நிலைமையை தன் செயல்பாட்டால் கள்ளசாராயம் இல்லாத மாவட்டமாக மாற்றியவர்.சேலம் மாவட்ட காவல் துறையில் இவர் இருந்த பணிக்காலத்தில் லஞ்சம் இல்லாத காவல் துறை என மாற்றியவர். அப்படிபட்ட ஒரு நேர்மையான அதிகாரி நான்கு  வருடங்களுக்கு பின்பு திருச்சி சரக டி.ஐ.ஜி.பொறுப்புக்கு வந்துள்ளார். ஒரு அரசு  அதிகாரி தனது பணியால் எப்படி பொதுமக்கள் தோழனாக இருக்க வேண்டும் என்பதை நிருபித்த  இவரைப்பற்றி
                               
                                  இந்த வார ஜூ.வி. யில் வந்த கட்டுரை.

                              பொன்.மாணிக்கவேல்.I.P.S.

'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!' என்ற டயலாக் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்குப் பொருந்தும்!செங்கல்பட்டு, சேலம், கோவை ஏரியாக்களில் எஸ்.பி-யாக இருந்தபோது, இவரதுஅதிரடிகளுக்கு அளவே இல்லை. இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஓமலூர் டி.எஸ்.பி-யான ரத்னம், கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தலைமறைவாகக் கண்ணாமூச்சி காட்டிய கதையை ஜூ.வி. வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த மிரட்சி எல்லாம் போலீஸ் அதிகாரிகளுக்குத்தான்... நாதி இல்லாத பொது மக்களுக்கோ இவர் எப்போதுமே கைகொடுக்கும் செல்லம்!
பொன்.மாணிக்கவேல், இப்போது திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனால், கடந்த நான்கு ஆண்டு காலம் இவருக்கு வனவாசம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுரை பட்டாலியன் கமாண்டன்ட், பழநி பட்டாலியன் கமாண் டன்ட், ரயில்வே டி.ஐ.ஜி. என மக்களோடு நேரடித் தொடர்பு இல்லாத இடங்களில் பணியாற்றி, மீண்டு(ம்) வந்திருக்கிறார்!
கீழ்மட்ட ஊழியர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறார். அலுவலகத்தில் பதவியேற்றதும், முதலில் அமைச்சுப் பணியாளர்களைப் பார்த்து நலம் விசாரித்தார். ''எல்லாரும் சாப்பிட்டாச்சா? நல்லா இருக்கீங்களா? ஆறு மணியாச்சுன்னா வீட்டுக்குப் போயிருங்க. குடும்பத்தை கவனிங்க. அதுக்கு மேல இருக்கிற வேலைகளை நான் பாத்துக்குறேன்'' என்றவர்... ஒரு பணியாளரைப் பார்த்து, ''சொந் தமா வீடு கட்டியாச்சா..?'' என்று கேட்க... ''இல்லைங்க...'' என்றார் அவர் தயக்கத்துடன். ''ஏன் கட்டலை... இத்தனை வருஷமா என்ன செஞ்சீங்க? சீக்கிரம் வீடு கட்டுங்க!'' என்று அக்கறையாக அட்வைஸ் கொடுத்துவிட்டு, தன் அறைக்குள் நுழைந்தார்.
தனக்குப் போடப்பட்டிருந்த குஷன் நாற்காலியைப் பார்த்ததும், ''இந்த ஸீட் எல்லாம் நிரந்தரம் இல்லை. முதலில் அதைத் தூக்குங்க. எனக்கு சாதாரண 'எஸ்' டைப் ஒயர் சேர் போதும்!'' என்று மாற்ற வைத்தார்.
பொதுவாக புதிய உயர் அதிகாரிகள் பொறுப் பேற்றதும், அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாகப் பார்க்க வருவது வழக்கம். பொன்.மாணிக்கவேலை அப்படி யாரும் பார்க்க வரவில்லை. ''எஸ்.பி., டி.எஸ்.பி-க்கள் யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது. நான் அந்தந்தப் பகுதிக்கு வரும்போது பார்த்துக்குறேன்!'' என்று உத்தரவு பறந்ததுதான் அதற்குக் காரணமாம்!தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களையும் மைக்கில் அழைத்தவர், ''கொலை வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க. தீவிரமாத் துப்பு துலக்கி உடனடியாக் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு, அரெஸ்ட் பண்ணுங்க. அதில் தாமதம் இருந்தா நான் பொறுத்துக்க மாட்டேன்!'' என்று உத்தரவு போட்டு இருக்கிறார்.
அடுத்த நாளே மணப்பாறை அருகே ஒரு கொலை வழக்கு... கல்லுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரை, முன்விரோதம் காரணமாக அவரது நண்பர் பாண்டியன் கொலை செய்துவிட்டார். உடனடியாக கைது நடவடிக்கையை முடுக்கிவிட்டவர், மணப்பாறை ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போனார். வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கொலைகாரனின் வாக்குமூலத்தை செல்வத்தின் மனைவி அன்னக்கிளிக்கு காண் பித்தவர், ''உன் புருஷனைக் கொன்னவனை அரெஸ்ட் பண்ணியாச்சு. கோர்ட்டில் கேஸ் போட்டுக் கடுமையான தண்டனை வாங்கித் தந்திடுவோம்மா...'' என்று ஆறுதல் சொன்னார்.

பின்னர், ''போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றவங்களை முதலில் உட்காரச் சொல்லுங்க. அதுக்காகக் கூடுதலா சேர்களை வாங்கிப் போடுங்க. குற்றவாளினு ஒருத்தரை விசாரிக்க கூப்பிட்டாக்கூட சேரில் உட்காரச் சொல்லி விசாரிங்க. அவங்களோட சட்டையைக் கழற்றச் சொல் லாதீங்க... கைது செய்யப்பட்டவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க அரசாங்கம் 35 ரூபா ஒதுக்குது. அதனால், அவங்களுக்கு முறையா சாப்பாடு வாங்கிக் கொடுங்க... புகார் கொடுக்க வர்றவங்க குடிக்க நல்ல தண்ணி வைங்க!'' என்று போலீஸ்காரர்களுக்கு அறிவுறுத்தியவர், அதையே அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உத்தரவாகப் போட்டுள்ளாராம். அதோடு, ''வயசான போலீஸ்காரங்களுக்கு கடினமான பணி கொடுக்க வேணாம். எழுத்து வேலைகள் மட்டும் கொடுங்க...'' என்றும் சொல்லி இருக்கிறார்.
இவரைப்போன்ற அதிகாரிகள் மாவட்டத்திற்கு சிலர் இருந்தால், தமிழ்நாடு எப்படி இருக்கும்.   ஹும் அப்துல் கலாம் கூறியபடி மக்களே கனவு காணுங்கள் அது தான் நம்மால் முடியும்.

Aug 16, 2010

சோனியா ஏன் தொகுதி நிதியை செலவு செய்யவில்லை .



இந்திய திரு நாட்டின் உயர்ந்த அமைப்பான பார்லிமெண்டின் மேன்மை மிகு எம் .பி. கள் 540 பேர்களில் சுமார் 130 பேர் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியில் ஒரு ரூபாய் கூட தாங்கள்  தேர்வு பெற்ற தொகுதிக்கு செலவு செய்யவில்லை.
ஒரு எம் பி. இக்கு, ஆண்டுக்கு 2 கோடி வழங்கப்படுகிறது. அதில் இவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த வில்லை என்பதை படித்த உடன் மனம் மிக  மிகவும் சங்கட பட்டது. ஏன் அந்த 130 தொகுதிகளும் அனைத்து வித வசதிகளும் பெற்று விட்டதா?. தொகுதி முழுவதும் தன்னிறைவு பெற்று இந்தியாவின் முன்மாதிரி  எம். பி. தொகுதி ஆகிவிட்டதா?.இதில் கொடுமையான விஷயம் இந்த 130 பேரில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா ,B J P தலைவர் L K  அத்வானி, லாலு பிரசாத் யாதவ்  போன்ற முக்கியமானவர்களும்,  தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த வில்லை என்பது  அதிர்ச்சி தரும் தகவல்.
அத்வானிக்கு தான் பிரதமர் ஆக  முடியவில்லை எனும் வருத்தம்.அதனால் செலவு செய்யவில்லையா?.
பீகார் முதல்வர் ஆக முடியவில்லை என வருத்த பட்டு லாலு பிரசாத் யாதவ் செலவு செய்யவில்லை .
சரி ஆனால் திருமதி சோனியா ஏன் தொகுதி நிதியை செலவு செய்யவில்லை .
இவருக்கு பதவி,அதிகாரம், ஆட்சி என சகல வசதிகளும் இருந்தும் மக்களுக்கான உதவி செய்ய வேண்டும் என அவர்எண்ணவில்லையே?.தன்னை போலவே தான் தொகுதி மக்களும் சகல வசதி வாய்ப்புகளுடன் சுகமான வாழ்க்கை வசதி பெற்று வாழ்கிறார்கள் என்ற நினைப்பு காரணமா?. அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்  பாவத்திக்கான தண்டனையா?
சரி இவர்கள் தவிர மற்றவர்கள் ஏன் இப்படி?. இந்தியாவின் தலைவிதி, இவர்கள் எல்லாம்  இந்திய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள். கடவுள் தான் இந்த நாட்டின் மக்களை காப்பாற்ற வேண்டும். 

Aug 8, 2010

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது முடியாத காரியம்.


காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே, அதை விட காங்கிரசுக்கு ஒரு தற்கொலை முயற்சி வேறொன்றும் இருக்க முடியாது.தமிழகத்தில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்தி 43 வருடங்கள் ஓடிவிட்டன.மாண்டவன் மீண்டு  வந்தாலும் வரலாம் ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது  முடியாத காரியம்.காமராஜர் ஆட்சியின் போதுதான் மாநிலப் பிரிவினையின்பெயரில்இயற்கைவளமும்,நீர்வளமும்,நிறைந்த பகுதிகளை கேரளாவிடம் பறிகொடுத்தது.  மலம்புழா டேம்  ,கொல்லங்கோடு, நெம்மாரா,   பாலக்காடு மாவட்டத்தின் பெரும் பகுதிகள் ,நெல்லியாம்பதி,ஆழியாறு டேம் , தேவி குளம், பீர்மேடு, மூணார்,குமுளி, வண்டிப்பெரியார்,ஆகிய பெரும் பான்மையான தமிழகத்திற்கு என்று  ஈடு செய்ய முடியாத இழப்பு  ஏற்பட்டது. அதனால் இன்று  தென்தமிழகத்தில்  தண்ணீர் பிரச்னை..இதை காமராஜரின் புகழ் பாடும் காங்கிரஸ் கதர்  சட்டைகளால் மறுக்க முடியுமா?. இல்லை உண்மைத் தமிழர்களால் இதை மறக்க முடியுமா?

அதே போல் இந்தியாவின் பிரதமர் யார் என தீர்மானிக்க வேண்டிய தருணத்தில் தேச நலனை விட, கட்சி நலனை விட , நேரு குடும்ப பாசத்தால்  இந்திராவை பிரதமராக்கியதால்  இந்தியாவின் எதிர் காலமே சிதைந்து போய்  இன்றைய அரசியல்  அலங்கோலங்கள் அரங்கேற காரணமானார் காமராஜர். .இது தான் தமிழக காங்கிரஸ் கதர்சட்டைகளின்  ஆசையா?. .
.
காமராஜர் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் இந்திராஅம்மையாரின் ஆட்சியின் அராஜகத்தை பொறுக்க முடியாமல்  காங்கிரஸ் கட்சியை வெறுத்து  தனியாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தார் இது வரலாறு. இப்பொழுது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே  அது ஸ்தாபன காங்கிரஸ்ஆட்சியா?. அல்லது இந்திராஅம்மையாரின் ஆட்சியா? எந்த  ஆட்சி அமைக்க போகிறிர்கள்?. ஏனென்றால்  காமராஜர் தன் கடைசி காலத்தில் இந்திராஅம்மையாரின் எமர்ஜென்சி ஆட்சியின் அராஜகத்தை பொறுக்க முடியாமல்  அந்த வேதனையால் மனம் நொந்து அதனாலேயே மரணமடைந்தார்  என்பது  வரலாறு .மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு குடும்பமும் பல தலைமுறையாக இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் கசப்பான உண்மை. அதேபோன்ற காமராஜர் ஆட்சி  என்ற  பெயரில் மீண்டுமொருமுறை தமிழகம்     தன் இனஉணர்வு இழந்து ,மொழி உணர்வு இழந்து,  அவமானத்தை  சந்திக்க வேண்டுமா?.மீண்டுமொருமுறை தமிழகம் சந்திக்காமல் இருப்பதுதான்  தமிழக மக்களின் ஆசையும்  இதுதான் .

Aug 5, 2010

காமராஜ் ஆட்சி கக்கன் ஆட்சி என்று பேசுவது வெட்ககேடு.

முன்னாள் அமைச்சர் கக்கன்


எளிமை, நேர்மைக்கு உதாரணமாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா மதுரையில் ஜூலை 31ல் நடந்தது .  இந்த விழா ஏற்பாடுகளை  மாநிலகமிட்டிசார்பில்விழா நடப்பதாக அறிவித்தாலும்  மத்தியஅமைச்சர் சிதம்பரம் கோஷ்டியினரே முன்னின்று நடத்தினர்.பேசிய பல தலைவர்கள் காமராஜர்ஆட்சி அமைப்போம்  என அறைகூவல்  விடுத்தனர்.
நடந்தநிகழ்வுகள்கோஷ்டிபூசலைதோலுரித்துக்காட்டுவதாகஅமைந்ததுஉண்மை காமராஜர்ஆட்சிஅமைப்போம்எனஅறைகூவல்விடுத்காங்கிரசாரின்கோஷ்டிப்பூசல் கக்கன் விழாவில் வெளியானது ..

ஆரூண் எம்.பி., பேசுகையில், தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படும்படி குறிப்பிட்டார்.காங்., வலுவாக இருக்கிறது. தற்போதைய கூட்டணியும் வலுவாக இருக்கிறது, என குறிப்பிட, கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. தற்போதைய கூட்டணிக்கு இது எதிர்ப்போ? என தொண்டர்கள் மத்தியில் பேச்சும் எழுந்தது . அதை முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு பிரதிபலித்தது. அவர் பேசியதாவது:தொண்டர்களாகிய நாங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். தலைவர்கள் நீங்கள் மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். மேலிடம் எந்தப் பக்கம் போக சொன்னாலும், அந்தப்பக்கம் போவோம்{இவர்களுக்கு சுய அறிவே கிடையாது}  நாங்கள் உங்களுடன் இருப்பதால் தவறை சுட்டி காட்டுகிறோம் என்றார்.

காங்கிரஸ் கட்சி காரர்களால்ஒரு மேடையில் கூட ஒற்றுமை காட்ட முடியலை. காமராஜ் ஆட்சி கக்கன் ஆட்சி என்று இவர்கள்  பேசுவது வெட்ககேடு. அகில இந்திய அளவில் ஒரே குடும்பம் காங்கிரஸ் கட்சியை கையில் பல தலை முறைகளாக கைபற்றி வைத்துள்ளது. அந்தோ பரிதாபம், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் பல குடும்பத்தினரின் கையில் சிக்கி சின்னா   பின்னமாகி   கந்தலாகி கிடக்கிறது . சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் பணம் பதவி  என ஆசை காட்டி தன்  அல்லக்கைகளை  வைத்து  ஒரு புறமும்.,  தங்கபாலு  இவர்  ஒருவரே போதும் மரியாதை இன்றி கூட்டணி கட்சி தி.மு.க .க்கு  ஜால்ரா போட்டும்,  காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளை  சிண்டு  முடிய என மறு புறமும்., இளங்கோவன் கேட்கவே  வேணாம் அவர் வாய் சும்மாவே இருக்காது  பேசி பேசியே வீணாப்போன ஜென்மங்களில் ஒருவர்தான் இந்த இளங்கோவன்அவர்  பங்குக்கு  ஒரு புறமும்., வாசன் தான் ஒருவரே  காங்கிரஸ் கட்சி என்றும்,  தன்  கோஷ்டி  தான்   காங்கிரஸ் கட்சி என்றும்,   அவர்  பங்குக்கு  ஒரு புறமும்.,   அன்பரசு, மணிசங்கர் ஐயர்,.  பிரபு,.  பீட்டர் அல்போன்ஸ் போன்ற  ஜோக்கர்கள்  எந்த கோஷ்டி கை ஓங்குதோ அங்கே ஜிங்குசா போட்டு  காங்கிரஸ் கட்சியை கேவல படுத்தும் கும்பல் ஒரு புறமும் காங்கிரஸ் கட்சியை அழித்து திராவிட கட்சிகளிடம் அடகு வைக்காமல் விடமாட்டார்கள்.
 

தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் ,  வாசனுக்கும்  சிதம்பரத்துக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் கட்சியை சந்தி சிரிக்க வைக்குமே  தவிர , சீட்டுகள் பெற்றுத்தராது .. இறுதியில், இந்த இருவருமே கிடைத்த அப்பத்தை குரங்கின் கையில் கொடுத்து என்ற கதையாக  நிற்க போகின்றனர்.. என்னே இந்த கொடுமை ?தனியாக   நின்று தேர்தலை சந்தித்தால் இவர்களோட வண்டவாளம் ,  திறமை தெரிந்து விடும். காங்கிரஸ் தலைவர்கள் 
அனைவரும் திண்ணை பேச்சு வீரர்கள். வீராப்பு பேசுற கார்த்திக் சிதம்பரம் தனியா போட்டி போட முடியுமா? . வாசன், தைரியம்   இருந்தால்  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார்  கொல்லைப்புற  ராஜ்ய சபா MP ஆகிவிட்டார்.இல்லையெனில் தங்கபாலு,இளங்கோவன்,மணிசங்கரய்யர் இவர்கள்  வரிசையில் இருந்துருப்பார். தொகுதிக்கு 10 வோட்டு வைத்திருக்கும் காங்கிரஸ், இவர்கள் பேசும் பேச்சுக்கு ஒன்றும் குறையில்லை.இவர்கள் பேச்சை குறைத்தாலே போதும் இந்தியா  முன்னேறிவிடு நாடும் நல்லா  இருக்கும்.இது எல்லோருக்கும் தெரியும்.
 
   தமிழகத்தில் காமராஜர், மூப்பனார், ஆகியோரால் முடியாததை,
தொண்டர்கள் இல்லாத { ஏன் என்றால்  எல்லோருமே தலைவர்கள் } இந்த வேட்டி கிழிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் வெங்காயங்கள்  தமிழகத்தில் காமராஜர் ஆட்சிய  கொண்டு வர போகுதாம்.  மத்தியில் இன்னும் மெஜாரிட்டி இல்லை . இதெல்லாம்  பேசுற  பேச்சா இது?, வெட்கமாக  இல்லையா? ADMK  DMK போடுற பிச்சைகளை வாங்கிட்டு மரியாதைக்கு ஒரு ஓரமா கதரை கட்டிக்கிட்டு  இருக்கவேண்டிய  காங்கிரஸ், தமிழகத்தில் காமராஜர் ஆட்சிய  கொண்டு வர போகுதாம்.  காங்கிரஸ்  சென்ற முறை கொடுத்த தொகுதிகளில்  ஜெயிக்க துப்பு இல்லாத காங்கிரஸ்காரன், திராவிட கட்சிகளை விட்டு விலகி  தனியே தேர்தல்களை சந்தித்தால்  அப்போது தெரியும் இவர்கள் வண்டவாளம் தமிழகத்தில் காங்கிரஸ் முழுவதுமாக செத்து விடும். இவர்கள்  பேசுற காமடி தாங்கமுடியவில்லை .
 

தமிழகத்தில் 1967ம் ஆண்டே காங்கிரஸ் முக்கால்வாசி செத்து விட்டது. இந்த சாதனையினை நிகழ்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிகவும் அதிகம். இன்னும் சொல்லப் போனால் அவர் செய்த சாதனைகளிலேயே மிக மிக  சிறந்தது காங்கிரசுக்கு சாவு மணி அடித்தது தான். ஏதோ திராவிட கட்சிகளின் புண்ணியத்திலும் மத்தியில் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தினை கொண்டும் கொஞ்சம்  உயிர் எஞ்சியுள்ளது.  

மெகாஊழலை குண்டு ஊசியில் ஆரம்பித்து காமன்வெல்த் போட்டி  வரை ஊழல்களில் திளைத்து நாட்டின்பொருளாதாரத்தினை பெருமளவில் சுரண்டிய, சுரண்டி கொண்டிருக்கின்ற,  காங்கிரஸ் கட்சி நம் மாநிலத்தில் வீழ்ந்தது தமிழக மக்களின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்...

Aug 3, 2010

என்ன கொடுமையடா பகவானே...

தமிழக அரசே!,  என்னகொடுமை!!,  மக்களுக்கு  தான் காதிலே  பூ  வைத்தாய்
என்றால் என் உடலுக்கே  பூவா?  என்ன கொடுமையடா பகவானே?.

காதிலே வைத்த பூ காய்ந்து  விடும் காயாதே
என் மேல் உள்ள பூக்கள்
என்று இதற்கு  புதுக்குறளா எழுத  முடியும்?,..