Oct 28, 2010

கேட்காமலே கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!!

மனிதனும் மனிதாபிமானமும் இன்னும் செத்து விடவில்லை என்பதற்கு நாராயணன் கிருஷ்ணன் ஒரு எடுத்துகாட்டு. இவரை பார்த்து நிறைய நெஞ்சங்கள் மனிதாபிமான முறையில் சுயநலம் விட்டு இருந்தால் நாட்டில் செத்து கொண்டிருக்கிற மனித நேயமும், தான், தனக்கு என்கிற கர்வமும் போய் கண்டிப்பாக ஒற்றுமை, சகோதரத்துவம், உதவி செய்து மகிழ்தல், என்று நாடு  நலம் பெறும். கடவுள் கடவுள் என்று தேடும் மக்களுக்கு உங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன். பணம் என்னடா பணம் பணம் மனிதாபிமானம் தானடா நிரந்தரம் என வாழும் நீங்கள் தான் கடவுள். மனிதனை படைக்கும் கடவுள் அவனை பராமரிப்பது இல்லை. அதற்கு பதிலாக இவரை போன்ற மனித வடிவில் பூமிக்கு வந்து மனிதனை பராமரிக்கிறார்.

ஊருக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றாலும் ஒருவருக்கேனும் உணவு கொடுங்கள் என ஆரம்பித்து இன்று ஊருக்கே உணவு வழங்கும் வாடிய பயிரை கண்டபோதிலெல்லாம் மனம் வாடினேன் என்ற வள்ளலாரின் வாரிசு இவர்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே

இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24.10.2010 அன்று இவரை பற்றி ஜெயா டிவி.யில் விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பானது.உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல்ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 10ல் ஒருவராக உள்ள இவரை 10ல் முதல்வராக(1வது ரேங்க்) பெற அவருக்கு இங்கே சென்று உங்கள் வோட்டை பதிவு செய்யவும்

இவரைப்பற்றிய தகவல்:

 5நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் தனது பசிக்கு மனிதகழிவை உண்ணும் கொடுமையும், உணவுக்கு போராடும் அவலத்தையும், கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.

நாராயணன் கிருஷ்ணன் டிரஸ்ட் விபரம்.
 Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
 Doak Nagar Extension,
Madurai – 625 010.
India Ph: +91(0)452 4353439/2587104 Cell:+91 98433 19933

E mail : ramdost@sancharnet.in
இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை

Oct 26, 2010

எந்திரன் திருட்டு கதையில் உருவானது. முழு விவரம்!!


 எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சமீபத்தில் நானும் “”எந்திரன்” திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது “”ஜூகிபா” கதையை மூலக்கதையாக வைத்து சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து “”எந்திரன்” திரைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.


இந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட “”இனிய உதயம்” இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது “”ஜூகிபா” கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி “”எந்திரன்” திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து “”எந்திரன்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.

 இந்திய காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 63-ன் படி கிரிமினல் குற்றம் புரிந்துள்ள திரைப்பட இயக்குநர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஆரூர் தமிழ்நாடன் கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆரூர் தமிழ்நாடன்,
ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் மூலக்கதையை “இனிய உதயம்’ பத்திரிகையில் கடந்த 1996ஆம் ஆண்டு நான் எழுதி வெளியான “”ஜூகிபா” என்ற சிறுகதையில் இருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.



Oct 22, 2010

தமிழக ஆட்சியை பிடிக்க திட்டம் போடுகிறது இ.காங்.



மதசார்பு முத்திரை குத்தப்பட்ட BJP ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க  வேண்டும் என்ற வெறியில் தேவகவுடா அணியும்,சோனியா அணியும் வரிந்துகட்டிகொண்டு வேலை பார்க்கிறது.இவர்களின் இந்த செயல் அரசியல்களத்தை சாக்கடை நாற்றமெடுக்க செய்துள்ளது.


ஆறுஆண்டுகள் தேர்தலில் நிற்க்கூடாது,உடனே பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்பது அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு. உடனே பதவி விலகாத இந்திரா, எனது இ.காங்.பெரிய தேசிய கட்சி அடுத்த பிரதமரை தேர்வு செய்ய எனக்கு 15 நாள் அவகாசம் என நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அதை தவறாக பயன்படுத்தி உடனே அவசர நிலையை பிரகனபடுத்தினார்.


புதுச்சேரியில் பதினொன்றை விட பத்து என்ற எண்ணிக்கை பெரியது எனும் புது இலக்கணம் மூலம் ஆட்சியை காப்பாற்றி புதிய ஜனநாயக இலக்கணம் படைத்தார் இ.காங்.கவர்னர்.காமிரெட்டி.


ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அவர்களை முதல்வர் பதவியில் இருந்து கவிழ்க்க பாஸகர் ராவ் எனும் புல்லுருவி மூலம் இ.காங்.ஆட்சி.


தமிழகத்தில் எம்ஜிஆர்,கருணாநிதி என இருவரையும் படாதபாடு படுத்தி ஆட்சியை கவிழ்த்து இ.காங்.


கடந்த 40 ஆண்டுகளாகவே எதிர் கட்சி ஆட்சியை கலைப்பது, கவிழ்த்து விடுவது என செயல்படுவதே இ.காங்.க்கு கை வந்த கலையாக உள்ளது. இப்போது இந்த ஈனதனமான திருவிளையாடலை மறுபடியும் கர்நாடகத்தில் விளையாடி பார்க்க துடிக்கிறது இ.காங்., தேவகவுடா எனும் ஈனபிறவியுடன்.


தேவகவுடா,சந்திரசேகர்,சரண்சிங்,குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசுகளை கவிழ்க்கபட்டதும், நம்பவைத்து கழுத்தை அறுத்த்தும் இதே காங்.கட்சி தான்.சூடுசுரணையற்ற தேவகவுடா இப்போது இ.காங்.உடன் கைகோர்த்து கொண்டு கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை செய்கிறார்.


ஜனநாயகத்தை காப்பேன் என்று பதவி ஏற்றுக்கொண்டு அந்த உறுதிமொழியை காலில் போட்டுமிதித்து ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இடத்தில் இ.காங். இருப்பதே அவர்களின் அரசியல்சித்துவிளையாடல்களுக்கு முக்கிய காரணம். ஆட்சி கவிழ்ப்பு கலையில் கைதேர்ந்த இ.காங்.இப்போது தமிழகத்திலேயும் வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழக ஆட்சியை பிடிக்க திட்டம் போடுகிறது என்பதனையே திருச்சி பொதுகூட்டபேச்சுக்கள் மூலம்தெளிவாகிறது.

Oct 16, 2010

விழித்திடு தமிழா,ஒழித்திடு தமிழா, இலவசத்தை அழித்திடு தமிழா!

"இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டுள்ள துண்டு பிரசுரம்(நோட்டீஸ்) வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் இலவசம் எனும்பெயரில்இன்றையஅரசியலில்உள்ளசமூகஅவலங்களை,மனசாட்சியுள்ள,சுயமரியாதையுள்ள,ஓர் சராசரி மனிதனின் உள்ளகுமுறலாக வெளியிட்டு உள்ளனர். அவர்களின் பெயர்,முகவரி அதில் இல்லைஎன்றாலும் ஒட்டு மொத்த தமிழகத்தின் மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சியின்     வெளிப்பாடாக அதில் உள்ள வாசகங்கள் இருப்பதால் அது அப்படியே இங்கு உங்களுக்காக!  

"ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார்,எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!' "என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'


"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை.

இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இது மொத்த தமிழகத்தின் திமுக உடன்பிறப்புக்கள் உட்பட  தமிழகத்தின்  நிலை கண்டு கவலை கொள்ளும் அனைவரின் மனம் இன்றளவும் வெதும்பி கொண்டு தான் இருக்கு என்பது தான் உண்மை.
அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

Oct 10, 2010

எந்திரன்! உயர்நீதிமன்றம் தடை! தமிழகஅரசு பதில்



திமுக ஆட்சியில் எல்லாமே இப்படித்தான்!  நீதி துறை ஓரளவிற்கு நியாயமாக இருப்பதால்தான் கொஞ்சமாவது மக்கள் ஆறுதல் அடையமுடிகிறது.

 
தமிழக அரசின் பதில்! ஒரு வார்த்தை விளையாட்டு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. முரசொலி கட்டுரையில், ஒரு பெண்ணை உயர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க முதல்வர் விரும்பியதை சிலரால் பொறுக்க முடியவில்லை என்றுள்ளது. பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருமாநில டி.ஜி.பி. பெண் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்  என்றால்  அப்போ பணிமூப்பு, அனுபவம்பணித்திறன் என்பதெல்லாம் தேவையில்லையா.  இப்படியா இடத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் ஒரு முதல்வர்  தமிழகத்திக்கு தேவையா என்று தான் கருத வேண்டியுள்ளது....

பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில டி.ஜி.பி., தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால், பணி மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை."என்பது தமிழக அரசின் வாதம். அவர் தன்னை விட மூத்த அதிகாரிகளை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவும் நியமன குறிப்பில் இடம் பெறவில்லை. திரு நடராஜ், திரு விஜயகுமார் ஆகியோர் பணித்திறன், அனுபவம், பணி மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களா? இல்லையா? என்பதை தமிழக மக்களே  அறிவார்கள் எனும்போது இது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா ?
லத்திகா சரண் பொறுப்பேற்றது முதல்  காவல் துறையில் "தமிழகமக்களுக்கு" பாதுகாப்பு கருதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை. கன்னி மேரி அஞ்சுகம் விவகாரம், ஆள் கடத்தல் சம்பவங்கள், கட்டபஞ்சாயத்து தாதாக்களின் அட்டுழியம்,பல்கலை துணை வேந்தருக்கு அடி உதை, ரேசன் அரிசி கடத்தல், கொள்ளை சம்பவங்கள்,சட்டக்கல்லூரிபிரச்னை, மணல் கொள்ளை, ஈரோடு ராஜாவின்  காட்டுதர்பார்  என பல சம்பவங்களை கூறலாம். கை கட்டி வாய் பொத்தி சேவை செய்ய ஒருவர் தேவை என்பதால்தான் அந்த பதவிக்கு லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் அவரது நியமனம் முற்றிலும் நியாயமானதே.

திமுக அரசு திரும்ப திரும்ப உயர் அதிகாரிகள் விஷயத்தில் மூக்குடைபட்டுள்ளது. ஏற்கனவே உமாசங்கர். தற்போது நடராஜ் விவகாரம். இந்த தீர்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம். இதற்கும்  முதல்வர் என்ன சொல்வார் தெரியுமா? நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்பார். இதன் மூலம் தமிழகத்தில் பதவி உயர்வு எப்படி கொடுக்கபடுகிறது என்பதை அறியலாம். போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ள திரு மு,க.விற்கு இதைவிட கேவலம் ஏதுமில்லை. வேண்டியவர்க்கு பதவி என்பது தி மு க வின் வழிமுறை. எது நடந்தாலும் கருணாநிதி பதவியை விடபோவதில்லை.இனியாவது தமிழகஅரசு தங்களுக்கு சாதகமானவர்களை பணியில் நியமிக்காமல் அரசு விதிகளின்படி நடக்குமா. பதவி நியமனத்தில் அரசியல் குறுக்கீடு இருந்தால் லத்திகாசரண் என்ன லத்தியேகூட D G P ஆகும்!.  ஏனென்றால் நடப்பது தமிழகஅரசு எந்திரத்தை இயக்கும் எந்திரன்(கருணாநிதி) ஆட்சி.. அப்பாடா தலைப்பு வந்துவிட்டது.