Dec 27, 2011

விக்கிரமாதித்தா! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! 

கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்!

பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? 

நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!
நன்றி : தினமணி

Dec 24, 2011

மோசடி விழாவில் பிரதமர் ஏமாற்றும் ப.சிதம்பரம்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு சென்னை வருகிறார். திங்கட்கிழமை காலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் கணித மேதை ராமனுஜத்தின் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்கிறார்.

தமிழக பயணமே ஒட்டுமொத்த மோசடி பயணம். அரசு விழாக்களுக்கு இடையே இரண்டு தனியார் விழாக்கள் நடக்கிறது. அதற்குதான், இரண்டு அரசு விழாக்களையே ஏற்பாடு செய்திருக்கிறார் சிவகங்கை சின்னபையன்ப.சிதம்பரம்

காரைக்குடி செல்லும் பிரதமர் அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரைக்குடியில் கட்டப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை ஆகிய இரண்டையும் திறந்து வைக்கிறார். ஏற்கனவே, திறந்து வைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு மருத்துவமனைகளை மீண்டும் திறப்பதற்கு வருகை தந்திருப்பது ஒரு மோசடி தானே.

எப்படி இந்த மோசடி நடக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் இடங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரிக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட 80 ஏக்கர் நிலத்தை, வங்கியில் கடன் பெற்று திவால் ஆனவர் என்று சொல்லப்பட்ட நபரிடமிருந்து சிதம்பரத்தின் சகோதரியும், சகோதரியின் மகனும் வாங்கியிருக்கிறார்கள். அதை விசாரித்தால், பல விவகாரங்கள் அம்பலத்துக்கு வரும்.

இந்த நிலத்தில்தான் 9 ஏக்கர் நிலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. ஒன்றரைஏக்கர் நிலம் வாசன் கண் மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மருத்துமனைகளும் சிதம்பரத்தின் குடும்பத்திற்காக கட்டப்பட்டவை

சிதம்பரத்தின் மருமகள் டாக்டர் ஸ்ரீநிதிக்காக அப்பல்லோ குழுமம் காரைக்குடியில் அப்பல்லோ மருத்துவமனையின் கிளையை கட்டிக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மளமளவென உருவாகி வரும் வாசன் கண் மருத்துவமனையின் குழுமத்தையே கார்த்திக் சிதம்பரம் தான் நடத்துகிறார்

இந்த இரு மருத்துவ மனைகளைத் திறப்பதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங்கை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துவந்திருக்கிறார். காரணம், மத்திய அமைச்சரவையிலிருக்கும் ப.சிதம்பரம் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா இல்லையா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது இமேஜை நிலை நிறுத்திக் கொள்ள இப்படியொரு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்து வருகிறார் என்று காங்கிரஸ்காரர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏன் பிரதமரை அழைத்து தாஜா செய்கிறார் என்றால், காங்கிரஸில் நடக்கும் உள்குத்து மோதலில் ப.சிதம்பரத்தை காலி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ப.சி.க்கு யாருமே ஆதரவு அளிக்க வரமாட்டார்கள். தனக்காக சோனியாவிடம் பேசக்கூடியவர் மன்மோகன் சிங் மட்டுமே, என்பதால், அவரை தாஜா செய்துக் கொண்டிருக்கிறார்

அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

                                    இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்லவேண்டும்.
                                              இவர் போல யார் என்று ஊர்சொல்லவேண்டும்.

 முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. 

அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். 


‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். 


ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!  
 சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )

Dec 19, 2011

அ.தி.மு.க.,வை கைப்பற்ற திட்டம் - சசி கலா நீக்கம்

அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வி.கே.சசிகலா, எம். நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்படுவதாக கூறியுள்ளார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அதிமுக தலைமைச் செயற்குழுவின் உறுப்பினராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.    
ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நிர்வாகத்தில் தலையீட்டின் காரணமாகவே, சசிகலா குடும்பத்தினர் மீது அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 14 பேரின் விவரம்:

1. வி.கே.சசிகலா
2. எம்.நடராஜன்
3. எம்.ராமச்சந்திரன்
4. ராவணன்
5. டி.டி.வி.தினகரன்
6. வி.பாஸ்கரன்
7. வி.என்.சுதாகரன்
8. திவாகரன்
9. வெங்கடேஷ்
10. மோகன் (அடையாறு)
11. குலோத்துங்கன்
12. ராஜராஜன்
13. மகாதேவன்
14. தங்கமணி

"இந்த 14 பேரும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது," என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
19.12.2011

Dec 18, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போக போக சோனியாவும் மாட்டுவாரா?.


தொலை தொடர்புத் துறையில் .ராசா மந்திரியாக இருந்தபோது சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் பற்றி, அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரமும், ராஜாவும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர். 

ஏனென்றால், 2003ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயத்தை நிதி அமைச்சரும், தொலைத்தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்.

இது, சிதம்பரத்திற்கு நன்றாகத் தெரியும். இந்த முடிவுகள் பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், கடந்த பிப்ரவரி மாதம் பார்லிமென்டில் தெரிவித்தார்

நிதி மந்திரிக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்திருக்காது. .சிதம்பரம் நினைத்திருந்தால் இந்த ஊழலை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்

36000 கோடி ரூபாயை சோனியா குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டவர்களும் வெளி நாட்டிற்கு கடத்தி இருக்கிறார்கள் என்று முன்பே கூறினார் சுவாமி.

இதனை காங்கிரஸும் சோனியாவும் இதுவரை மறுக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு காரணமாக ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் முழுவதும் செய்தது சோனியா குடும்பம்.

ராஜாவை கருவியாக பயன்படுத்தியுள்ளனர்.

சிதம்பரம் நிதிஅமைச்சராக காங். சோனியாவுக்கு சாதகமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்வதற்கு கையெழுத்து போட்டு இருப்பது சாத்தியமே.

தி.மு.க, சோனியாவுக்கு சாதகமாக செயல்படுவதனால் தான் கலைஞர் டிவிக்கு கை மாறிய ரூபாய் 200 கோடியை மட்டுமே சி பி ஐ பிடித்து கொண்டு தி.மு.க மீது நாடகமாடுகிறார்கள்.

இப்பொழுது சிதம்பரம். அடுத்தது யார்?.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் 
மீண்டும் தர்மம் வெல்லும் என்றால்
இன்னும் போக போக சோனியாவும் மாட்டுவாரா?.

Dec 16, 2011

முல்லைப் பெரியாறு கேரளத்தின் உள்நோக்கங்கள்


முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.

அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல, இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய் கனிகள், முட்டை, இறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.

தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!

முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும்  126 மில்லியன் கன மீட்டர்தான்  எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?
தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை.

இடுக்கி அணைகூட நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம், முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால், தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால், அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது

அணையின்நீர்மட்டத்தை142அடியாகஉயர்த்தஉச்சநீதிமன்றம் 
 உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது.
''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.

ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?

Dec 12, 2011

திருந்துவார்களா ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாமரத் தமிழர்கள்.

சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்று விளங்கவில்லை.

தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்களில் பலர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே. தற்போதைய முதலமைச்சரும், எதிர்கட்சித்தலைவரும்கூட சினிமா பின்னணி கொண்டவர்கள்தான். பாட்சா படவெற்றிவிழாவில் ரஜினிகாந்த் பேசிய மேடைப்பேச்சை பரபரப்பாக்கி அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே ஊடகங்கள் பகை வளர்த்தது ஒருபக்கம் என்றால், இவரும் தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' என்ற பெயரில் ரசிகர்களை உசுப்பேற்றினார். இவரது வசனங்களை நம்பிய ரசிகர்கள் பலர் ரஜினி அரசியலுக்கு வந்து தங்கள் துயரங்களைத் தீர்த்து வைப்பார் என்று மனதார நம்பினர்.


சிலமாதங்களுக்கு முன்பு 'ராணா' படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிப்படைந்ததால் சிங்கப்பூரில் சிகிச்சைக்குச் சென்றுவந்ததை பத்திரிக்கைகளும், சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் மணிக்கொருமுறை தலைப்புச் செய்திபோல் வெளியிட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட எவரும் பூரண சுகமடைய விரும்புவது மனித இயல்பே என்றாலும் அவரைவிட கடுமையான நோயுற்றவர்களைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள் ரஜினிக்குக் கொடுத்த அசாதாரண விளம்பரங்களை அவரே விரும்பியிருக்க மாட்டார்.


அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்துவந்த கன்னடமொழி பேசுபவராக இருந்தபோதிலும் திரைப்படங்களில் மட்டும் தமிழர்களைப் போற்றும் புண்ணியவான் இவர். தமிழகத்திற்குக் கர்நாடகம் காவிரி தண்ணீரைத் தரமறுத்தை எதிர்க்கும் முகமாக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, திரைத்துறையினரும் நெய்வேலியில் உண்ணா விரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டினர். கன்னடரான ரஜினிகாந்த் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்தவுடன், சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக்காசுகளாக தமிழகத்தில் நடித்துச் சேர்த்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்துள்ளதைக் காப்பாற்றபோட்ட நாடகமே அது என்பதை எந்த ஊடகமும் சொல்லவில்லை.


காவிரி பிரச்சினைக்கும் அனைத்து நதிநீர் பிரச்சினைக்கும் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டுமென்று தனது பங்காக ஒரு கோடி ரூபாயைத் தானம் செய்தவர், தற்போதைய முல்லை பெரியாறு பிரச்சினை இருமாநில மக்களிடையேயான பிரச்சினையாக்கப்பட்டபோதிலும் வாய்திறக்காததன் மர்மம் என்னவோ? இந்தக்காலத்தில் ஒரு கோடி ரூபாயைக் வழங்க முன்வந்ததே பாராட்டப்பட வேண்டியதுதான் என்று சொல்பவர்கள், அரசுக்கு இவர் கொடுக்கவேண்டிய கோடிக்கணக்கான வருமான வரிபாக்கியை அறிவார்களோ என்னமோ?!


சென்னையிலும் தமிழகத்திலும் தாய்ப்பாலுக்கு வழியில்லாத குழந்தைகள் லட்சக்கணக்கிலிருக்கும்போது இவரது கட்அவுட் பிம்பங்களுக்குக் குடம்குடமாக இவரது ரசிகர்கள் பால் வார்த்ததை என்றேனும் கண்டித்துள்ளாரா? பஞ்ச் டயலாக்கை நம்பி அதிமுக, பாமகவினருடன் பகையாளிகளாகிப்போன இவரது கட்சிசார்பற்ற ரசிகர்களைப்பற்றி கவலைப்படாமல் "நான் யானையல்ல; குதிரை" என்று வசனம்பேசி அதிமுகவை மட்டும் சமாதானப்படுத்தியதன் பின்னணியில் ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சி இல்லாமலில்லை!


முன்பு முதல்வர் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டியதையும், இந்துமத கடவுளர்கள் படங்களை வேறுநோக்கத்திற்காக சித்தரிப்பதையும் கண்டித்து குரலெழுப்பிய சங்பரிவாரங்கள், இன்று பிறந்தநாள் கண்ட ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் வெளியிட்ட சிவபெருமான் விளம்பரத்தை ரஜினி கண்டிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏனென்று பாமர ரசிகர்கள் விளங்கும்வரை, இவர்போன்ற சூப்பர் ஸ்டார்கள் தமிழனை அரசியலிலும் வாழ்க்கையிலும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள். இது தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!.

நன்றி
இந்நேரம்.காம்

Dec 10, 2011

முல்லைபெரியாறு அணையும் அற்பதனமான அரசியலும்


சிவகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் முல்லை ஆறும், சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் பெரியாறும் ஓர் இடத்தில் கலக்கும் இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதுதான், முல்லைப் பெரியாறு அணை. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ஜான் பென்னி குக். 1886-ல் சென்னை ராஜதானி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதனால் ஓர் ஆண்டுக்கு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் 8,000 ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை தமிழகம் கேரளாவுக்குக் கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பொறியாளர்கள் ரியாஸ், ஸ்மித் லோகன்பால் இவர்களோடு தலைமைப் பொறியாளர் பென்னி குக் முன்னிலையில் 1886-ம் ஆண்டு அணை கட்டத் தொடங்கி 10-10-1895 அன்று திறப்பு விழா நடந்தது.

இந்த அணை கட்டுவதற்கு ஏகப்பட்ட பொருட் செலவும் உயிர் சேதமும் ஏற்பட்டது. காலரா, பூச்சிக் கடி, யானை மற்றும் புலி போன்ற வன விலங்குகளால் 422 பேர் கொல்லப்பட்டதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகிறது. அணையைக் கட்டிய கிழக்கிந்திய கம்பெனி போதுமான நிதி இல்லை என்று கைவிட்ட நிலையில், பென்னி குக்,  'நான் பிறந்தது ஒரு முறைதான். அதற்குள் என் லட்சியத்தை அடைவேன்என்று தன்னுடைய நாட்டுக்குச் சென்று மனைவியின் நகைகள், சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுப் பணம் கொண்டுவந்து அணையைக் கட்டி முடித்தார்.  

அதனால்தான் அவரது பெயரை.. லோகன், லோகி, லோக நாயகன், லோகநாயகி, பென்னிகுக் என்று இப்பகுதி மக்கள் சூட்டுகிறார்கள். அவர்கள் உருவில் பென்னி குக் இன்றும் வாழ்கிறார். கடைகள், வீதிகள், மன்றங்களுக்கும் அவர் பெயர் வைத்து நன்றி செலுத்துகிறார்கள். நீர் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்.

சமீப காலம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. '999 ஆண்டு ஒப்பந்தம் பழமையானது. அதனால் புதிய ஒப்பந்தம் போடவேண்டும். புதிய அணை கட்ட வேண்டும்என்று கேரள அரசு 2006-ம் ஆண்டு சட்டசபையில் கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு மசோதாவை உருவாக்கியது. அதனால், தமிழக அரசு வழக்கமாக கொடுக்கும் 2.40 லட்சம் ரூபாயைப் பல கோடிகளாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டினால் மின்சாரம், சுற்றுலா பெருகும் என்றும் யோசித்தது கேரள அரசு.


தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர் பாயும் வழித்தடங்களில் சுமார் 26 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கேரளா மக்களுடையது. இது வரை தமிழகம் முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக 27 கோடியே 8 லட்சம் ரூபாய் கட்டியுள்ளது. இது போக கேரள மின்சாரத்திற்கு உத்தேசமாக சுமார் 116 கோடி செலவழித்துள்ளது. 1961 முதல் 2001 வரை கேரள போலீஸாருக்கு 1:4 என்ற விகிதத்தில் 50 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் சம்பளத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.


1979-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் அணையில் விரிசல் என்று கூறியது கேரள அரசு. அதனால் அணையைப் பலப்படுத்த தமிழக அரசு சுமார் 26.75 கோடி செலவிட்டது.


இப்போது விரிசல், நில நடுக்க ஆபத்து என்று கேரள மக்கள் இடையே வீண் பீதியைக்கிளப்புவதற்குக் காரணம் இருக்கிறது. அது, கேரளாவில் தற்போது நிகழும் அரசியல் சூழ்நிலைதான். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) 68 இடங்களையும் கைப்பற்றினார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியின் உம்மண் சாண்டி முதல்வரானார்.


காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் கடந்த அக்டோபரில் இறந்ததால், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 71 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக 70 என்று பலம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடது சாரிகள் சம பலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் உம்மண் சாண்டி, இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார். இதற்கு எதிர்ப்பு அரசியல் பண்ணவே, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்,  

நடக்கவே முடியாத நிலையிலும் வந்து அணையைப் பார்வை​யிட்டு, 'கேரள மக்களின் உயிருக்​கும் உடைமைக்கும் பாதிப்புஎன்று பொய்ப் பிரசாரம் செய்தார். அடுத்த நாளே, கேரள சட்டசபை பேச்சாளர் கார்த்திகேயன், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் வந்து அணையைப் பார்வையிட்டு, 'அணையில் நீர்க் கசிவு, விரிசல், நிலநடுக்கம்என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் அணை வீக் இல்லை. கேரள அரசியல் கட்சிகள்தான் வீக்.


முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை தெரியும் என்பதால், கேரள உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம், 'அணை உடையப்போகிறது என்கிறீர்கள், மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியது. அப்போது, 'அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்என்று பதில் தந்தது கேரள அரசு. 'அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள்.


முல்லைப் பெரியாறு அணை இரு புறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது. அதனால் அணை உடைந்தால், உப்புத் துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப் பகுதியில் 580 குடும்பங்களும் மட்டுமே பாதிப்பு அடையும். அந்த இரண்டு கிராமங்களுக்கும்கூட, பாதுகாப்பாக 36 அடி உயரத்தில் கரை கட்டப்பட்டு உள்ளது. இந்த உண்மையை எடுத்துக்கூறிய பொறியாளர்களையும், அங்கு உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்பு அணை உடைவது போலவும், வெள்ளத்தால் மக்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும் குறும் படம் இயக்கினார்கள். இப்போது அதையே டேம் 999 என்ற பெயரில் படம் எடுத்து, கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.


ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 236 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ காய்களுக்கு 86 லிட்டரும் ஒரு கிலோ பழத்துக்கு 112 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கேரளத்தில் இருந்து ஓர் ஆண்டிற்கு 12 முதல் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வாங்குகிறது. ஆனால், இங்கே உற்பத்தி செய்த 3.26 லட்சம் டன் காய்கள், பழங்களை ஆண்டுதோறும் கேரளாவுக்கு அனுப்புகிறது. 2,000 மெட்ரிக் டன் பால் அனுப்புகிறது. இது வாங்கும் தண்ணீரைவிட அதிகம். 

ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்றால் 48% உணவுப்பொருளை கேரளாவுக்கு அனுப்புகிறது தமிழகம். ஆனாலும் தமிழன் வஞ்சிக்கப்படுவதுதான் வேதனை''

முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக குரல் கொடுத்து வரும் 
விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ்.

Nov 16, 2011

பெட்ரோல் விலை குறைப்பு காங்.அரசின் கயமைத்தனம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.22 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 1.82 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.இந்த ஏற்றப்பட்ட விலை தான், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏற்றப்பட்ட விலையை, எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தது இல்லை கடந்த 33 மாதங்களில் தற்போது தான், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஸ்திரத் தன்மையடைந்துள்ளதாலும், பெட்ரோல் விலைகுறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஆனால் இது ஓர் அப்பட்டமான பொய். பெட்ரோல் விலையை குறைக்க கூறி பல அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள்,எதிர்கட்சிகள் என பலரும் கேட்டபோது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்த மத்திய காங்.அரசு இப்போ திடீரென குறைத்துள்ளது. இது மட்டுமா முந்தாநாள் பிரதமர் மன்மோகன் சிங், விமானத்தில் கொடுத்த பேட்டியில் கூட பெட்ரோல் விலையை குறைக்கமுடியாது என்று உறுதியாய் கூறினார்.ஆனால் அடுத்த நாளே பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.           

காரணம்.1

பெட்ரோல் விலையை குறைக்கவில்லை எனில் தங்கள் ஆதரவு வாபஸ் என  மம்தாவின் திரிணமுல் போன்ற கூட்டணிக் கட்சிகள் காங்.அரசுக்கு கொடுத்த நெருக்கடியால் எங்கே பெட்ரோல் விலையை குறைக்கவில்லை எனில் தங்கள் ஆட்சியின் டவுசர் டர்ர்ர் ஆகிவிடுமோ என்ற பயமே இதற்கு காரணம்

காரணம்.2

சமீபத்தில் கேரளா ஹைகோர்ட் ஆயில் நிறுவனங்களின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய சொன்னதும் எண்ணெய் நிறுவனங்களின் டிக்கியில் நெருப்பை வைத்தது போல அலற ஆரம்பித்தன. இதுவரை எண்ணெய் நிறுவனங்களும், ரிலையன்ஸ் நிறுவனங்களும் மக்களிடம் விலையை ஏற்றி அடித்த பகல் கொள்ளை உறுதியாகி விட்டதால் இவ்வளவு நாள் அடித்த கொள்ளை  எங்கே போனது, யாருக்கு போனது. இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் எண்ணெய் நிறுவனங்கள் மாட்டிகொண்டுள்ளன.

இத்தனைக்கும் பிறகுதான் மீசையில் மண் ஒட்டவில்லை என சில பொய்யானான சில காரணங்களை கூறி நாடகம் போடுகிறது மத்திய காங்.அரசு.