May 16, 2010

''சுறா'' சூப்பர் பன்ச்-'காமெடிபீஸ்'


ர வர நம்ம இளையதளபதி விஜய் 'காமெடிபீஸ்'  மாதிரி ஆயிட்டே வர்றாரு...
அவரோட ஒவ்வொரு புதுப்படத்தோட ரிலீஸ் அப்பவும் சம்பந்தப்பட்ட படத்த பத்தி அநியாயத்துக்கு கிண்டல்,கேலி நிறைஞ்ச 'எஸ்.எம்.எஸ்'கள் பறக்குது.

அந்த வரிசையில அவரோட லேட்டஸ்ட் ரிலீஸ் ‘சுறா’ படத்தப் பத்தி எனக்கு வந்த சில சுவாரசியமான ‘எஸ்.எம்.எஸ்’ கள்...

* சுறா சூப்பர் பன்ச்:

புதுசு புதுசா முட்டை போட நான் ஒன்னும் ‘புறா’ இல்லடா...!!!

புரொடியூசருக்கு மொட்டை போட வந்த ‘சுறா’டா...!!! சுறா...

* ‘சுறா’ திரைவிமர்சன பஞ்ச் :

சுறா - கிழிஞ்சிபோன கிழவி’பிரா’...

* விஜய்யை பொருத்தவரை எல்லாமே காமெடி தான்.

'கில்லி'ன்னு சொன்னாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுவாரு...!!!

‘போக்கிரி’யில போலீஸ்னு சொல்லிட்டு வாட்ச்மேனா காட்டுவாங்க...!!!

‘அழகியதமிழ்மகன்’னு சொன்னாங்க கடைசி வரை அது யாருன்னே காட்டல...

இது கூட பரவாயில்லீங்க...’குருவி’ன்னு சொன்னாங்க ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல,

‘வேட்டைக்காரன்’ பாத்தா அதுல ஆட்டோக்காரனா காமிக்கிறாங்க...

சத்தியமா நான் டாக்டர் விஜய்யை கிண்டல் பண்ணலீங்க...

* ‘சுறா படம் எப்படி இருக்கு?
சண்டை- சூப்பர்,பக்கா
பாட்டு - கொய்யால சூப்பரோ சூப்பர்
டான்ஸ் - தூள்
இடைவேளை வரைக்கும் - செம ஸ்பீடு
இடைவேளைக்கு பின்னாடி - ச்ச... சான்சே இல்ல...

இப்படியெல்லாம் விஜய் ரசிகர்கள் உங்ககிட்ட சொல்லி படம் பாக்க சொல்வாங்க

நம்பாதீங்க மக்களே... மொத்தத்துல சொல்லப்போனா படத்துல ‘இன்டர்வெல்கேப்’ தான் சூப்பர்...!!! ........................................................................................................................................................................

1 comment:

goma said...

அப்படிப் போடு போடு ....