May 24, 2010

சாதனையாளர்..ரேஸில் ஜெயிக்கும் குதிரையிடம் என்ன ஸ்பெஷல்? குதிரை ரேஸ் பற்றிக் கேள்விபட்டு இருப்பீர்கள்தானே! ஓவ்வொரு குதிரையின் மீதும், அது முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைக் கணித்துப் பந்தயம் கட்டு வார்கள். அதாவது 10-க்கு 1 (10-க்கு ஒருமுறை வெற்றியடையும்). மிகக் குறைந்த பந்தய அனுமானங்களைத் தாண்டியும் சில குதிரைகள் சமயங்களில் ஜெயிக்கும். இப்போது ஒரு கேள்வி,

                                                     

ரேஸில் ஜெயிக்கும் குதிரையிடம் என்ன ஸ்பெஷல்?
குதிரை ரேஸ் பற்றிக் கேள்விபட்டு இருப்பீர்கள்தானே! ஓவ்வொரு குதிரையின் மீதும், அது முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைக் கணித்துப் பந்தயம் கட்டு வார்கள். அதாவது 10-க்கு 1 (10-க்கு ஒருமுறை வெற்றியடையும்). மிகக் குறைந்த பந்தய அனுமானங்களைத் தாண்டியும் சில குதிரைகள் சமயங்களில் ஜெயிக்கும். இப்போது ஒரு கேள்வி, 10-க்கு 1 என்ற கணிப்பை மீறி முதலாவதாக ஜெயிக்கும் குதிரை, இரண்டாவதாக வந்த குதிரையைக் காட்டிலும் பத்து மடங்கு வேகமாகவா ஓடி வந்திருக்கும்? 'fraction of a second' என்பார்கள். அதாவது, ஒரு நொடியின் நூற்றில் ஒரு பங்கு. எல்லைக் கோட்டை நெருங்கும் சமயம், அப்படியான ஒரு நூலிழை வித்தியாசத்தில் மூக்கு நீட்டி முந்தியிருக்கும் ஒரு குதிரை. அது வெற்றியாளன்! 2008 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை அள்ளியவர் மைக்கேல் பெல்ப்ஸ். அவர் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சலில் வென்றதன் வித்தியாசம் ஒரு நொடியின் நூற்றில் ஒரு பங்கு. வெற்றியாளன்! தினமும் நீங்களும் ஏதோ ஒரு பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப்பீர்கள்தான். உங்கள் போட்டியாளரைக் காட்டிலும் நீங்கள் 10 மடங்கு அதிகமாக உழைக்கத் தேவை இல்லை. ஆனால், அந்த 'நொடியின் நூற்றில் ஒரு பங்கு' வித்தியாசம் காட்ட வேண்டிய இடத்தில் ஸ்கோர் செய்வது அவசியம்!



சிறப்புகள்... பலன்கள் என்ன வித்தியாசம்?
உங்களுக்கு ஒரு காரியம் வேண்டி ஒருவரைச் சந்திக்கிறீர்கள். அவரைச் சமாதானப்படுத்தினால், உங்களுக்குச் சில லாபங்கள் நிகழலாம். இந்தச் சமயத்தில் அவரை எப்படி உங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கவைப்பீர்கள்? இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்...
மைக்கேல் ஃபாரடே எலெக்ட்ரிக் மோட்டாரைக் கண்டுபிடித்த தருணம். தொழிற் புரட்சிக்கு முதற்புள்ளி அதுதான். ஆனால், அந்த மோட்டாரை வணிகரீதியாக மார்க்கெட்டிங் செய்ய ஃபாரடேவிடம் வசதி வாய்ப்புகள் இல்லை. உடனே, இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த மோட்டாரைத் தூக்கிச் செல்கிறார். பிரதமர் கிளாட்ஸ்டோன் அருகே மோட்டாரை வைத்துவிட்டு, அதன் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டார் ஃபாரடே. ஆனால், கிளாட்ஸ்டோன் கொஞ்சமும் ஆர்வம் காட்டாமல், 'எல்லாம் சரி... இதனால் என்ன பயன்? இது எந்தவிதத்தில் லாபம் அளிக்கும் என்பது எனக்குப் புரியவில்லை!' என்றார். ஃபாரடேவுக்குப் பயங்கர ஏமாற்றம். 'நான் எத்தனை வருட உழைப்பைக் கொட்டி இதைக் கண்டுபிடித்து இருக்கிறேன். 10 மனிதர்கள் 10 மணி நேரத்தில் முடிக்கும் வேலையை இந்த ஒற்றை இயந்திரம் ஒரு மணி நேரத்தில் முடிக்குமே. நாலு குதிரை சக்திகொண்ட இதன் விசை, திறன், தொழில்துறையில் ஏற்படுத்தவிருக்கும் புரட்சியைப்பற்றிய தெளிவில்லாத நீ எப்படி இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறாய்?' என்றெல்லாம் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்கவில்லை ஃபாரடே. மாறாக, 'இந்த இயந்திரம் நிச்சயம் தொழில்முனைவோர்களுக்கு அவசியத் தேவை. ஆயிரக்கணக்கில் வாங்கிக் குவிப்பார்கள். அந்த விற்பனையின்போது, நீங்கள் வரி விதித்தால் உங்களுக்கு ஏகப்பட்ட வருமானம் குவியும்!' என்றார் ஃபாரடே. உடனே, கிளாட்ஸ்டோனின் கண்களில் பளீர் மின்னல். 'எலெக்ட்ரிக் மோட்டாரைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே' என்று வரலாற்றில் ஃபாரடேவை இடம் பெறவைத்தது அவரது அணுகுமுறைதான்.



உள்ளங்கை அகல சினிமா டிக்கெட்டின் அழகில் மயங்கி நாம் அதை விலை கொடுத்து வாங்குவது இல்லை. அந்த சினிமாவை ரசிப்பதன் மூலம் கிடைக்கும் உற்சாகம் அல்லது ரிலாக்சேஷன்தான் டிக்கெட்டை வாங்கத் தூண்டும் காரணங்கள். அப்படி எந்த ஒரு பொருள் அல்லது சேவையின் சிறப்புகளை அடுக்குவதைக் காட்டிலும், நுகர்வோருக்கு அதனால் கிடைக்கும் பலனை வசீகர வார்த்தைகளில் விவரியுங்கள். நிச்சயம் நீங்கள் பலனடைவீர்கள்!
விற்பனையாளர் டு சாதனையாளர் ஆக வாழ்த்துக்கள்!

No comments: