Jul 9, 2010

மீனவர் படுகொலைகருணாநிதி அறிக்கை

முதல்வர் கருணாநிதி அறிக்கை: நாகை மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால், செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாகவும் செய்தி வந்துள்ளது. இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவது, இது முதல் முறையல்ல; தொடர்கதையாக உள்ளது. தமிழக மீனவர்களின் இந்த துயர் நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கை விடுத்தும், மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனே தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரமும், தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


**.மீனவர்களைதானே கொலை பண்ணுறாங்க ,நிர்வாணமா நிக்க வைக்கிறாங்க... இல்ல இந்த பிரச்னை நேற்று மட்டுமா நடக்குது ... என்னமோ புதுசா பேசுறிங்க இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவது, தொடர்கதையாக உள்ளது.உங்களுக்கே நல்லா தெரியுது.  காங்கிரஸ் அரசு தமிழர்களை பற்றியே கவலை படுவதில்லை. இதிலே தமிழக மீனவர்கள் தாக்க பட்டால் என்ன , சுட்டு கொல்லப்பட்டால் என்ன.
இதுவரைக்கும் அறுநூறு பேருக்கும் மேல் சுட்டு கொல்லப்பட்டிருப்பார்கள், ஆயிரக்கணக்கில் காயம் மற்றும் நிர்வாண படுத்தப்பட்டு அடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாம் நீங்கள் வாழும் காலத்திலேயே நடந்தது. நடக்கிறது. நடக்கும்.

ஆனால் காங்கிரஸ் ஒரு முறை கூட இலங்கை அரசையோ இராணுவத்தையோ கண்டித்தது இல்லை. ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா,ஏ.கே.அந்தோணிக்கும் இந்த சிங்கள கடற்படை அட்டூழியம் தெரியாதா என்ன ...! எதற்கு கடிதம் ...? தமிழன் என்றால் அவ்வளவு கேவலம் மன்மோகன் சிங்கக்கு கடிதம் அனுபுறாரு.. அவர் அதை படிசிட்டு சோனியாவிடம் கேட்டு பதில் போடுவாரு...எதற்கு ஆவேசம் கொள்ளவேண்டும்? ஒரு நாலு நிமிஷம் உண்ணாநோன்பு இருங்கள், இலங்கை ராணுவம் ஆடிபோய் நம் மீனவரை தாக்குவதை நிறுத்தும். ஒரு பந்த் நடத்துங்கள், இலங்கை ராணுவம் செயலிழந்துவிடும். வாய் சொல் வீரர் திருமாவளவனை விட்டு ஒரு கண்டன அறிக்கை விடசொல்லுங்கள், இலங்கை ராணுவம் கிடுகிடுத்துவிடும். சொக்க தங்கம் சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், இலங்கை ராணுவம் ஆடிபோய்விடும். முரசொலியில் மனம் உருகுமாறு  உடன் பிறப்புக்கு ஒரு கவிதை எழுதுங்கள், இலங்கை ராணுவம் மனம் மாறி நம் மீனவரை தாக்குவதை நிறுத்தும் .

  மீனவர்கள் என்ன நம்ம குடும்ப உறுப்பினர்களா ?... காகிதம் எடுப்போம் ....கடிதம் வரைவோம் ..... காரியம் முடிப்போம்.. பதவி என்றால்தானே, படையுடன் டெல்லி நோக்கி பயணம் செய்வோம்... காத்திருந்து பதவியுடன் விடை பெற்று தமிழகம் அடைவோம். நாம் ஒரே கொள்கை - பதவி பதவி பதவி .. எவன் எக்கேடுகேட்டால் நமக்கு என்ன ??.. என்ன கரெக்ட் தானே இதுக்கு போய் ரொம்ப டென்ஷன் ஆகாதிங்க

No comments: