என்னை குறை கூறியும், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினால் கூட, இது உண்மையா என ஆராய்ந்து தவறு என்றால் திருத்திக் கொள்பவன் தான் இந்த கருணாநிதி,'' நான் யாரிடத்திலும் மன வருத்தப்படுபவன் அல்ல. என்னை குறை கூறியும், செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினால் கூட, இது உண்மையா என ஆராய்ந்து தவறு என்றால் திருத்திக்கொள்பவன் தான் இந்த கருணாநிதி என்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்..
எந்த தவறை சுட்டி காட்டுவது?
நீங்கள் செய்யும் அனைத்துமே தவறு தான், இருந்தாலும் ஒரு சிலவற்றை சுட்டி காட்டுகிறேன்,உங்களிடமும் , ஆட்சியிலும் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒய்வு பெறவேண்டிய வயதில் வழி விடாமல் இருப்பது தவறு
லஞ்சம் வாங்குவது ஊழல் செய்வது தவறு
தன் குடும்பத்தார்களை முன்னிறுத்தி அதன் மூலம் பயன்பெறுவது தவறு ,
தனது பிள்ளைகளுக்கு கட்சியில், ஆட்சியில் பதவி அளிப்பது தவறு
குடும்ப அரசியல் தவறு, அதை நிறுத்துங்கள்,
இலவசம் தவறு அதை நிறுத்துங்கள்
கள்ள வோட்டு போடுவது மிகவும் தவறு,
வோட்டுக்கு பணம் கொடுப்பது தவறு,
வாய் சவடால் மிக பெரிய தவறு, அதை நிறுத்துங்கள்.
மக்கள் வரி பணத்தை வீண் அடிப்பது தவறு,
ஸ்பெக்ட்ரம் ஊழல் மிக பெரிய தவறு,
அதிகாரி உமாசங்கரை பழி வாங்கும் நடவடிக்கை பெரிய தவறு,
தமிழ் என்ற போர்வையில் நீங்கள் அடிக்கும் கூத்து மிக பெரிய தவறு,
நீங்கள் வைத்துள்ள சட்ட விரோதமான சொத்துக்கள் தவறு
இதையெல்லாம் விட பொய் கூறுகிறீர்களே, அதுவும் தவறு தான், ,
பேய், பூதம், பிசாசு, இதன் மொத்த உருவமே வாயை மூடு. என்று பேசியது தவறு
வைரம் பட நாயகியே உனக்கு இறுதி எச்சரிக்கை என்று பேசியது தவறு
இந்துக்களை திருடர்கள் என்று அர்த்தப்படுத்தி பேசியது தவறு .
ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஜில் படித்து ராமர் பாலத்தை கட்டினார் என்று பேசியது தவறு .
இப்படி பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தாது என்று நினைத்ததும், பேசியதும் தவறு.
தமிழ்நாட்டில் எந்த ஒரு தலைவரையும் நீங்கள் விட்டுவைக்கவில்லை, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, கீ.வீரமணி,சங்கரையா, தா.பாண்டியன், வரதராஜன், நல்லகண்ணு,இப்படி உங்களால் புண்பட்டவர்களை கேட்டுப்பார்த்தால் தான் உங்கள் லட்சணம் என்னவென்று தெரியும்.
மற்ற மதத்தினருக்கு அவர்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னதுண்டா?இதுதான் உமது கொள்கை இது மிகவும் தவறு,
ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசும் பேச்சா இதெல்லாம்?
எந்த தவறை நீங்கள் திருத்திகொண்டீர்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ?
நிஜமாகவே திருந்தத் தயாராக இருந்தால், பெரிய மனத்துடன் திருத்திக் கொள்வீர்களா?
Tweet | |||||
1 comment:
சமீபத்தில் நான் மேய்ந்த இடுகைகளில் மிகச் சிறந்தது இது ;-)
அடுத்த முறையும் இதையே தான் சொல்வார் முதல்வர், கேள்வி பட்டியல் மட்டும் நீண்டிருக்கும்...
இது தமிழகத்தின் தலையெழுத்து ;-(
Post a Comment